ஹோலி பண்டிகை: இரண்டு சிலிண்டர்கள் இலவசம்... அரசு அதிரடி

Free Gas Cylinder: பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பலனைப் பெறும் பயனாளிகளுக்கு இந்த ஆண்டு ஹோலி பண்டிகையில் 2 இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும். இந்த செய்தி பயனர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jan 12, 2023, 01:17 PM IST
  • எரிவாயு சிலிண்டர் வாங்க முடியாதவர்கள் முகத்தில் மகிழ்ச்சி
  • பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தில் இது வழங்கப்படுகிறது.
  • சமையல் எரிவாயு விலை உயர்வை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஹோலி பண்டிகை: இரண்டு சிலிண்டர்கள் இலவசம்... அரசு அதிரடி title=

Free Cylinders In Uttar Pradesh: இலவச கேஸ் சிலிண்டர் செய்திகள் 2023: ஏழைகள் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்துள்ள எரிவாயு சிலிண்டர் இலவசமாக கிடைத்தால், எப்படி இருக்கும்.. அதுவும் ஒன்றல்ல, இரண்டு கிடைத்தால், ஏழைகள் மற்றும் எரிவாயு சிலிண்டர் வாங்க முடியாதவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை காணலாம். இப்படி ஒரு திட்டத்தை உத்தரபிரதேச மாநில அரசு கொண்டு வருகிறது. மக்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகிறது. பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் பலனைப் பெறும் பயனாளிகளுக்கு இந்த ஆண்டு ஹோலி பண்டிகையில் இரண்டு இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. 

எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

உத்தரப்பிரதேச உணவு மற்றும் தளவாடத் துறையின் சார்பில் இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எரிவாயுவின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு உத்தரப் பிரதேச அரசு இந்த முடிவை எடுத்துள்ளது எனக் கூறப்படுகிறது. 

Cylinder

ஹோலி பண்டிகை முதல் இலவச சிலிண்டர்

இலவச காஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்திற்கு உ.பி. அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக உரம் மற்றும் தளவாடத் துறைக்கு இலவச காஸ் சிலிண்டர் வழங்க வேண்டும் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க | எந்த ஆவணமும் இல்லாமல் ஆதாரில் முகவரியை மாற்றலாம்: இதை செய்தால் போதும்

ஹோலி பண்டிகை முதல் இலவச சிலிண்டர் வழங்கப்படும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த இலவச சிலிண்டர் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

இலவச கேஸ் சிலிண்டர் பெற நிபந்தனைகள்

இந்த இலவச சிலிண்டர்கள் குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படும் என உத்தரப் பிரதேச அரசு தெரிவித்துள்ளது. இரண்டு இலவச சிலிண்டர்கள் பெற சில நிபந்தனைகள் உள்ளன.

இலவச கேஸ் சிலிண்டர் யாருக்கு கிடைக்கும்? அதற்கான தகுதி என்ன?

உத்தரபிரதேசத்தை பூர்வீகமாக கொண்டவராக இருக்க வேண்டும்.

பெண்கள் மட்டுமே இலவச சிலிண்டர்கள் பெற தகுதியுடையவர்கள்.

இந்த சலுகைகளைப் பெறுவதற்கான குறைந்தபட்ச வயது 21 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த தாழ்த்தப்பட்ட மற்றும் நடுத்தர வர்க்க குடும்ப பெண்களுக்கு வழங்கப்படும்.

பிபிஎல் ரேஷன் கார்டு மற்றும் பிஎம் ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்கள் வாங்கலாம். 

மேலும் படிக்க | Jackpot! இந்த அரிய 1 ரூபாய் நோட்டு உங்களை கோடீஸ்வரனாகும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News