கொலஸ்ட்ராலை எரிக்கும் மேஜிக் ஜூஸ்... தினமும் குடித்தால் பலன் நிச்சயம்!

கொழுப்பினால் நரம்புகளில் வீக்கம் ஏற்பட்டு, இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால், இதயத்திற்கு இரத்த ஓட்டம் சரியாக இருக்காது. இதயத்தில் அழுத்தம் என்றால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 3, 2023, 03:04 PM IST
  • ரத்த ஓட்டத்தில் பிரச்சனை ஏற்படும் வகையில் நரம்புகளில் கொழுப்பு ஒட்டிக்கொள்கிறது.
  • சைலண்ட் கில்லர் நோய்களை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம்.
  • இரத்த அழுத்தமும் அதிகமாகத் தொடங்குகிறது.
கொலஸ்ட்ராலை எரிக்கும் மேஜிக் ஜூஸ்... தினமும் குடித்தால் பலன் நிச்சயம்! title=

கொலஸ்டிரால் என்னும் கெட்ட கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் இரண்டும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கின்றன. இந்த இரண்டு நோய்களும் வந்தால் அதைக் கட்டுப்படுத்துவதும் கடினம். ஆனால் உணவில் கவனம் செலுத்தினால் இரண்டு நோய்களையும் கட்டுக்குள் வைத்திருக்கலாம். நரம்புகளில் கொழுப்பு அதிகரிக்கத் தொடங்கும் போது, ​​இரத்த அழுத்தமும் அதிகமாகத் தொடங்குகிறது.

ரத்த ஓட்டத்தில் பிரச்சனை ஏற்படும் வகையில் நரம்புகளில் கொழுப்பு ஒட்டிக்கொள்கிறது. கொழுப்பினால் நரம்புகளில் வீக்கம் ஏற்பட்டு, இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால், இதயத்திற்கு இரத்த ஓட்டம் சரியாக இருக்காது. இதயத்தில் அழுத்தம் என்றால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். அதனால்தான் இந்த இரண்டும் சைலண்ட் கில்லர் நோய்களையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். இதற்கு தக்காளி சாறு சிறந்த மருந்தாக வேலை செய்யும்.

உணவு அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், புரதம், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தக்காளி சாறு பல நோய்களுக்கு மருந்தாக உள்ளது என தெரியவந்துள்ளது

கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க எவ்வளவு சாறு குடிக்க வேண்டும்

நாளிதழின் அறிக்கையின்படி, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைக்க, தினமும் ஒரு கிளாஸ் தக்காளி சாறு உப்பு இல்லாமல் குடிக்க வேண்டும். ஆய்வின்படி, தக்காளி சாறு குடிப்பவர்களின் சிஸ்டாலிக் இரத்த அழுத்தம் 141.2 முதல் 137 mmHg ஆகவும், டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் 83.3 முதல் 80.9 mmHg ஆகவும் குறைந்துள்ளது. அதே நேரத்தில், அதிக கொலஸ்ட்ரால் உள்ள 125 பங்கேற்பாளர்களில், LDL கொழுப்பின் அளவு அதாவது கெட்ட கொழுப்பின் அளவு சராசரியாக 155.0 இலிருந்து 149.9 mg/dL ஆக குறைந்தது.

மேலும் படிக்க | கண்ணுக்கு நல்லதுன்னு Vitamin A கண்டபடி சாப்பிடாதீங்க.. பேராபத்து!

 இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தக்காளி சாறு

தக்காளியில் கரோட்டினாய்டுகள், வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் காமா-அமினோபியூட்ரிக் அமிலம் போன்ற பல்வேறு உயிர்வேதியியல் சேர்மங்கள் உள்ளன, அவை இருதய நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

தினமும் குடிக்க தக்காளி சாற்றின் அளவு

தினமும் 84 முதல் 200 மில்லி ஜூஸ் குடிப்பது நன்மை பயக்கும். அதில் உப்பு இருக்கக்கூடாது. கடுமையான உடற்பயிற்சிக்குப் பிறகும் உடலில் ஆற்றலைப் பராமரிக்க தக்காளி சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது யூரிக் அமிலத்தையும் குறைக்கிறது.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | அடிக்கடி கை, கால்கள் மரத்து போகின்றதா... அலட்சியம் வேண்டாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News