கர்நாடகா - தமிழ்நாடு பேருந்து சேவை தற்காலிக நிறுத்தம்!

கர்நாடகாவில் இருந்த தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துக்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுதவதாக கர்நாடக போக்குவரத்து அறிவித்துள்ளது!

Last Updated : Aug 7, 2018, 08:23 PM IST
கர்நாடகா - தமிழ்நாடு பேருந்து சேவை தற்காலிக நிறுத்தம்! title=

கர்நாடகாவில் இருந்த தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துக்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுதவதாக கர்நாடக போக்குவரத்து அறிவித்துள்ளது!

வயது முதிர்வு மற்றும் உடல் நிலை சோர்வு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த 11 நாட்களாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். கருணாநிதியின் உடல்நிலை குறித்து அவ்வப்போது காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வந்தது, இந்நிலையில், நேற்று வெளியான அறிக்கையில், கருணாநிதியின் உடல் உறுப்புகளில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பின்பு தான் எந்த முடிவையும் சொல்ல முடியும். தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார் என மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில் தற்போது திமுத தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிர்யிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாதுகாப்பு நலன் கருதி கர்நாடகாவில் இருந்த தமிழகத்திற்கு இயக்கப்படும் பேருந்துக்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுதவதாக கர்நாடக போக்குவரத்து அறிவித்துள்ளது!

Trending News