UTI தாெற்றால் அவதியா? ‘இந்த’ சிம்பிள் விஷயங்களை செய்தால் சீக்கிரம் சரியாகும்!

Tips To Prevent Urinary Tract Infection (UTI) : UTI தொற்று, பெரும்பாலும் பெண்களை பாதிக்கும் நோய் பாதிப்பாக இருக்கிறது. இதை எப்படி சரி செய்வது? சிம்பிள் டிப்ஸ், இதோ.   

Written by - Yuvashree | Last Updated : Mar 6, 2024, 12:57 PM IST
  • பெரும்பாலான பெண்களுக்கு UTI பாதிப்பு ஏற்படும்
  • UTI என்றால் என்ன?
  • எதை செய்தால் இதிலிருந்து தப்பிக்கலாம்?
UTI தாெற்றால் அவதியா? ‘இந்த’ சிம்பிள் விஷயங்களை செய்தால் சீக்கிரம் சரியாகும்!  title=

Tips To Prevent Urinary Tract Infection (UTI) : பெண்களுக்கு சிறுநீர்ப்பாதையில் ஏற்படும் தொற்றை ஆங்கிலத்தில் Urinary Tract Infection (UTI) என குறிப்பிடுவர். இந்த நோய் தொற்று ஏற்படும் பலருக்கு அசௌகரியம் ஏர்படும். இந்த நோய் எதனால் ஏற்படுகிறது? என்ன செய்தால் இந்த நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்? முழு விவரம், இதோ!

UTI என்றால் என்ன? 

UTI தொற்றுகள், பொதுவாக சிறுநீர்ப்பை அல்லது சிறுநீர்க்குழாயில் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இன்னும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சிறுநீர்ப்பாதை தொற்று சிறுநீர்ப்பையில் ஏற்படுமாம். அப்படி ஏற்பட்டால் அடிக்கடி சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு, சிறுநீர் கழிக்கும் போது வலி ஆகியவை ஏற்படலாம். சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டால் முதுகு வலி, குமட்டல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படலாம். இதை தவிர்க்க, இதிலிருந்து குணமடைய சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அவை என்னென்ன தெரியுமா? 

உடலில் நீர்ச்சத்தினை தக்க வைத்துக்கொள்வது:

உடலில் நீர்ச்சச்த்தினை (Staying Hydrated) தக்கவைத்துக்கொள்வது ஒட்டுமொத்த உடல் நலனிற்கும் நல்லதாகும். இதனால் UTI தொற்றுக்கு வழி வகுக்கும் பாக்டீரியாக்களை  சிறுநீர் குழாயில் இருந்து வெளியேற்றலாம். உடலில் நீர்ச்சத்தினை வைத்துக்கொள்ள, தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஜூஸ், இயற்கை பானங்கள் மூலமாகவும் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளலாம். 

வைட்டமின் சி:

வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்வதால் UTI நோய் பாதிப்புகளை தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரீஸ், குடை மிளகாய் உள்ளிட்ட உணவு பொருட்களில் வைட்டமின் சி சத்துக்கள் நிரம்பியுள்ளன. இது, சிறுநீரால் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்களை தவிர்க்கும். 

மேலும் படிக்க | மாதவிடாய் சமயத்தில் நடைப்பயிற்சி செய்யலாமா? மருத்துவர்கள் கூறுவது இதுதான்!

கிரான்பெர்ரி பழச்சாறு:

UTI தொற்றை தவிர்க்க, கிரான்பெர்ரி பழங்கள் பெரிய அளவில் உதவி புரிவதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். சர்க்கரை கலக்காத கிரான்பெர்ரி பழச்சாற்றினை ஒரு டம்ளர் குடிப்பதால் தொற்றை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை உடலில் தங்க விடாமல் செய்யலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், இதில் எந்தவித சுவை கூட்டிகளையும் சேர்க்காமல் இயற்கையான பழச்சாறாக சாப்பிடுவது சிறந்தது. 

UTI

ப்ரோபயோடிக் உணவுகள்:

பெண்களின் குடல் ஆரோக்கியமும் UTI நோய் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதில் பெரும்பங்கு ஆற்றுகிறது. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ப்ரோபயோடிக் உணவுகள் உதவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தயிர், இட்லி, தோசை, ஊறுகாய், பனீர் உள்ளிட்ட உணவுகளில் ப்ரோபயோடிக் சத்துகள் அடங்கியுள்ளன. 

உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்:

UTI தொற்றுகளை தவிர்க்க, உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். சிறுநீர் கழித்த பின்பு அந்த இடத்தை தூய்மையாக சுத்தம் செய்து துடைத்தல், பாக்டீரியாக்கள் பரவாமல் தடுக்கும். உங்களுக்கு ஏதுவான சோப்புகள் அல்லது பிற லோஷன்களை வைத்து சுத்தம் செய்யலாம். இதனால் பிறப்புறுப்பில் ஏற்படும் எரிச்சலையும் தடுக்க முடியும். 

சிறுநீர் கழிப்பது:

பெண்கள் பலர், சிறுநீரை அடக்கி வைக்கும் பழக்கத்தினை கொண்டிருப்பர். இதனாலும், சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படலாம். எனவே, வெகு நேரத்திற்கு சிறுநீரை அடக்கி கொள்ள வேண்டாம். 3-4 மணி நேரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக சிறுநீர் கழிக்க வேண்டும். 

உடலுறவின் போது கவனம்:

உடலுறவு கொள்வதற்கு முன்பும் பின்பும், பிறப்புறுப்பை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். இது, UTI பாக்டீரியாக்களை பரவாமல் தடுக்கும். 

மேலும் படிக்க | 30+ ஆண்கள் கவனத்திற்கு... இந்த விஷயங்கள் குறித்து ரொம்ப எச்சரிக்கையாக இருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News