'கண்ணீர்விட்டு கதறினார்...' காங்கிரஸ் டூ பாஜக சென்ற தலைவர் - மறைமுகமாக தாக்கிய ராகுல்

Rahul Gandhi Latest News: அதிகாரத்தை எதிர்த்து மோத முடியாமல் முன்னாள் சகாக்கள் தங்களிடம் கண்ணீர்விட்டு கதறி அழுததாக மகாராஷ்டிராவில் ராகுல் காந்தி எம்.பி பேசி உள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 18, 2024, 01:00 AM IST
  • அசோக் சவான் குறித்து அவரின் பெயரை குறிப்பிடாமல் ராகுல் காந்தி பேசினார்.
  • அசோக் சவான் மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர், மக்களவை எம்பி.
  • இவர் கடந்த மாதம் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறினார்.
'கண்ணீர்விட்டு கதறினார்...' காங்கிரஸ் டூ பாஜக சென்ற தலைவர் - மறைமுகமாக தாக்கிய ராகுல்  title=

Rahul Gandhi Latest News In Tamil: 'பாரத் ஜோடோ நீதி யாத்திரை' என்ற பெயரில் நாட்டின் வடகிழக்கு பகுதியான மணிப்பூர் முதல் வடமேற்கு பகுதியான மகாராஷ்டிர தலைநகர் மும்பை வரை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டார். கடந்த ஜனவரி மாதம் 14ஆம் தேதி இந்த சுற்றுப்பயணம் தொடங்கிய நிலையில் மார்ச் 17ஆம் தேதி நிறைவடைந்தது. 

அந்த வகையில், பாஜக ஆளும் மகாராஷ்டிராவின் பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர். அந்த கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி தனது முன்னாள் சகாக்கள் குறித்த தகவல்களையும் வெளியில் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் எம்பியுமான அசோக் சவான் குறித்து அவரின் பெயரை குறிப்பிடாமலேயே ராகுல் காந்தி பேசினார். 

ராஜாவின் மனம்

அதில் பேசிய ராகுல் காந்தி,"நாம் இப்போது அதிகாரத்துடன் போட்டியிட்டு வருகிறோம். இப்போது இந்த கேள்வி எழுகிறது. என்ன இந்த அதிகாரம்...? இந்த ராஜாவின் மனது அனைத்தும் தேர்தல் வாக்கு இயந்திரம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரி ஆகியவற்றை சுற்றிய இருக்கிறது.

மேலும் படிக்க | Lok Sabha Election 2024: மணிப்பூரில் ஒரே தொகுதிக்கு இரண்டு கட்டமாக தேர்தல்... காரணம் என்ன!

கண்ணீர்விட்ட தலைவர்

நான் யாரின் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், இந்த மாநிலத்தைச் சேர்ந்த மூத்த வீரர் ஒருவர், காங்கிரஸில் இருந்து பிரிந்தார். அவர் அழுதபடியே எனது அம்மாவிடம் கூறினார்,'சோனியாஜி, சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. இந்த படை பலம், ஆள் பலம் கொண்டவர்களுடன் என்னால் மோத முடியவில்லை, ஜெயிலுக்கு போக என்னால் முடியாது" என அவர் கூறினார். 

அசோக் சவான்

மகாராஷ்டிரா காங்கிரஸை சேர்ந்த சவான் கடந்த மாதம் பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் தற்போது நீக்கப்பட்டன. மிலிந்த் தியோரோவை அடுத்து அசோக் சவானும் பாஜகவில் இணைந்தது மகாராஷ்டிரா காங்கிரஸ் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் நானா படேலுக்கு அசோக் சவானுக்கும் கருத்து முரண்பாடு இருந்துள்ளது. இதற்கு ஆதார்ஷ் ஊழல் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. அசோக் சவான் மீது மூன்று வழக்குகள் உள்ளன. இதில் இரண்டு வழக்குகள் ஆதார்ஷ் கூட்டுறவு ஹவுசிங் சொசைட்டி சார்ந்ததாகும்.

ஸ்டாலின் பேச்சு

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது,"தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. இனி பாஜகவை வீழ்த்துவது ஒன்றே நமது இலக்கு. பாஜகவை விடப் பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை. அவர்களிடம் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். 

ராகுல் காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நியாயப் பயணத்தின் உண்மையான வெற்றி என்பது பாஜகவை வீழ்த்துவதில்தான் அடங்கியிருக்கிறது. கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணம் டெல்லியைக் கைப்பற்றி, அனைத்துத் தரப்பினருக்குமான, மதச்சார்பற்ற, உண்மையான கூட்டாட்சி அரசை அமைப்பதில் நிறைவுற வேண்டும்" என்றார்.

மேலும் படிக்க | Electoral Bonds : அதிக நன்கொடை பெற்ற டாப் 10 கட்சிகள்.... பாஜக டூ அதிமுக வரை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News