குரு பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுதாம்

Guru Rashi Parivartan 2022: ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அதன் நிலையை மாற்றுகிறது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 25, 2022, 10:05 AM IST
  • மேஷ ராசிக்கு நல்ல நேரம்
  • 22 ஏப்ரல் 2023 வரை மீனத்தில் குரு இருப்பார்
  • சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும்
குரு பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காற்று வீசப்போகுதாம் title=

 நவகிரக நாயகர்களில் குரு பகவானுக்கு தனி சிறப்பு உண்டு. குரு பகவான் திருமண வாழ்க்கை, மகிழ்ச்சி-செழிப்பு, அதிர்ஷ்டம், நல்ல தொழில் ஆகியவற்றைக் கொடுக்கும் கிரகம் ஆகும். ஜோதிடத்தின்படி, ஒரு கிரகம் பெயர்ச்சி ஆகும் போதோ அல்லது மற்ற கிரகங்களுடன் இணையும்போதோ, அது அனைத்து ராசிக்காரர்களையும் நேரடியாக பாதிக்கிறது. கிரகங்களின் பெயர்ச்சி வாழ்க்கையில் பல நேர்மறை மற்றும் எதிர்மறை மாற்றங்களைக் கொண்டு வருகிறது. இந்தப் பெயர்ச்சி சிலருக்கு சுபமாகவும், சிலருக்கு அசுபமாகவும் இருக்கும். கடவுள்களின் குருவான வியாழன் ஏப்ரல் 13 அன்று தனது சொந்த ராசியான மீன ராசியில் நுழைந்துள்ளார்.

ஜோதிடத்தில், தேவகுரு வியாழன் மிகவும் மங்களகரமான கிரகமாக கருதப்படும் நிலையில், இந்த கிரகம் வலுவாக இருந்தால், அந்த நபருக்கு வேலையிலும் வாழ்க்கையிலும் பெரும் அதிர்ஷ்டம் கிடைக்கும். குருவின் அருளால் தொழிலில் வெற்றி பெற்று, மிக வேகமாக வாழ்க்கையில் முன்னேறி, நிறைய பணம் சம்பாதிக்கிறார். திருமண வாழ்க்கையும் மிக இனிமையாக இருக்கும். இந்த நேரத்தில் குரு தனது சொந்த ராசியான மீனத்தில் இருப்பதால், அவரது நிலை இன்னும் முக்கியமானது. அவர் 22 ஏப்ரல் 2023 வரை மீனத்தில் இருப்பார். அதன்படி இந்த காலம் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும். அதன்படி எந்தெந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | Solar Eclipse: கிரகணத்தின் போது சூரியனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை

மேஷ ராசிக்கு நல்ல நேரம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். பணப்பற்றாக்குறையை நீங்கள் உணர்ந்தாலும் அதற்கு தீர்வு கிடைக்கும். பண ஆதாயத்திற்கான அறிகுறிகள் உள்ளன. உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வேலையில் முன்னேற்றம் இருக்கும். ஒட்டுமொத்த நேரம் மிகவும் நன்றாக உள்ளது. 

ரிஷப ராசி
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும். திடீரென்று உங்களுக்கு சொத்து கிடைக்க வாய்ப்புகள் உள்ளன, பணம் சம்பாதிக்கும் வழிகள் அதிகரிக்கும். உங்கள் சேமிப்பை புத்திசாலித்தனமாக செலவிடுங்கள். வியாழன் சஞ்சாரம் ரிஷபம் ராசிக்காரர்களின் வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும். அவர்களின் வருமானத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கும், அது அவர்களுக்கு நிதி பலத்தை அளிக்கும். புதிய வருமான வழிகள் திறக்கப்படும். உத்தியோகத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். 

மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு வியாழனின் சஞ்சாரம் தொழிலில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். அவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். பதவி உயர்வு கிடைக்கலாம். வியாபாரிகளின் வியாபாரம் எங்கும் பரவும். குறிப்பாக சந்தைப்படுத்தல்-ஊடகத்துடன் தொடர்புடையவர்கள் பெரிய பலனைப் பெறுவார்கள். 

கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் அதிர்ஷ்ட மழை வீசும். எதிலும் எளிதாக வெற்றி பெறுவார்கள். தடைப்பட்ட பணிகளும் தற்போது தொடங்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன அல்லது வெளிநாட்டில் இருந்து அதிக லாபம் கிடைக்கும். இந்த ராசி வியாபாரிகளுக்கு இந்த நேரம் நன்றாக இருக்கும். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சனி அமாவாசையில் சூரிய கிரகணம்; மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News