7 இடங்களையும் பறிகொடுக்கும் AAP; ஆட்சியை பிடிக்கும் பாஜக?

தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் எனவும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடையும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன!

Last Updated : May 19, 2019, 09:47 PM IST
7 இடங்களையும் பறிகொடுக்கும் AAP; ஆட்சியை பிடிக்கும் பாஜக? title=

தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளில் பாஜக வெற்றிபெறும் எனவும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடையும் எனவும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் தெரிவிக்கின்றன!

தலைநகர் டெல்லியில், மொத்தம் 7 மக்களவை தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி கட்சி என மும்முனை போட்டி நிலவுகிறது. தற்போது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி நடைப்பெற்று வருகிறது.

லோக் ஆயுக்தா மற்றும் லோக்பால் மசோதாவை அமல்படுத்தக் கோரி அன்னா ஹசாரே நடத்திய போராட்டத்தில் உருவான ஆம் ஆத்மி கட்சி, ஊழலுக்கு எதிரான கட்சியாக உருவெடுத்தது. பின்னர் டெல்லி சட்டசபையில் போட்டியிட்ட அக்கட்சி 2013-ஆம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. ஆம் ஆத்மி கட்சி தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி முதல்வராக பதவியேற்றார். எனினும் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை மீதே ஊழல் புகார் எழுந்தது.

இதன் காரணமாக தற்போது டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கான வெற்றி வாய்ப்பு குறைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

மேலும் தான் யாரை எதிர்த்து அரசியல் செய்தாரோ, தன் ஆட்சி நிலைக்க அதே காங்கிரஸ் கட்சியின் ஆதரவையும் பெற்று அரசியல் செய்து வருகின்றார். சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவின் சீடராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கெஜ்ரிவால், பின் அன்னா ஹசாரேவின் விமர்சனத்திற்கு சமீபத்தில் ஆளானார். 

இந்நிலையில், தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில், ஆம் ஆத்மி எவ்வளவோ முயன்றும், காங்கிரஸ் உட்பட எந்த அரசியல் கட்சியும் அதனுடன் கூட்டணி அமைக்க முன்வரவில்லை. தொடர்ந்த எதிர்மறையான விமர்சனங்களை கண்டு வரும் ஆம் ஆத்மி கட்சி தற்போது மக்களவை தேர்தலில், மொத்தமுள்ள ஏழு இடங்களிலும் படுதோல்வியை சந்திக்கவுள்ளதாக, தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

எனினும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் எதுவாகினும் அதனை நம்புவதற்கு பதிலாக வரும் மே 23-ஆம் தேதி வரை காத்திருந்து ஆட்சியை பிடிக்க போவது யார் என எதிர்பார்ப்போம் என தலைவர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Trending News