தனிநபர் கடன் Vs தங்கக் கடன்: குறைந்த வட்டி - உடனடி கடன்: எது சிறந்தது?

தங்கக் கடனுக்கான வட்டி விகிதங்கள் பொதுவாக தனிநபர் கடன்களைவிட குறைவாக இருக்கும். அவசர காலத்திற்கு தங்க நகை கடன் சிறந்ததாக இருக்கும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 26, 2023, 10:02 AM IST
தனிநபர் கடன் Vs தங்கக் கடன்: குறைந்த வட்டி - உடனடி கடன்: எது சிறந்தது? title=

நாடு முழுவதும் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பலரும் அவசர தேவைக்கான கடன்களை குறைந்த வட்டியில் எங்கு வாங்குவது? என்பதை தேடிக் கொண்டிருக்கின்றனர். பொதுவாக தங்க நகை கடன், தனி நபர் கடன்களை விட குறைந்த வட்டியில் கிடைக்கும். உடனடியாகவும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், நகை இல்லாதவர்கள் தனிநபர் கடன்களை நோக்கி செல்ல வேண்டியிருக்கும். ஆனால், நகை இருக்கும்பட்சத்தில் தங்க நகை கடனை தேர்ந்தெடுப்பது சிறந்தது. ஏன் என்பதை இங்கே பார்க்கலாம். 

தங்கக் கடன் Vs தனிநபர் கடன்: 

வட்டி விகிதங்கள்: தங்கக் கடனுக்கான வட்டி விகிதங்கள் பொதுவாக தனிநபர் கடன் விருப்பங்களை விட குறைவாக இருக்கும். சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கிறதா? என்பதையெல்லாம் இதில் பார்க்க மாட்டார்கள். நகையை கொடுத்தால் கடனுக்கான வட்டி குறைவாக கிடைத்துவிடும்.  

மேலும் படிக்க | கிரெடிட் கார்டு தொகையை EMI ஆக மாற்றுவதால் யாருக்கு லாபம்? தெரிந்து கொள்ளுங்கள்

கடன் தொகை: 

தங்க நகைக் கடனை பொறுத்தவரை கொடுக்கும் தங்கத்தின் மதிப்பீட்டுக்கு ஏற்ப கடன் கொடுப்பார்கள். இதில், கடன் வாங்குபவர் தங்கத்தின் மதிப்பீட்டை அறிந்து நகையை அடமானம் வைத்தால் அதற்கேற்ற தொகையை கொடுத்துவிடுவார்கள். தனிநபர் கடன் என்றால் ஏற்கனவே வாங்கப்பட்ட கடன் விவரங்களையும், அது கட்டிய வரலாற்றையும் பார்ப்பார்கள்.  

உடனடியாக கிடைக்கும்: 

தங்கக் கடன்கள் விரைவானவை மற்றும் பொதுவாக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த சில மணிநேரங்களுக்குள் வழங்கப்படும், அதே சமயம் தனிநபர் கடன் வழங்கல் பொதுவாக 5 முதல் 7 நாட்கள் வரை ஆகலாம்.

செயலாக்கக் கட்டணம்: 

தங்கக் கடன்களில், கடன் தொகையில் 2 சதவீதம் வரை செயலாக்கக் கட்டணம் பிடிக்கப்படும். தனிநபர் கடனில், கடன் தொகையில் 1 சதவீதம் முதல் 3 சதவீதம் வரை கட்டணமாக செலுத்த நேரிடும். 

திருப்பிச் செலுத்தும் காலம்: 

தங்கக் கடனுடன் ஒப்பிடும்போது தனிநபர் கடன் நீண்ட காலத்தை வழங்குகிறது. தனிநபர் கடனின் திருப்பிச் செலுத்தும் காலம் மாறுபடும் மற்றும் 7 ஆண்டுகள் வரை நீடிக்கும். அதே சமயம் தங்கக் கடன்கள் பொதுவாக 3 ஆண்டுகள் வரை மட்டுமே திருப்பிச் செலுத்தும் காலத்துடன் வரும்.

மேலும் படிக்க | கிரெடிட் கார்டு நிலுவை தொகைகளை EMI ஆக மாற்றுவது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News