வங்கி கணக்குகளுக்கு ஆதார் எண் கட்டாயம் - ரிசர்வ் வங்கி!

வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது!

Last Updated : Apr 22, 2018, 07:39 AM IST
வங்கி கணக்குகளுக்கு ஆதார் எண் கட்டாயம் - ரிசர்வ் வங்கி! title=

வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது!

அராசாங்கத்தின் அனைத்து சேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியமாகி வந்து கொண்டிருகிறது. வருமான வரி தாக்கல் செய்வது, புதிய வங்கி கணக்குகளை திறப்பது, அரசின் நலத்திட்டங்களைப் பெறுவதற்க்கு என ஆதார் எண் அவசியமாகி விட்டது.

இந்த நடைமுறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பலரும் வழக்குகள் தொடுத்து, அவை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் வங்கி கணக்குகளுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. KYC என்னும் நடைமுறை விதியின் ஒரு பகுதியாக இதை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அதேவேலையில், இந்த நடைமுறையானது உச்சநீதிமன்றம் வழங்கவுள்ள இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

திருத்தப்பட்ட நடைமுறைப்படி வங்கியில் ‘பயோமெட்ரிக் ஐ.டி.’-க்கு விண்ணப்பிப்பவர்களிடம் ஆதார் எண், பான் என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் அல்லது படிவம் எண்.60 ஆகியவற்றை கேட்டுப்பெற வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

Trending News