ரயில்வே வேலைவாய்ப்பில் மோடி அரசின் ஏமாற்று வேலை: ராகுல் காந்தி

ரயில்வே துறையில் லட்சக்கணக்கான காலிப் பணியிடங்கள் இருக்கும் நிலையில் வெறும் 5 ஆயிரம் காலிப் பணியிடங்கள் மட்டுமே நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 20, 2024, 04:20 PM IST
  • ரயில்வேயில் 5 ஆயிரம் பணியிடங்கள்
  • ராகுல் காந்தியின் கண்டனம்
  • வேலைவாய்ப்பில் மோடி அரசின் ஏமாற்று வேலை
ரயில்வே வேலைவாய்ப்பில் மோடி அரசின் ஏமாற்று வேலை: ராகுல் காந்தி title=

இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் அரசுப் பணியை கனவாக கொண்டு நாள்தோறும் 18 மணி நேரம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ரயில்வே துறையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், வேறு துறை சார்ந்த அரசு அல்லது தனியார் பணிகளை நோக்கி நகரும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். இந்த சூழலில் ரயில்வே துறை சார்பில் இப்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் மொத்தம் 5696 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | ராமர் கோவில் பிரசாதம், விஐபி பாஸ் என களைகட்டும் மோசடி! முழுப் பின்னணி!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், மோடி அரசு மாணவர்களின் அரசுப் பணி கனவை முழுமையாக சிதைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். நாட்டில் இருக்கும் இளைஞர்களில் மூன்றில் ஒருவர் வேலைவாய்ப்பு இன்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் ராகுல் காந்தி, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு என்ன ஆச்சு? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

அத்துடன் ராகுல் காந்தி மேலும் சில கேள்விகளையும் எழுப்பியுள்ளார். " நாட்டில் இருக்கும் இளைஞர்களில் மூன்றில் ஒரு இளைஞர் வேலையில்லாத் திண்டாட்டத்தில் பலியாகியுள்ளார். பிரதமர் அவர்களுக்கு மீண்டும் துரோகம் இழைத்துள்ளார். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்து, 18-18 மணி நேரம் கடினமாக உழைத்து, சிறிய வாடகை அறைகளில் வாழ்ந்து, பெரிய கனவு காணும் மாணவர்களிடம்தான் இந்த முறை மோசடி நடந்துள்ளது.

ரயில்வேயில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், 5 ஆண்டுகள் காத்திருந்து 5696 பணியிடங்களை மட்டும் தேர்வு செய்வது போட்டி மாணவர்களுக்கு இழைக்கும் அநீதியாகும். ரயில்வேயில் ஆட்சேர்ப்பை குறைக்கும் கொள்கை யாருடைய நலனுக்காக உருவாக்கப்பட்டது?. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்ற வாக்குறுதி எங்கே? ரயில்வேயை தனியார் மயமாக்க மாட்டோம் என்ற உறுதி எங்கே?. ஒன்று மிகத் தெளிவாக உள்ளது, மோடியின் உத்தரவாதம் இளைஞர்களுக்கு எச்சரிக்கை மணி. அவர்களின் உரிமைகளுக்காகவும் அவர்களுக்கான நீதிக்காகவும் குரல் எழுப்ப வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | அன்னதானத்திற்கு 50 கோடி ரூபாய் கொடுத்தாரா பிரபாஸ்? இல்லைப்பா இல்லை! ஆனா...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News