வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கக்கூடாதா? - தெரிந்து கொள்ளுங்கள்

Drinking Juice on an Empty Stomach: வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கக்கூடாது என மருத்துவர்கள் சொல்வதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். காலையில் ஜூஸ் குடிப்பவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை அறிந்து கொள்வது அவசியம்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 6, 2024, 06:28 AM IST
  • காலை வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கலாமா?
  • நீரிழிவு நோயாளிகள் ஜூஸ் குடிப்பதில் கவனம்
  • காலையில் வெறும் வயிற்றில் வேண்டாம்
வெறும் வயிற்றில் ஜூஸ் குடிக்கக்கூடாதா? - தெரிந்து கொள்ளுங்கள் title=

கோடை வெயில் கொளுத்த தொடங்கிவிட்டதால் தினமும் ஜூஸ் குடிக்க தொடங்கிவிட்டனர் மக்கள். நீர்சத்து குறைபாட்டை தவிர்க்கவும், செரிமான பிரச்சனைகளை தவிர்த்து ஆரோக்கியமாக இருக்கவும் கோடை காலங்களில் ஜூஸ் குடிப்பது நல்ல விஷயம் என்றாலும், அதனை எத்தனை முறை குடிக்கலாம்?, எப்போது குடிக்க வேண்டும் என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். பழச்சாறுகளில் ஆரோக்கியமான சத்துக்கள் அதிகம் இருந்தாலும் அதில் இருக்கும் அமிலத்தன்மை சிலருக்கு பிரச்சனை ஏற்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. அதனால் அது குறித்த அடிப்படை தகவல்களை தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

மேலும் படிக்க | Migraine: பாடாய்படுத்தும் ஒற்றைத் தலைவலி... காரணங்களும் தீர்வுகளும்

ஜூஸ் குடிப்பது நல்லதா?

சுகாதார நிபுணர்கள் சொல்வது என்னவென்றால், ஒரு கப் ஜூஸில் 117 கலோரிகள் மற்றும் சுமார் 21 கிராம் சர்க்கரை உள்ளது. அதனால் சில சமயங்களில் அது உடலை பாதிக்கலாம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் பழச்சாறு எடுத்துக் கொள்வதில் கவனம் தேவை. பழச்சாறு அதிகமாக குடிப்பதால் குடலில் அதிகமாக புழுக்கள் உருவாகும். இது இரைப்பை நோயாளிக்கு சிரமத்தை ஏற்படுத்தும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு பழச்சாறு குடிக்க வேண்டும்?

மருத்துவர்களின் கூற்றுப்படி, வயதானவர்கள் ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் சாறுக்கு மேல் குடிக்கக்கூடாது, ஏனெனில் அதிகப்படியான சாறு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதன் தாக்கம் உடனே தெரியாவிட்டாலும் பிற்காலத்தில் உடலை பாதிக்கலாம்.

எப்போது ஜூஸ் குடிக்கக்கூடாது?

காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பதால் வயிற்றில் உள்ள அமிலத்தன்மை பிரச்சனை அதிகரிக்கும். எனவே ஏதாவது சாப்பிட்ட பிறகுதான் ஜூஸ் குடிக்கவும். மதியம் ஜூஸ் குடிப்பது நன்மை தரும்.

பழங்களை எப்படி சாப்பிடலாம்?

பழச்சாறு அதிகம் பிடிக்கும் பட்சத்தில் ஜூஸ் செய்து சாப்பிடுபவர்கள் அதிகம். இதில் அதில் சத்துக்கள் உள்ளதை மறுக்க முடியாது. அதேநேரத்தில் பழத்தை ஜூஸ் செய்து விட்டு அதன் தோலையும் சாப்பிட வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் தினமும் ஜூஸ் குடிப்பதற்கு பதிலாக பழங்களை சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

பொதுவாக நீரிழிவு நோய், அமிலத்தன்மை பிரச்சனை, இரப்பை மற்றும் குடல் பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரிலேயே பழச்சாறுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஜூஸ் மற்றும் அளவின் அடிப்படையிலேயே எடுத்துக் கொள்ளவ வேண்டும். பொது அறிவுரையின்படி ஜூஸ் வகைகளில் ஏதேனும் நீங்கள் குடித்தால் அது உங்கள் ஆரோக்கியத்துக்கு கூடுதல் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே மருத்துவர் ஆலோசனை இன்றி பழச்சாறுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

மேலும் படிக்க | மாதவிடாய் சமயத்தில் நடைப்பயிற்சி செய்யலாமா? மருத்துவர்கள் கூறுவது இதுதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News