குளிர் கால உதடு வெடிப்பு பிரச்சனை; செலவில்லாமல் மஞ்சள் தைலம் தயாரிக்கலாம்

குளிர்காலத்தில் உதடுகள் வெடிக்கும் பிரச்சனையை தீர்க்க வீட்டிலேயே மஞ்சளில் லிப் பாம் தயாரிக்கலாம். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 20, 2021, 07:21 PM IST
குளிர் கால உதடு வெடிப்பு பிரச்சனை; செலவில்லாமல் மஞ்சள் தைலம் தயாரிக்கலாம் title=

Turmeric lip balm: மஞ்சள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மஞ்சளில் அதிகம் காணப்படுகின்றன. மஞ்சளின் பயன்பாடு ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மிகவும் நல்லது. 

குளிர்காலம் நெருங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில் குளிர்காலத்தில் மஞ்சள் பயன்படுத்துவது மிகவும் நல்லது. மஞ்சள் தோல் மற்றும் உதடுகளுக்கு நல்லது என்று கருதப்படுகிறது. குளிர்காலத்தில் உதடுகளைப் பராமரிக்க, உதடுகளை வெடிப்பில் இருந்து காக்க மஞ்சள் லிப் பாம் மற்றும் லிப் ஸ்க்ரப் பயன்படுத்தலாம். மஞ்சள் லிப் பாம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.

ALSO READ | Health Alert! சிறுநீரகத்தை சீரழிக்கும் ‘8’ பொதுவான தவறுகள்..!!

மஞ்சள் உதட்டு தைலம் செய்வது எப்படி

மஞ்சள் உதட்டு தைலம், அதாவது மஞ்சள் லிப் பாம் தயாரிக்க, ஒரு டீஸ்பூன் கிளிசரின், இரண்டு டீஸ்பூன் பெட்ரோலியம் ஜெல்லி, ஒரு தேக்கரண்டி தேன், மஞ்சள் மற்றும் மர தேயிலை எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். மஞ்சளில் இருந்து லிப் பாம் தயாரிக்க, பெட்ரோலியம் ஜெல்லி, கிளிசரின், தேன், மஞ்சள் மற்றும் மரம் தேயிலை எண்ணெயை (tree tea oil) ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கவும். இது ஒரு மென்மையான பேஸ்டாக ஆனவுடன் மூடியுள்ள டப்பாவில் வைக்கவும். இதன் பிறகு இந்த கலவையை ஃப்ரிட்ஜில் வைக்கவும். 3 முதல் 4 மணி நேரத்தில் உங்கள் லிப் பாம் தயாராக இருக்கும். 

ALSO READ | Health Alert! அளவுக்கு மிஞ்சிய சீரகம் பெரும் கேடு விளைவிக்கும்..!!

மஞ்சள் லிப் பாம் நன்மைகள்

குளிர்காலத்தில், உதடுகளில் ஏற்படும் பிரச்சனைக்கு மஞ்சள் லிப் பாம் சிறந்த தீர்வாக இருக்கும். இது உதடுகளை மென்மையாக வைத்திருக்கும். குளிர்கால உதட்டு பராமரிப்பிற்கு வீட்டில் தயாரிக்கப்படும் இந்த மஞ்சள் லிப் பாம் மிகவும் நல்லது. 

ALSO READ | Health Alert: காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாத ‘5’ உணவுகள்..!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News