‘அன்பே வா’ படத்திற்காக எம்.ஜி.ஆர் வாங்கிய சம்பளம்! அந்த காலத்திலேயே அத்தனை லட்சமா!

MGR Salary For Anbe Vaa : மறைந்த முன்னாள் முதலமைச்சரும் நடிகருமான எம்.ஜி.ஆர், அன்பே வா படத்திற்காக வாங்கியிருந்த சம்பளம் குறித்த விவரம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : Apr 27, 2024, 05:34 PM IST
  • அன்பே வா படத்தில் ஹீரோவாக நடித்த எம்.ஜி.ஆர்
  • எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?
  • அந்த காலத்திலேயே அவ்வளவு பெரிய தொகை!
‘அன்பே வா’ படத்திற்காக எம்.ஜி.ஆர் வாங்கிய சம்பளம்! அந்த காலத்திலேயே அத்தனை லட்சமா! title=

MGR Salary For Anbe Vaa : தமிழ் சினிமாவில், இனி எத்தனை கோடி நடிகர்கள் வந்தாலும் யாராலும் நிரப்ப முடியாத இடத்தை பிடித்தவர் எம்.ஜி.இராமச்சந்திரன். 1950களில் தமிழ் சினிமாவின் ஒன் அண்ட் ஒன்லி ஹீரோவாக இருந்தவர் இவர். 1936ல் வெளியான ‘சதி லீலாவதி’ படத்தில் முதன்முதலாக நடித்த இவர், அதற்கு சில வருடங்கள் கழித்துதான் பெரிய ஸ்டாராக மாறினார். 

தமிழ் திரையுலகின் சகாப்தம்!

மருதூர் கோபாலன் ராமச்சந்திரன் என்பவரைதான் நாம் எம்.ஜி.ஆர் என்று அழைத்து வருகிறோம். கேரளாவை சேர்ந்த இவர், தமிழ் குடும்ப பின்னணியை சேர்ந்தவர் ஆவார். நாடக கம்பெனியில் ஆரம்பித்த இவரது தீரா நடிப்பு தாகம், அவரை சினிமா வரை அழைத்து சென்றது. சிறு வயதில் பட்ட துன்பத்தால், சினிமாவில் நல்ல நிலைக்கு வந்தவுடன் அரசியலில் சேர வேண்டும் என்று ஆசைகொண்ட இவர், அதையே செய்தார். திமுக கட்சியில் முக்கிய உறுப்பினராக 5 வருடம் இருந்த பின்னர், அக்கட்சியில் இருந்து வெளியேறி தனியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். 

எம்.ஜி.ஆர் என்பவர், தமிழ் திரையுலகில் மட்டுமல்ல தமிழக அரசியலில்..ஏன் இந்திய அரசியலிலேயே ஒரு பெரும் சகாப்தமாக திகழ்ந்தவர் ஆவார். இவர் மீது ஒரு சிலர் தீராத பற்று கொண்டிருந்தனர் என்று கூறுவதை விட, தீரா பற்று கொண்டிருந்தனர் என்று கூறலாம். இன்றும், அதிமுக கட்சி மீது நெடு நாட்களாக பற்று கொண்டிருப்பவர்கள், எம்.ஜி.ஆரின் போட்டோவை அவர்களது வீட்டிலும், மாேதிரம் மற்றும் வாட்சில் கூட வைத்திருப்பர். அந்த அளவிற்கு, மக்கள் மனதில் இடம் பிடித்திருந்தவர் எம்.ஜி.ஆர்.

அன்பே வா திரைப்படம்:

அன்பே வா திரைப்படம், 1966ஆம் ஆண்டு வெளியானது. இதில், எம்.ஜி.ஆர் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சரோஜா தேவி நடித்திருந்தார். மறைந்த நடிகர் நாகேஷ், மனோரமா, எஸ்.ஏ.அசோகன், டி.ஆர். ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருந்தனர். ஏ.சி . திருலோசந்தர் இயக்கியிருந்த இந்த படத்தை, ஏ.வி.எம் நிறுவனம் தயாரித்திருந்தது. எம்.ஜி.ஆர் வழக்கமாக அந்த காலத்தில் ஆக்ஷன் கதைகளிலும் சண்டை காட்சிகளிலும் நடித்து வந்தார். ஆனால் அன்பே வா திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கதையாக இருந்தது. இதனால், எம்.ஜி.ஆரின் நடிப்பும் இதில் வேறுபபட்டதாக இருந்தது. 

அன்பே வா திரைப்படம், வெளியான சமயத்தில், சுமார் 30 லட்ச ரூபாய் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. அப்போது டாப் ஹீரோவாக இருந்த நடிகர் எம்.ஜி.ஆர். அந்த காலத்தில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராகவும் அவர்தான் இருந்தார். அனைத்து படங்களுக்கும் அதிக சம்பளம் வாங்கி வந்த இவர், அன்பே வா படத்திற்கும் அவர் அப்படி ஒரு பெரிய தொகையை சம்பளமாக கேட்டதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | ‘ரத்னம்’ படத்தில் நடிக்க விஷால் வாங்கிய சம்பளம் எவ்வளவு? கேட்டா ஆச்சரிய படுவீங்க..

எம்.ஜி.ஆர் வாங்கியிருந்த சம்பளம்..!

அன்பே வா படத்தில் நடிக்க, எம்.ஜி.ஆர் 72 நாட்கள்தான் கால்ஷீட் கொடுத்திருந்தாராம். அதற்காக, அவர் 3 லட்சம் சம்பளமாக கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் வழக்கமாக அந்த காலத்தில் நடித்த படங்களில் சுமார் ரூ.70 முதல் ரூ.80 ஆயிரம் வரை மட்டுமே சம்பளம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இப்படத்திற்கு மட்டும் ஒரே அடியாக சம்பளத்தை பன்மடங்காக கேட்டுள்ளார். 

எம்.ஜி.ஆர் கேட்ட சம்பளத்தை, ‘அன்பே வா’ படத்தை தயாரித்த ஏ.வி.எம் நிறுவனம் கொடுக்க மறுப்பே சொல்லாமல் சம்மதித்து விட்டதாம். ஏன் என்றால், அப்போது அவர்களை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் என்பவர் பெறும் சொத்து போல பார்க்கப்பட்டார். 3 லட்சம் சம்பளத்தை பெற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர், படப்பிடிப்பு முடியும் தருவாயில் இன்னும் கூடுதலாக ரூ.25 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. அதையும் ஏ.வி.எம் நிறுவனம் கொடுத்ததாக, ஏ.வி.எம் சரவணன் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

எம்.ஜி.ஆரின் அன்றைய சம்பள விவரத்தை தெரிந்து கொண்ட ரசிகர்கள் “அந்த காலத்திலேயே இத்தனை லட்சம் வாங்கியிருக்கிறாரா..” என வாய் பிளந்து வருகின்றனர். 

மேலும் படிக்க |  ‘தளபதி 69’ இசையமைப்பாளர் அனிருத் இல்லையாம்.. வேறு யார் தெரியுமா? ஐயோ இவரா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News