Rice Flour Face Packs: முகத்துக்கு அழகு தரும் அரிசி மாவின் அற்புத பயன்கள்

Rice flour beneficial for skin: அரிசி மாவு தோல் பராமரிப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். வயதான அறிகுறிகளைக் குறைக்க இதைப் பயன்படுத்தலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 14, 2021, 07:12 AM IST
Rice Flour Face Packs: முகத்துக்கு அழகு தரும் அரிசி மாவின் அற்புத பயன்கள் title=

Rice flour beneficial for skin: இயற்கை மருத்துவம், இயற்கை அழகு என்று விரும்புபவர்கள் பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டு பராமரிக்கவே விரும்புவார்கள். அதன்படி அரிசி மாவும் சருமத்துக்கும் பலவிதமான நன்மைகளை தருகிறது. எந்தெந்த சரும பிரச்சனைகளுக்கு எப்படியெல்லாம் எதனுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.

வரித்தழும்புகளுக்கு தீர்வு: உடலில் இருக்கும் ஸ்ட்ரெச் மார்க் விரட்டி அடிக்க அரிசி மாவு (Rice Flour) உதவும். அரிசிமாவுடன் மஞ்சள் தூள், காய்ச்சாத பசும் பால் சேர்த்து பேஸ்ட் போல் குழைக்கவும். இதை ஸ்ட்ரெச் மார்க் (Skin Care) இருக்கும் இடங்களில் தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தினமும் குளிப்பதற்கு அரைமணி நேரம் முன்பு இதை தடவி வந்தால் தழும்புகள் மறைந்து சருமம் சீராக மாறும்.

Also Read | நடுத்தர வயதினரிடையே அதிகரிக்கும் “Stress Fracture”; அதிக உடற்பயிற்சி காரணமா..!!!

​முகத்துக்கு ஃபேஸ் பேக்: அரிசி மாவு 3 டீஸ்பூன், பன்னீர் 3 டீஸ்பூன் மற்றும் தயிர் 3 டீஸ்பூன் சேர்த்து நன்றாக குழைத்து முகத்தில் பேக் போடவும். பிறகு நன்கு மசாஜ் செய்து விடவும். அப்படியே உலரவிடவும். 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த ஃபேஸ் பேக் அழுக்குகளை அகற்றும். முகத்தின் மங்கிய நிறத்தை மாற்றும். 

சரும அழற்சிக்கு: அரிசி மாவை சிறிது நீரில் கரைத்து ஐஸ்க்யூப்களில் ஊற்றி வைக்கவும். அவை ஐஸ்கட்டிகளாக உறைந்ததும் அதை கொண்டு சருமத்தில் முகம் முழுக்க எங்கெல்லாம் அரிப்பு பிரச்சனை உள்ளதோ அங்கெல்லாம் ஒத்தடம் கொடுக்கவும். தினமும் 15 நிமிடங்கள் வரை இப்படி செய்து வந்தால் சரும அழற்சி நீங்கும்.

இறந்த செல்கள் நீங்க: அரிசி மாவுடன் சர்க்கரை சேர்த்து உருட்டி முகத்தில் இலேசாக மசாஜ் செய்யவும். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் மூக்கு நுனிகள் கழுத்தில் இருக்கும் கருமைகள் போன்ற இடங்களில் நன்கு ஸ்கரப் செய்து பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். பிறகு ஐஸ்கட்டிகள்கொண்டு முகத்துக்கு ஒத்தடம் கொடுக்கவேண்டும். முதல்முறை செய்யும் போதே முகத்தில் பளிச் பார்க்கலாம்.

​மேக் அப்: மேக் அப் கலைப்பதற்கு அதிக நேரம் பிடிக்கிறது என்பவர்கள் எளிதாக முகத்தை சுத்தம் செய்ய அரிசி மாவு பயன்படுத்தலாம். அரிசிமாவை பன்னீரில் குழைத்து முகத்தில் தடவி இலேசாக ஐந்து நிமிடங்கள் தேய்த்து கழுவிய பிறகு முகத்தை பார்த்தால் மேக் அப் முழுவதும் நீங்கி முகம் பளிச்சென்று மின்னும்.

Also Read | Weight Management: உங்கள் உணவில் எவ்வளவு கலோரி இருக்கிறது தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News