“ரொம்ப மோசம்!” லியாே பட பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனம்..!

Leo Badass Lyric Song: லியோ படத்தின் Badass பாடல் தற்போது வெளியாகியுள்ளது, இதற்கு ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.  

Written by - Yuvashree | Last Updated : Sep 28, 2023, 07:01 PM IST
  • லியோ படத்தில் இடல் பெற்றுள்ள Badass பாடல் வெளியாகியுள்ளது.
  • இதற்கு ரசிகர்கள் பலவகையான விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.
  • லியோ இசை வெளியீட்டு விழா நடப்பதாக இருந்த நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
“ரொம்ப மோசம்!” லியாே பட பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த விமர்சனம்..!  title=

விஜய் ஹீரோவாக நடித்துள்ள லியோ படத்தின் Badass பாடல், வெளியாகியுள்ளது. இந்த பாடல் குறித்து பல ரசிகர்கள் ஒவ்வொரு வகையிலான விமர்சனங்களை கொடுத்துள்ளனர்.

லியோ Badass பாடல்:

லியோ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கான பாடல், LeoDass-Badass. இந்த பாடலை இசையமைப்பாளர் அனிருத் பாடியுள்ளார். லிரிக்கல் வீடியாேவாக வெளியாகியுள்ள இந்த பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்துள்ள ரியாக்ஷன் என்ன தெரியுமா..? 

ரசிகர்கள் விமர்சனம்:

“ரொம்ப சாதாரணமா இருக்கு..”

லியோ பாடலை பார்த்த ஒரு ரசிகர், பாடல் மிகவும் நார்மலாக இருப்பதாக ஒரு ரசிகர் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இந்த பாடலை படத்துடன் சேர்த்து பார்க்கும் போது கண்டிப்பாக மாஸாக இருக்கும் என்றும் அந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார். 

“ரொம்ப மோசம்..”

லியோ Badass பாடல், மிகவும் மோசமாக இருப்பதாக ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார். 

அந்த ட்வீட்டை பல ரசிகர்கள் ஆமோதித்தும் உள்ளனர். 

மேலும் படிக்க | 'லியோ' படத்தில் தளபதி விஜய்யுடன் நடிக்கும் ரியல் சிங்கம்! வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!

பாடல் வரிகளுக்கு வரவேற்பு..! 

லியோ பாடலின் வரிகளுக்கு ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். இதில், “உன் வாலை சுருட்டி வெச்சிக்கோ..பல பஞ்சயாத்த பாத்தவன்..” போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வரிகளை மட்டும் ஸ்கிரீன் ஷாட் செய்து அதை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பதிவேற்றி வருகின்றனர். 

இசை வெளியீட்டு விழா:

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 30 ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதிகப்படியான ரசிகர்கள் இசை வெளியீட்டு விழா டிக்கெட்டுகளுக்காக கேட்டதால் விழாவை நடத்த முடியாது என்று லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. 

ரசிகர்கள் ஏமாற்றம்..

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ரசிகர்கள் பலர் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், படக்குழுவின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விஜய், தனது படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் தனது படம் குறித்து பேசுவதை தாண்டி, குட்டி ஸ்டோரி கூறுவது, அரசியல் கருத்துகள் பேசுவது என்றிருப்பார். இது ரசிகர்களுக்கு விஜய்யிடம் பிடித்த விஷயமாக இருந்தது. ஆனால், இந்த முறை அது இல்லாமல் போனதால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். 

மேலும் படிக்க | இதற்காக தான் லியோ ஆடியோ லான்ச் நடைபெறவில்லை! பரபரப்பு தகவல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News