சனி பெயர்ச்சி 2022: இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம், செல்வம் பெருகும்

Sani Peyarchi 2022: சனிப்பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், இந்த பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு மிக நல்ல பலன்களை அளிக்கவுள்ளது.  

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 29, 2022, 06:36 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு லாபம் மற்றும் வருமானம் கிடைக்கும்.
  • தொழிலில் முன்னேற்றம் அடையலாம்.
  • புதிய வேலை வாய்ப்பு வரலாம்.
சனி பெயர்ச்சி 2022: இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல யோகம், செல்வம் பெருகும் title=

சனிப்பெயர்ச்சி 2022: ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ராசியை மாற்றுகிறது. இது மனித வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சனி பகவான், ஏப்ரல் 29 அன்று தனது சொந்த ராசியான கும்பத்தில் நுழையப் போகிறார்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனி பகவான் மிக குறைவான வேகத்தில் நகர்கிறார். மேலும் அவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாற சுமார் இரண்டரை வருடங்கள் ஆகும். எனவே, சனி சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் பிரவேசிக்கப் போகிறார். 

வேத ஜோதிடத்தில், சனிக்கு நீதிபதி பதவி கொடுக்கப்பட்டுள்ளது. சனி செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருகிறார். எனவே, இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், இந்த பெயர்ச்சி 3 ராசிக்காரர்களுக்கு மிக நல்ல பலன்களை அளிக்கவுள்ளது. அந்த 3 ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம்: 
சனியின் கோச்சாரத்தால், மேஷ லக்னம் மற்றும் மேஷ ராசிக்காரர்களுக்கு  நல்ல பணம் கிடைக்கும். சனிபகவான் உங்களின் 11வது வீட்டில் சஞ்சரிப்பதால் லாபம் மற்றும் வருமானம் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் வியாபாரத்தில் நல்ல லாபம் பெறலாம். மேலும், இந்த நேரத்தில் பல வழிகளில் பண வரவு இருக்கும். 

வணிகத்தில் சிறந்த ஒப்பந்தங்கள் இறுதியாகும். மறுபுறம், சனி பகவான் உங்கள் பத்தாவது வீட்டின் அதிபதியாகவும் இருக்கிறார். ஆகையால், இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் தொழிலில் முன்னேற்றம் அடையலாம். புதிய வேலை வாய்ப்பு வரலாம். பயணங்களால் பணம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள். முதலீடு செய்ய சரியான நேரம். இந்த நேரத்தில் நீங்கள் பழைய நோயிலிருந்தும் விடுபடலாம். 

மேலும் படிக்க | ராசி மாறுகிறார் ராகு: இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் ஆரம்பம், லாபம் பெருகும் 

ரிஷபம்:

சனி பகவானின் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் சனி உங்கள் வேலை மற்றும் தொழில் வீட்டில் சஞ்சரிப்பார். எனவே, இந்த நேரத்தில் நீங்கள் வியாபாரத்தில் நல்ல பணம் சம்பாதிக்கலாம். 

தொழிலில் வெற்றி பெறலாம். பணியிடத்தில் மரியாதையும் பெறுவீர்கள். ரிஷபத்தின் அதிபதி சுக்கிரன் மற்றும் ஜோதிடத்தின் படி, சனி பகவான் மற்றும் சுக்ர தேவனுக்கு இடையே நட்பு உணர்வு உள்ளது. எனவே, சனியின் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக அமையும்.

தனுசு:

சனி கிரகம் சஞ்சரிக்கும் போதே தனுசு ராசிக்காரர்களுக்கு  ஏழரை நாட்டு சனியிலிருந்தும் விடுதலை கிடைக்கும். இதனுடன், முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகளும் கிடைக்கும். மறுபுறம், சனி தேவன் உங்கள் மூன்றாவது வீட்டில் அதாவது வலிமைமிக்க வீட்டில் சஞ்சரிக்கிறார். 

ஆகையால், இந்த நேரத்தில் உங்கள் பலம் அதிகரிக்கும். இத்துடன் பணியிடத்தில் மரியாதையும் கிடைக்கும். அதே நேரத்தில், நீங்கள் எந்த பழைய நோயிலிருந்தும் விடுதலை பெற நல்ல நேரம் இது. சனி பகவான் சம்பந்தமான (இரும்பு, எண்ணெய், ஒயின்) பொருட்களின் வியாபாரம் செய்தாலோ அல்லது செய்யத் திட்டமிட்டிருந்தாலோ, அதற்கான சரியான நேரம் இது. இந்த வியாபாரம் சிறப்பான பலன்களைத் தரும். மேலும், உங்கள் தடைபட்ட வேலை இந்த நேரத்தில் முடிக்கப்படும். 

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | எவ்வளவு சம்பாதித்தாலும் பணம் கையில் தங்காத ராசிகள் இவைதான்: உங்க ராசி என்ன? 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News