இனி அதிக பணம் செலவழிக்க தேவையில்லை! நரை முடி போக்க இந்த இலை போதும்

தலைமுடி ஆரோக்கியத்திற்கு ஷாம்பு, கண்டிஷனர், எண்ணெய், கலர் போன்றவற்றைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இவற்றில் ஆபத்தான இரசாயனங்கள் உள்ளன என்பதை மறந்து விடுகிறோம். கீழே குறிப்பிட்டுள்ள வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தினால், முடி பிரச்சனைக்கு இயற்கையான தீர்வு கிடைக்கும்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 25, 2023, 02:14 PM IST
  • உணவு நம் தலைமுடியை மிகவும் பாதிக்கிறது.
  • கூந்தலின் ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை.
  • கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது?
இனி அதிக பணம் செலவழிக்க தேவையில்லை! நரை முடி போக்க இந்த இலை போதும் title=

நரை முடியை போக்க கறிவேப்பிலை எப்படி உதவும்: நமது ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவைப் பொறுத்தது. தற்போதைய காலக்கட்டத்தில் ஜங்க் ஃபுட் பக்கம் மக்கள் அதிகம் சாய்ந்து கொண்டிருக்கிறார்கள். ருசியின் காரணமாக இந்த உணவை மக்கள் அதிகம் உட்கொள்கின்றனர். ஆனால் அது நேரடியாக நமது ஆரோக்கியத்தை பாதிக்கிறது. நாம் சாப்பிடுவது நம் தலைமுடியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. முடி உதிர்தல், முன்கூட்டிய நரைத்தல், வறண்ட கூந்தல், பொடுகு போன்ற பல பிரச்சனைகளுக்கு மோசமான உணவு முறையே முக்கிய காரணம். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. ஆம் முடி ஆரோக்கியத்திற்கு ஷாம்பு, கண்டிஷனர், எண்ணெய், கலர் போன்றவற்றை பயன்படுத்துகிறோம். ஆனால் இவற்றில் ஆபத்தான இரசாயனங்கள் உள்ளன என்பதை மறந்து விடுகிறோம். இந்த விலையுயர்ந்த பொருட்கள் அனைத்தும் முடி பிரச்சனைக்கு தற்காலிக தீர்வை மட்டுமே அளிக்கும். ஆனால் ஒரு பிரச்சனை தீர்ந்தால் இன்னொரு பிரச்சனை வரலாம். ஆனால் இப்போது இந்த வீட்டு வைத்தியத்தை பயன்படுத்தினால் முடி பிரச்சனைக்கு இயற்கையான தீர்வை பெறலாம்.

தலைமுடி நரை வர என்ன காரணம்?
வயதான அறிகுறிகளில் ஒன்று. முதுமையின் நேரடி அறிகுறியாக கூட இதை எடுத்துகொள்ளலாம். ஆனால் முன்கூட்டிய முடி நரைப்பது உங்களை தொல்லைக்கு ஆளாக்கலாம். மன ரீதியாகவும் பாதிக்க செய்யலாம். தோற்றத்தை குறைத்து காட்டும் இந்நிலையில் நம்பிக்கையை குறைக்கலாம். அதிலும் 25 வயதுக்கு முன்கூட்டியே நரைத்தல் என்பது உடல் ஆரோக்கிய குறைபாடாகவும் இருக்கலாம்.

கூந்தலின் ஆரோக்கியத்திற்கு கறிவேப்பிலை:
மெலனின் மற்றும் புதிய மெலனின் ஆகியவை நம் முடி நிறத்திற்கு காரணம். மெலனின் முடிக்கு கருப்பு நிறத்தை அளிக்கிறது. மெலனின் இல்லாததால், முடி வெள்ளையாக மாறும். அந்தவகையில் கறிவேப்பிலை முடியில் உள்ள மெலனின் குறைபாட்டை நீக்குகிறது. இதனால் கூந்தலை கருமையாக்க கறிவேப்பிலை உதவுகிறது. அத்துடன் கூந்தல் நிபுணர்களின் கூற்றுப்படி, கறிவேப்பிலையில் பல வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இதனால் கறிவேப்பிலையைப் பயன்படுத்துவதால் கூந்தல் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்கும்.

மேலும் படிக்க | 10 நாளில் தொப்பையை குறைக்க இந்த ஒரு ஜூஸ் மட்டும் போதும்

கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்துவது?:
கறிவேப்பிலையைப் பயன்படுத்தி ஹேர் மாஸ்க் செய்யலாம். இதற்கு கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய், வேப்ப இலை, வைட்டமின் ஈ கேப்சூல்கள் மற்றும் தயிர் தேவை. முதலில் கறிவேப்பிலை மற்றும் வேப்பிலையை மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும். பிறகு மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மற்றும் தயிர் சேர்த்து நன்கு பீட் செய்துக் கொள்ளவும். பின்னர் இந்த கலவையை சிறிது சூடாக்கவும். ஆறிய பிறகு கறிவேப்பிலை மற்றும் வேப்ப இலை கலவையை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது உங்கள் ஹேர் மாஸ்க் தயாராக உள்ளது.

முடிக்கு இதைப் பயன்படுத்துங்கள்:
முடிக்கு ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்துவதற்கு முன், தலைமுடியை சரியாகக் கழுவி உலர வைக்கவும். பின் முடி மற்றும் உச்சந்தலையில் ஹேர் மாஸ்க்கை தடவவும். ஒரு மணி நேரம் கழித்து முடியை மீண்டும் கழுவவும். இந்த வீட்டு வைத்தியத்தை வாரத்திற்கு இரண்டு முறை பின்பற்றினால், பலன் கட்டாயம் தெரியும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | நீரிழிவை ஒழித்துக் கட்டும் நார் சத்து நிறைந்த ‘சில’ உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News