Prithviraj Sukumaran: படப்பிடிப்பின் போது பிரபல நடிகருக்கு பெரும் விபத்து..! அச்சச்சோ என்னாச்சு?

Prithviraj Sukumaran Accident: பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜிற்கு படப்பிடிப்பின் போது விபத்து நேர்ந்துள்ளது. அவர் நிலை தற்போது எப்படி உள்ளது?   

Written by - Yuvashree | Last Updated : Jun 26, 2023, 05:56 AM IST
  • தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் பிருத்விராஜ்.
  • ‘விளையாத் புத்தா’ எனும் படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்கிறார்.
  • இந்த படப்பிடிப்பின் போது இவருக்கு விபத்து நேர்ந்துள்ளது.
Prithviraj Sukumaran: படப்பிடிப்பின் போது பிரபல நடிகருக்கு பெரும் விபத்து..! அச்சச்சோ என்னாச்சு?  title=

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமானவர் பிருத்விராஜ். இவர், “விளையாத் புத்தா” என்ற ஒரு மலையாள படத்தில் நடித்து வந்தார்.  இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இவருக்கு பலத்த அடிப்பட்டுள்ளது. 

விளையாத் புத்தா:

நடிகர் பிருத்விராஜ், முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் படம் விளையாத் புத்தா. இந்த படத்தில் இவர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மரையூர் என்ற இடத்தில் நடைப்பெற்று வந்தது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சண்டை காட்சியினை படக்குழுவினர் நேற்று ஷூட்டிங் செய்தனர். அக்காட்சியில் பிருத்விராஜ் மிகவும் உயரம் அதிகமான இடத்தில் இருந்து தொங்கியபடி சண்டை போடுவது போல அக்காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருந்தது. இதில், பிருத்வி மிகவும் ரிஸ்க் எடுத்து நடிக்க வேண்டியிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக பிருத்விராஜிற்கு விபத்து நேர்ந்துள்ளது. இதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனே இவரை கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு நாளை முக்கிய அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட உள்ளது. 

மேலும் படிக்க | Virender Sehwag: ஆதிபுருஷ் படத்தை பங்கமாக கலாய்த்த பிரபல கிரிக்கெட் வீரர்..!

இறுதிக்கட்டத்தில் இருந்த படப்பிடிப்பு..

மலையாளத்தில் பிரபல இயக்குநராக இருந்த சாச்சியின் கனவு படம், விளையாத் புத்தா. அவர் கடந்த 2020ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார். இந்த நிலையில் இயக்குநர் ஜெயன் நம்பியார் இந்த படத்தை டைரக்டு செய்து வருகிறார். பல நாட்களாக இந்த படத்தின் ஷூட்டிங் நடைப்பெற்று வந்தது. மரையூர் பகுதியில் கடைசி 50 நாட்கள் படப்பிடிப்பினை படக்குழு நடத்தி கொண்டிருந்தது. இந்த நிலையில்தான் எதிர்பாராத விதமாக பிருத்வி ராஜ்ஜிற்கு அடிப்பட்டுள்ளது. விளையாத் புத்தா படத்திற்காக மலையாள ரசிகர்கள் பலர் நீண்ட நாட்களாக காத்துக்கொண்டுள்ளனர். இந்த நிலையில் பிருத்விராஜ்ஜிற்கு அடிப்பட்டுள்ளதால் இதன் படப்பிடிப்பு மீண்டும் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் பலர், பிருத்விராஜ் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். 

பிருத்விராஜ் நடித்த படங்கள்…

பிருத்விராஜ் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். 2002ஆம் ஆண்டு வெளியான நந்தனம் எனும் படம் மூலம் அறிமுகமானார். 2006 ஆம் ஆண்டு தமிழில் வெளீயான கணா கண்டேன் படத்தில் நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகமானார் பிருத்வி.தமிழில் 2007ஆம் ஆண்டு வெளியான மொழி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அப்படத்தில் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத புதிவித ஆணாக வந்திருந்தார், பிருத்வி. பிறகு தமிழில் சத்தம் போடாதே, கண்ணாமூச்சு ஏனடா போன்ற படங்களில் தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார். பின்னர் நினைத்தாலே இனிக்கும், ராவணன், காவிய தலைவன் போன்ற பல படங்களில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தார். 

மேலும் படிக்க | ‘எங்களுக்கு எண்டே கிடையாது..’ போட்டி போட்டு வரிசையாக படங்களில் நடிக்கும் கமல்-ரஜினி..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News