புதனின் ராசி மாற்றம் இந்த 6 ராசிக்காரர்களை பாடாய் படுத்தவுள்ளது: உங்க ராசி என்ன?

Mercury Transit: மீனத்தில் புதன் நுழைவது அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், 6 ராசிக்காரர்களுக்கு இது மிகவும் எதிர்மறையாக இருக்கும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 24, 2022, 10:24 AM IST
  • மீன ராசியில் புதன் பிரவேசிக்கிறார்.
  • 6 ராசிக்காரர்களுக்கு புதனின் சஞ்சாரம் சுபமாக இல்லை.
  • தொழில், பணம், ஆரோக்கியம் போன்ற விஷயங்களில் கவனமாக இருக்கவும்.
புதனின் ராசி மாற்றம் இந்த 6 ராசிக்காரர்களை பாடாய் படுத்தவுள்ளது: உங்க ராசி என்ன? title=

இன்று அதாவது மார்ச் 24, 2022 அன்று புதன் கிரகம் மீன ராசியில் பிரவேசிக்கிறது. பணம், புத்திசாலித்தனம், வியாபாரம் போன்றவற்றை பாதிக்கும் புதனின் ராசி மாற்றம் பலரது வாழ்க்கையை பாதிக்கப் போகிறது. 

மீனத்தில் புதன் நுழைவது அனைத்து ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், 6 ராசிக்காரர்களுக்கு இது மிகவும் எதிர்மறையாக இருக்கும். ஏப்ரல் 8, 2022 வரையிலான இந்த காலகட்டத்தில் எந்தெந்த ராசிக்காரகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம். 

இந்த 6 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வெண்டும் 

மேஷம்:

மேஷ ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 8 ஆம் தேதி வரை உத்தியோகத்தில் சிரமங்கள் வரலாம். தவறான புரிதல்கள் பணியிடத்தில் சூழ்நிலையை கெடுக்கும். செலவுகள் அதிகரிக்கும், ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டவும்.

கடகம்:

கடக ராசிக்காரர்கள் தங்கள் மேலதிகாரியிடம் பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கோவப்படுவது தீங்கு விளைவிக்கும். பயணங்கள் வெற்றிகரமாக அமையாது என்பதால், பயணங்களைத் தவிர்க்கவும். புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள். குடும்பத்தில் உள்ள உறவுகளின் விஷயத்திலும் கவனமாக இருங்கள், இல்லையெனில் உறவு மோசமடையக்கூடும்.

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் நிதி நிலை பாதிப்புகள் ஏற்படலாம். எனவே முதலீடு செய்வதை தவிர்க்கவும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். காயங்கள் ஏற்படலாம். உறவினர்களிடம் கவனமாக நடந்துகொள்ளுங்கள். வீண் வாக்குவதாம் வேண்டாம். 

மேலும் படிக்க | அடுத்த 15 நாட்கள் இந்த 5 ராசிக்காரர்கள் மீது அதிர்ஷ்ட மழை: தொட்டது துலங்கும் 

கன்னி:

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்காது. வேலையில் வெற்றி இருக்காது. வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். நிதி விஷயங்களை புத்திசாலித்தனமாக கையாளுங்கள் இல்லையெனில் பெரிய இழப்பு ஏற்படலாம். உங்கள் வாழ்க்கை துணையை அன்புடன் நடத்துங்கள், இல்லையெனில் உறவு மோசமடையக்கூடும்.

மீனம்:

இந்த நேரம் மீன ராசிக்காரர்களை காயப்படுத்தும் வகையில் இருக்கக்கூடும். மீன ராசிக்காரர்களின் நடத்தையே அவர்களது துன்பத்திற்கு காரணமாகிவிடும். பிறரின் வார்த்தைகள் அல்லது நடவடிக்கை உங்களை காயப்படுத்தலாம். எனினும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் பொறுமையாக இருங்கள். பொறுமை காத்தால் அனைத்தும் தானாக சரியாகிவிடும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுக்கிரனின் ராசி மாற்றம்: இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறவுள்ளது, அடிக்கும் ஜாக்பாட் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News