நினைத்தேன் வந்தாய்: சுடரோடு சேர்த்து 4 கோடி.. வேலுவிடம் டீல் பேசி முடித்த மனோகரி

Ninaithen Vandhai Today's Episode Update: சுடரோடு சேர்த்து 4 கோடி.. வேலுவிடம் டீல் பேசி முடித்த மனோகரி, நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 16, 2024, 02:36 PM IST
  • நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட் .
  • மனோகரி பயந்து நடுங்குவது போல் நடிக்கிறாள்.
  • வேலுவிடம் டீல் பேசி முடித்த மனோகரி.
நினைத்தேன் வந்தாய்: சுடரோடு சேர்த்து 4 கோடி.. வேலுவிடம் டீல் பேசி முடித்த மனோகரி title=

Ninaithen Vandhai Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் இந்து ஆசிரமத்திற்கு காரில் செல்ல லாரி ஒன்று துரத்த இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது இந்துவை பாலோ பண்ணும் லாரி கார் மீது மோதி ஏற்படும் விபத்தில் இந்து உயிரிழக்கிறாள். வேலு இந்த பிளாஷ்கட் கதையை சொல்லி முடித்ததும் மனோகரி பயந்து நடுங்குவது போல் நடிக்கிறாள். இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லிடாத என்று கெஞ்சுவது போல் கெஞ்சி கடைசியில் சிரித்து உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்க என்று சொல்கிறாள். 

அதுமட்டுமின்றி பதிலுக்கு வேலு ஸ்டேஷனில் வைத்து ஒருவனை கொன்ற விஷயத்தை உடைக்கிறாள். அடுத்ததாக உனக்கு தேவை சுடர், எனக்கு தேவை வேலு, நான் சொல்ற மாதிரி செய்தால் சுடரும் உனக்கு கிடைப்பா கூடவே நாலு கோடி ரூபாய் பணமும் கிடைக்கும் என்று டீல் பேசி வேலுவை தனது வழிக்கு கொண்டு வருகிறாள். 

 

அதனை தொடர்ந்து எழிலை டிஸ்ஜார் செய்து வீட்டிற்கு கூட்டி வர மனோகரி அவனை கவனித்து கொள்கிறாள். சுடர் எழிலுக்காக சமைத்து நேரடியாக கொடுக்க முடியாது என்பதால் காவியாவிடம் உனக்கு ஹெட் செட் வாங்கி தரேன் என்று ஐஸ் வைத்து அவள் மூலமாக எழிலுக்கு சாப்பாடு கொண்டு போய் கொடுக்க வைக்கிறாள். 

மேலும் படிக்க | தொடர்ச்சியாக விவாகரத்து வாங்கும் தனுஷின் நண்பர்கள்! முழு லிஸ்ட் இதோ..

அதன் பிறகு ஹாம் ஒர்க் செய்து கொண்டிருக்கும் கவினிடம் உன்னுடைய ஹாம் ஒர்க் எல்லாத்தையும் முடித்து தரேன் அப்பாவுக்கு மாத்திரை கொடுத்துட்டு வா என்று சொல்ல அவன் நோ சொல்ல சுடர் ப்ளீஸ் டா என்று கெஞ்சுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பட்டியலின பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய கார்த்திக் குமார்?! லீக் ஆன ஆடியோ…

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News