"மோடி அரசியல் விழா" ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு ஏன் செல்லவில்லை -ராகுல் விளக்கம்

Rahul Gandhi On Ram Temple: ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லாததற்கு காரணத்தை சொன்னா காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி. இந்த நிகழ்ச்சி முழுக்க முழுக்க நரேந்திர மோடி அரசியல் விழாவாக மாற்றப்பட்டு உள்ளது எனவும் ராகுல் கூறினார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 31, 2024, 06:04 PM IST
  • ராமர் கோயில் திறப்பு விழாவை முழுக்க முழுக்க நரேந்திர மோடி அரசியல் விழாவாக மாற்றம்.
  • நான் மதத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்ய விரும்பவில்லை. எனக்கு அதில் ஆர்வம் இல்லை.
  • இந்திய நீதி பயணத்தின் மூன்றாம் நாளான இன்று, நாகாலாந்தில் பயணம்.
"மோடி அரசியல் விழா" ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு ஏன் செல்லவில்லை -ராகுல் விளக்கம் title=

Why Rahul Gandhi Not Attending Ram Temple Events: ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்து உள்ளார். ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்லவில்லை என்று கூறியுள்ளார். இதற்குப் பின்னணியில் உள்ள காரணத்தை விளக்கிய ராகுல் காந்தி, 'ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் நிகழ்வு ஒரு அரசியல் நிகழ்ச்சி. நாங்கள் அனைத்து மதத்தினருடன் இருக்கிறோம். நான் மதத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. எனக்கு அதில் ஆர்வம் இல்லை. எனது மதத்தை சட்டையில் அணிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இருப்பினும், அங்கு செல்ல விரும்புபவர் செல்லலாம். ஆனால் அன்று நாங்கள் அங்கு செல்ல மாட்டோம். எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கூட அங்கு செல்லலாம். ஆனால் அரசியல் ஆதாயம் தேட செல்ல மாட்டோம் எனத் தெரிவித்து உள்ளார். 

நான் என் சட்டையில் மதத்தை அணியவில்லை -ராகுல் காந்தி

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேலும் கூறுகையில், 'நான் நினைப்பது என்னவென்றால், என்னைப் பொறுத்தவரை மதம் என்பது தனிப்பட்ட விஷயம். நான் என் வாழ்க்கையை மக்களை மதிப்பது, ஆணவமும் வெறுப்பும் காட்டாமல் அவர்கள் சொல்வதைக் கேட்பது என்ற கொள்கைகளின்படி வாழ முயற்சிக்கிறேன். நான் மக்களை சரியாக நடத்துகிறேன், அவர்களை மதிக்கிறேன். நான் வெறுப்பை பரப்பவில்லை. இதை பின்பற்றாதவர்கள் சட்டையில் மதத்தை மட்டும் அணிந்து கொள்கிறார்கள்.

நரேந்திர மோடி அரசியல் விழாவாக மாற்றம் -ராகுல் காந்தி

ஜனவரி 22 நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவை முழுக்க முழுக்க நரேந்திர மோடி அரசியல் விழாவாக ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.கவினர் மாற்றி உள்ளனர். இதை தான் இந்து மதத்தின் மிகப்பெரிய மடாதிபதிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அரசியல் விழாவாக நடைபெறும் நிகழ்ச்சிக்கு செல்ல மாட்டோம் என்று தான் காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எல்லா மதம் மற்றும் அதன் வழிபாடுகளை மதிக்கிறோம்" என்று நாகாலாந்தின் கோஹிமா நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி கூறினார். 

மேலும் படிக்க - Bharat Jodo Nyay Yatra: 'சிறிய மாநிலமாக இருந்தாலும்' நாகாலாந்து மக்கள் குறித்து ராகுல்

"இந்திய நீதி பயணம்" 

தற்போது ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி "இந்திய நீதி பயணம்" (Bharat Nyay Yatra) மேற்கொண்டு உள்ளது. கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இந்திய நீதி பயணத்தை தொடங்கியது. இந்த பயணத்தின் மூன்றாம் நாளான இன்று, நாகாலாந்து மாநிலத்தில் பயணம் மேற்கொள்கிறார். 

இந்திய நீதி பயணம் என்பது 15 மாநிலங்களில் 67 நாட்கள் என 6700 கி.மீ. தூரம் பயணிக்க உள்ளனர். இறுதியாக மார்ச் 20 ஆம் தேதி மும்பையில் முடிவடைய உள்ளது. கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி செல்லும் இந்த இந்திய நீதி பயணம் வரவேற்பை பெற்று வருகிறது.

"இந்திய ஒற்றுமை பயணம்"

கடந்த ஆண்டு 2022 செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 2023 ஜனவரி 30 ஆம் தேதி பாரத் ஜோடோ யாத்திரை பயணத்தை மேற்கொண்டார். பாரத் ஜோடோ யாத்திரை பயணம் கன்னியாகுமரியில் தொடங்கி ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்தது. இந்த பயணம் 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக நடந்தது. சுமார் 3570 கிலோமீட்டர் என 145 நாள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் கன்னிக்குமாரியில் தொடங்கிய இந்த யாத்திரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க - இந்தமுறை “கை” கொடுக்குமா? தேர்தலில் எந்தளவு தாக்கத்தை ஏற்படுத்தும்.. பாரத் நியாய் யாத்ரா 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News