Congress Election Manifesto: “நாங்களும் சளச்சவங்க இல்ல” அசத்தல் வாக்குறுதிகளை அள்ளிவிசிய காங்கிரஸ்

Congress Election Manifesto: இன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் கர்நாடக தேர்தளுக்கான தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டனர். அதன் முழு விவரத்தை அறிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 2, 2023, 12:33 PM IST
  • வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும்.
  • பெண் குடும்பத் தலைவிக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000 வழங்கப்படும்
  • ஆட்சிக்கு வந்தால், தேசிய கல்விக் கொள்கையை நிராகரித்து மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவோம்
Congress Election Manifesto: “நாங்களும் சளச்சவங்க இல்ல” அசத்தல் வாக்குறுதிகளை அள்ளிவிசிய காங்கிரஸ் title=

Karnataka Election 2023 Manifesto: கர்நாடகா மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டு இருக்கும் நிலையில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP) தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஒரு நாள் கழித்து, காங்கிரஸ் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. குடும்பத்தலைவிக்கு ரூ.1000, இலவச மின்சாரம், மகளிர் இலவச பேருந்துபயணம், ஒரே சிவில் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்துவதாகவும் மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் மீட்டெடுக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளை அளித்துள்ளது.

இடஒதுக்கீடு உயர்த்தப்படும்:
காங்கிரஸ் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், பட்டியலின வகுப்பினருக்கு (எஸ்சி) இடஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்துவதாகவும், லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகாக்கள் போன்ற அரசியல் செல்வாக்குமிக்க சமூகங்களுக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது.

பெங்களூர் ஷங்கரிலா ஹோட்டலில் நடைபெற்ற தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் ஏஐசிசி தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே, ஏஐசிசி பொதுச் செயலர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, கேபிசிசி தலைவர் டிகே சிவக்குமார், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா, சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பிகே ஹரிபிரசாத், தேர்தல் அறிக்கைக் குழுத் தலைவர் ஜி பரமேஷ்வர் ஆகியோர் கலந்துகொண்டனர். 

மேலும் படிக்க: ராகுல் காந்தி Vs பிரதமர் மோடி: தேர்தல் என்பது உங்களைப் பற்றி பேசுவது அல்ல.. மக்களை பற்றி பேசுவது

காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள்:

- பெண் குடும்பத் தலைவிக்கும் ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000 வழங்கப்படும்.

- அனைத்துப் பெண்களுக்கும் அரசுக்குச் சொந்தமான KSRTC/BMTC பேருந்துகளில் இலவசப் பயணம் செய்யலாம் 

- அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம்

- ஆட்சிக்கு வந்தால், தேசிய கல்விக் கொள்கையை (NEP) நிராகரித்து மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவோம்.

- வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000 வழங்கப்படும். 

- டிப்ளமோ முடித்துவிட்டு வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும். 

- 2006 முதல் பணியில் சேர்ந்த ஓய்வூதியம் பெறும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) நீட்டிப்பது குறித்து பரிசீலிக்கப்படும்

- அனைத்து அரசுத் துறைகளிலும் அங்கீகரிக்கப்படாத காலிப் பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்புவது குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.

- பஜ்ரங் தள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற சமூகத்தில் முரண்பாடுகளை விதைக்கும் அமைப்புகளை எதிராக வலுவான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் படிக்க: இலவச காஸ் சிலிண்டர்... தினமும் அரை லிட்டர் நந்தினி பால்... பாஜக தேர்தல் அறிக்கை!

- இடஒதுக்கீடு 50 சதவீதத்தில் இருந்து லிருந்து 75 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை.

- இஸ்லாமியர்களுக்கு மீண்டும் 4 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும்.

- பட்டியலின மக்களுக்கு 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக இடஒதுக்கீடு உயர்த்தப்படும்.

- பழங்குடியின மக்களுக்கு 3 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக இட ஒதுக்கீடு உயர்த்தப்படும்

- விவசாய கடன் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும்.

- ஒவ்வொரு ஆண்டும் மீனவர்களுக்கு 500 லிட்டர் வரியில்லா டீசல் வழங்கப்படும்.

- மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ.6000 உதவி தொகை வழங்கப்படும்.

- பால் மானியம் லிட்டருக்கு ரூ.5 லிருந்து ரூ.7 ஆக உயர்த்தப்படும்

- காவல்துறை பணி நியமனங்களில் மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு வழங்க நடவடிக்கை. 

- குறைந்தபட்சம் ஒரு சதவீத பதவிகள் மூன்றாம் பாலினத்தவருக்கும் ஒதுக்கப்படும்.

மேலும் படிக்க: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வரும்: அமித்ஷா

கர்நாடக மாநில சட்டபை தேர்தல் விவரங்கள்:
கர்நாடகா மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் நடைபெறும். எனவே அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

- கர்நாடக மாநில சட்டபை எண்ணிக்கை: 224
- கர்நாடகவில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள்: 113
- கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறும் நாள்: மே 10 
- கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை:  மே 13

மேலும் படிக்க: காங்கிரஸ் என் மீது 91 முறை அவதூறுகளை வீசியுள்ளது... ஆனால்... கர்நாடகாவில் பிரதமர் மோடி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News