புதனின் அருளால் ஜூலை வரை இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம், ராஜ யோகம்

Astrology: புதனின் மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 7, 2022, 05:51 PM IST
  • கடக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • இந்த காலகட்டத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
  • நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரும்.
புதனின் அருளால் ஜூலை வரை இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம், ராஜ யோகம் title=

புதன் ராசி மாற்றம்: ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறது. அனைத்து கிரகங்களின் ராசி மாற்றமும் மேஷம் முதல் மீனம் வரை உள்ள அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். 

புதன், சுக்கிரனின் ராசியான ரிஷப ராசியில் சஞ்சரிக்கும். புதனின் இந்த நிலை 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் 3 ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு வியாபாரக் காரணியான புதனின் சிறப்புப் பாக்கியம் கிடைக்கும். புதனின் தாக்கத்தால் திடீர் பண ஆதாயங்கள் உண்டாகும். நீங்கள் ஒரு புதிய தொழிலைத் தொடங்க திட்டமிட்டிருந்தால், அதற்கான உகந்த நேரமாக இது இருக்கும். உங்களுக்கு மகத்தான வெற்றிகள் காத்திருக்கின்றன. போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்களுக்கு இது சாதகமான காலம்.

வேலை, வியாபாரம் தவிர குடும்பத்திலும் மகிழ்ச்சி பொங்கும். நண்பர்கள் உறவினர்கள் ஆகியோரது ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். 

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சில புதிய வேலைகளைத் தொடங்கலாம். சொத்து, வாகனம் வாங்க நினைத்திருந்தால் அதை இப்போது செய்யலாம். தற்போது அதற்கான யோகம் உள்ளது. பணம் சம்பாதிப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. 

மேலும் படிக்க | சுக்கிர பகவானின் அருளால் தொழில் மற்றும் கல்வி அமைந்தால் புதன் கிரகம் சும்மா விடுமா 

கடக ராசிக்காரர்களுக்கு புதன் சஞ்சாரம் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் இருக்கும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் புதனின் அருளால் வேலையில் மதிப்பும் மரியாதையும் கூடும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வணிகத்தில் ஈடுபட்டுள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரம். வியாபாரிகள் அதிக லாபம் பெறலாம். திடீர் பண ஆதாயம் கூடும். வெற்றியும் புகழும் அடையலாம்.

குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும். வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். எடுத்த காரியத்தில் எல்லாம் வெற்றி காண்பீர்கள்.

புதன் கிரகத்தின் தோஷத்தை குறைக்க, இந்த வழிமுறைகளை பின்பற்றவும். 

1. புதன்கிழமையன்று பசுவிற்கு பசுந்தீவனம் கொடுங்கள். முடிந்தால், மாட்டுக்கு தினமுமே உணவளிக்கலாம். 
2. உளுத்தம் பருப்பை உட்கொள்வதும், தானம் செய்வதும் நன்மை பயக்கும்.
3. வீட்டின் கிழக்கு திசையில் சிவப்புக் கொடியை வைக்கவும்.
4. புத்திர தோஷத்தைப் போக்க துர்க்கையை வழிபட வேண்டும்.
5. பச்சை பயிறு தானம் செய்வது மிகச்சிறந்த நன்மையை தரும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | காதலர்களுக்கு இது ஏற்ற நேரம்: இந்த ராசிகளுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News