Ajith Kumar: ரசிகரின் போனை வாங்கி தன் வீடியோவை டெலிட் செய்த அஜித்! வைரலாகும் வீடியோ…

Ajith Kumar Deletes Video From Fan's Phone: நடிகர் அஜித்குமார் சில நாட்களுக்கு முன்பு துபாய் சென்றிருந்த போது, அவரை ஒரு ரசிகர் வீடியோ எடுத்தார். அந்த வீடியோவை அஜித்குமார் டெலிட் செய்துள்ளார். 

Written by - Yuvashree | Last Updated : Jan 5, 2024, 11:45 AM IST
  • அஜித்குமார் துபாய் சென்றிருந்தார்.
  • அங்கு ஒரு ரசிகர் அவரை வீடியோ எடுத்தார்.
  • அந்த வீடியோவை அஜித் டெலிட் செய்தார்.
Ajith Kumar: ரசிகரின் போனை வாங்கி தன் வீடியோவை டெலிட் செய்த அஜித்! வைரலாகும் வீடியோ… title=

விடாமுயற்சி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமார் சமீபத்தில் துபாய் சென்றிருந்தார். அப்போது, தன்னை வீடியோ எடுத்த ஒரு ரசிகரின் போனை வாங்கி அந்த வீடியோவை டெலிட் செய்தார். அவர் அப்படி செய்த வீடியோ இன்னொரு ரசிகரின் போனில் பதிவாக, அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

துபாயில் அஜித்குமார்..

நடிகர் அஜித்குமார், தனது குடும்பத்தினருடன் வெளிநாடுகள் அல்லது வெளியூர்களுக்கு பயணம் செய்வது வழக்கம். சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் களைக்கட்டியது. நடிகர் அஜித்குமாரும் இந்த புத்தாண்டை கொண்டாட தனது குடும்பத்தினருடன் துபாயில் கொண்டாடினார். அந்த ஊரில் அவர் ஒரு கப்பலில் குடும்பத்தினருடன் இருக்கும் வீடியோவும், அவர் ஒரு உணவகத்தில் குடும்பத்தினருடன் நேரம் செலவிடும் வீடியோவும் வைரலானது. 

ரசிகரின் போனை வாங்கி..

நடிகர் அஜித்குமார் ஷூட்டிங்கை தவிர பிற நேரங்களில் கேமராவின் கண்களில் இருந்து தள்ளியே இருப்பார். தன்னை பத்திரிக்கையாளர்கள் போட்டோ எடுத்தால் கூட பல நேரங்களில் போட்டோ எடுக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வார். இவர் துபாய்க்கு சென்ற போது தன் குடும்பத்தினருடன் இருப்பதை ஒரு ரசிகர் வீடியோ எடுத்துள்ளார். வண்டியில் சென்று கொண்டிருந்த இவர், அதை நிறுத்தி அந்த ரசிகரின் போனை வாங்கி வீடியாேவை டெலிட் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

விடுதி ஊழியருடன் நடனமாடிய அஜித்…

நடிகர் அஜித்குமார், துபாய்க்கு சென்ற போது அங்குள்ள ஒரு நடசத்திர விடுதியில் தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டார். அப்போது, துணிவு படத்தில் இடம் பெற்றிருந்த “இருப்பது ஒரு லைஃப்பு அடிச்சிக்க சியர்ஸ்” பாடலுக்கு அவரின் கையை பிடித்து நடனமாடினார். இந்த வீடியோவும் ரசிகர்களிடையே வைரலானது. 

மேலும் படிக்க | வெளிநாட்டு ரசிகையுடன் நடனமாடும் அஜித்குமார்! வீடியோ இதோ..

விடாமுயற்சி படப்பிடிப்பு நிலவரம்..

விடாமுயற்சி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வெளியானது. ஆனால், அஜித் குமார் தனது பைக் டூர் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் பிசியாக இருந்தார். இதனால், இதன் படப்பிடிப்பு தள்ளிப்போனது. இந்த நிலையில் நடிகர் அஜித்குமார், விடாமுயற்சி படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சில வாரங்களுக்கு முன்பு பறந்தார். அங்கு, சில ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

விடாமுயற்சி படக்குழு..

விடாமுயற்சி படத்தில் த்ரிஷா, கதாநாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இன்னொரு முக்கிய கதாப்பாத்திரத்தில் ரெஜினா கசான்ட்ரா நடிக்கிறாராம். இவர்கள் மட்டுமன்றி, அர்ஜூன், ஆரவ், அர்ஜூன் தாஸ் ஆகியோரும் இதில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை இயக்கும் மகிழ் திருமேனி, தமிழில் இதுவரை க்ரைம் த்ரில்லர் படங்களை இயக்கி அதை வெற்றி பெற செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | 16 லட்சத்துடன் வெளியேறிய பூர்ணிமா..பிக்பாஸில் மொத்தமாக சம்பாதித்தது எவ்வளவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News