Topless ஆக பால்கனியில் நின்று கிளாமர் லுக் கொடுக்கும் ஈஷா குப்தா

பாலிவுட் நடிகை ஈஷா குப்தாவின் டாப்லெஸ் போட்டோ இணையத்தில் வைரலாகிறது... 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Oct 12, 2021, 01:28 PM IST
  • பிரபல பாலிவுட் நடிகை ஈஷா குப்தா
  • பால்கனியில் மேலடையின்றி நின்று லுக்
  • ஈஷா குப்தாவின் டாப்லெஸ் புகைப்படங்களில் இணையத்தில் வைரல்
Topless ஆக பால்கனியில் நின்று கிளாமர் லுக் கொடுக்கும் ஈஷா குப்தா title=

பல பாலிவுட் நடிகைகள் தங்கள் அழகால் மக்களை கவர்ந்திழுக்கிறார்கள், அத்தகைய ஒரு நடிகை தான் ஈஷா குப்தா. அண்மையில் அவர் தனது சில படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவை பலராலும் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வைரலாகிறது.  

சில நடிகைகள் தங்கள் துணிச்சலான செயல்களால் ரசிகர்களின் இதயங்களை ஆக்ரமித்துக் கொள்கின்றனர். அவரைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் பாலிவுட் நடிகை ஈஷா குப்தா.

அவரது வழக்கமான தரிசனத்திற்கு காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு, அவர் மேலாடையில் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பார்ப்பத்தால் எப்படி இருக்கும்? அதுவும் பட்டப்பகலில் பால்கனியில் நின்று இந்த புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். 

அந்தப் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமிலும் பகிர்ந்துக் கொண்டுள்ளார். புகைப்படங்களைப் பார்த்த, அவரது ரசிகர்கள் கிறங்கிக் கிடக்கின்றனர்.  

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Esha Gupta (@egupta)

துணிச்சலான போட்டோஷூட்
பாலிவுட் நடிகை ஈஷா குப்தா சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் அவரது கவர்ச்சியான பாணியைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். அவர் பால்கனியில் நின்று டாப்லெஸ் போட்டோஷூட் செய்து அதை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்பட்த்துடன் அவர் என்ன எழுதி இருக்கிறார் தெரியுமா? இன்று நேசிக்கவும், நாளையும் நேசிக்கவும் என்று பதிவிட்டு, ஹாட் போட்டோக்களின் கிளாமரை மேலும் கூட்டியுள்ளார்.  

2007 ஆம் ஆண்டில் மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் பட்டத்தை வென்ற நடிகை ஈஷா குப்தா, தன்னை எந்தவொரு வட்டத்திலும் அல்லது அடையாளத்திலும் அடைத்துக் கொள்ள விரும்பவில்லை என்று சொல்பவர்.  

ஏஞ்சலினா ஜோலி என்று ஈஷா குப்தாவை அனைவரும் அழைக்கிறார்கள், தனது துணிச்சலான செயல்களால் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம் பெறும் ஈஷா குப்தாவின் படங்கள் சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை உருவாக்குகின்றன. ஈஷா 'ஜன்னத் 2' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் 'ராஸ் 3' படத்தில் தோன்றினார். ஈஷாவின் தைரியமான அவதாரத்தைப் பார்த்த மகேஷ் பட், இந்தியாவின் ஏஞ்சலினா ஜோலி என்ற பட்டத்தையும் கொடுத்தார்.

ஈஷா குப்தாவின் அழகை இன்று பலரும் ஆராதித்தாலும், அவரும் ஒரு காலத்தில் தனது நிறத்துக்காக ஒதுக்கப்பட்டவர் தான். தான் பாலிவுட்டுக்கு வந்தபோது, தன்னுடன் அதுவரை பணி புரியாத சில பாலிவுட் நட்சத்திரங்கள், “என் கறுப்பாய் மேக்கப் செய்திருக்கிறீர்கள்?” என்று கேட்டுள்ளதாக குறிப்பிட்டிருக்கிறார். ஈஷா குப்தா 'நகாப்' என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்கிறார். நகாப் வலைத்தொடரில் பிரபல நடிகை மல்லிகா ஷெராவத்தும் நடிக்கிறார். இந்த தொடரில் இஷா குப்தா துணிச்சலான போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.

Also Read | ரசிகர்கள் ஷாக்; பெண் குழந்தை பெற்ற பிரபல தமிழ் நடிகை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News