இன்றிரவு அமெரிக்காவில் இருந்து தமிழகம் திரும்பும் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு 10 நாள் பயணமாகச் சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 5-ந் தேதி சென்னை திரும்புகிறார்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 4, 2018, 04:25 PM IST
இன்றிரவு அமெரிக்காவில் இருந்து தமிழகம் திரும்பும் ரஜினிகாந்த் title=

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு 10 நாள் பயணமாகச் சென்றுள்ளார். அமெரிக்கா சென்றுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 5-ந் தேதி சென்னை திரும்புகிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ம் தேதி புதிய கட்சி தொடங்கி அரசியலில் ஈடிபடுவேன் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்த கையோடு, மாவட்ட வாரியாக நிர்வாகிகள் நியமனம் நடந்து வருகிறது. இதற்கிடையில்  நடிகர் ரஜினிகாந்த் தனது உடல்நிலை குறித்து வழக்கமான பரிசோதனை மேற்கொள்வதற்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அமெரிக்காவில் தனது கட்சி, கொடி மற்றும் கொள்கைகள் தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும் இம்மாத இறுதியில் தனது கட்சி பற்றி புதிய அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தகவல் வந்துள்ளது.

அமெரிக்காவில் ரஜினிகாந்த்! வைரலாகும் புகைப்படங்கள்!

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்றிரவு சென்னை திரும்புகிறார். மேலும் அமெரிக்காவில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் புதிய புகைப்படத்தை அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, அது சமூக வலைதளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்!

 

 

Trending News