உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க... சில எளிய பயிற்சிகள்!

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொண்டு வந்தாலும், உடற்பயிற்சி மூலம் அதனை கட்டுக்குள் வைக்கலாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், மாத்திரையின் அளவையும் மெதுமெதுவாக குறைத்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 14, 2024, 04:02 PM IST
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க... சில எளிய பயிற்சிகள்! title=

இன்றைய காலகட்டத்தில், உயர் ரத்த அழுத்த பிரச்சனை என்பது, பொதுவான பிரச்சனையாக உள்ளது. அதனை கவனிக்காமல் விட்டு விட்டால், மாரடைப்பு பக்கவாதம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க, மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துகள் எடுத்துக் கொண்டு வந்தாலும், உடற்பயிற்சி மூலம் அதனை கட்டுக்குள் வைக்கலாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தால், மாத்திரையின் அளவையும் மெதுமெதுவாக குறைத்து கொள்ளும் நிலை ஏற்படும்.

உயர் ரத்த அழுத்தம் என்றால் என்ன

பொதுவாக ஆரோக்கியமான ஒருவருக்கு, ரத்த அழுத்தம் என்பது 120/ 80 மில்லி மீட்டர் பாதரச அளவு இருந்தால் அது இயல்பான ரத்த அழுத்தம் என்று கூறப்படுகிறது. இதில் 120 என்ற எண் அழுத்தம் என கூறப்படுகிறது. அதாவது நமது இதயம் சுருங்கி ரத்தத்தை உடலுக்கு தள்ளும் போது ஏற்படும் அழுத்தம் ஆகும். 80 என்பது, ரத்தத்தை வெளியேற்றிய பிறகு, இதயம் விரிந்து, ரத்தத்தைப் பெற்றுக் கொள்ளும் போது ஏற்படும் அழுத்தத்தின் அளவாகும். ரத்த அழுத்தம் 140/90 மில்லி மீட்டருக்கு மேல் இருந்தால் அது உயர் ரத்த அழுத்தம் என்று அளிக்கப்படுகிறது.

நடை பயிற்சி

நடைபயிற்சி என்பது எல்லோராலும் கடைபிடிக்க முடிந்த ஒரு பயிற்சி. இதற்கு சிறப்பான உபகரணம், அல்லது. ஏற்பாடுகள் ஏதும் தேவையில்லை. ஒரு நல்ல தரமான ஷூ இருந்தால் போதுமானது. நடை பயிற்சி உங்கள் இதயத்தை வலுப்படுத்தி, ரத்த ஓட்டத்தை அதிகரித்து, ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது. கூடவே, மன அழுத்தத்தை குறைத்து, மனநிலையை மேம்படுத்துகிறது. மன அழுத்தமும் உயர் ரத்த அழுத்தத்திற்கு ஒரு காரணம்.

சைக்கிள் ஓட்டுதல்

சைக்கிள் ஓட்டுவதன் மூலம், உயர் ரத்த அழுத்தத்தை சிறப்பாக கட்டுப்படுத்தலாம். இது தசைகளையும் வலுவாக்குறது. உங்கள் இதயம் சீராக இயங்க, துடிப்புடன் இருக்க சைக்கிளில் மிகவும் உதவும். நாளொன்றுக்கு குறைந்தது 30 நிமிடங்கள் சைக்கிள் ஓட்டுவது வியக்கத்தக்க வகையில் பலன் அளிக்கும்.

மேலும் படிக்க | ஈறுகளில் பயங்கர வலியா? ‘இந்த’ வீட்டு வைத்தியங்களை வைத்து சரி செய்து கொள்ளலாம்..

சுவாச பயிற்சி

சுவாசப் பயிற்சி ரத்த அழுத்த அளவை நிர்வகிக்க, பெரிதும் உதவுகிறது என்று ஜப்பானில் நடத்தப்பட்ட ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. சுமார் 30 நொடிகளில் ஆறு ஆழமான சுவாசங்களை எடுத்துக்கொண்டு பயிற்சி செய்வது, அழுத்தத்தை குறைக்கும் என்கின்றனர் நிபுணர்கள். மூச்சுப் பயிற்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தாராளமாக செய்யலாம்.

நீச்சல் பயிற்சி

நீச்சல் பயிற்சியில், நமது முழு உடலுக்கும் வேலை கிடைக்கிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நீச்சல் பயிற்சி, தசைகளை வலுவூட்டி, ரத்த அழுத்தத்தை அதிகரித்து, மனதை ரிலாக்ஸ் செய்கிறது. தினமும் 30 நிமிட நீச்சல் பயிற்சி, ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு வகையில் உடலை ஆரோக்கியமாகவும், கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது

முக்கிய குறிப்பு

பொதுவாக உயர் ரத்த அழுத்தம் இருந்தால், உடற்பயிற்சி செய்வதற்கு முன்பாக, மருத்துவ ஆலோசனை பெற்று, அவர்கள் பரிந்துரைக்கும் பயிற்சிகளை செய்வது சிறப்பு. மேலும் பயிற்சி பெற்ற பயிற்சியாளரின் உதவியுடன், உடற்பயிற்சிகளை செய்வது, பாதுகாப்பானது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | கொலஸ்ட்ரால் அதிகமானால்... இந்த அறிகுறிகள் தோன்றும், அலட்சியப்படுத்தாதீர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News