உடனடியாக உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த சிம்பிள் யோகாசனங்களை செய்து பாருங்கள்!

International Yoga Day 2023: யோகாசனங்கள் உடல் மட்டுமன்றி நமது ஆன்மா மற்றும் மனதுடனும் தொடர்புடையவை. இவற்றால், நமது உடல் எடையையும் குறைக்க முடியும். அது எப்படி தெரியுமா?  சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, உங்கள் உடல் எடையை உடனடியாக குறைக்கும் சில யோகாசனங்களை தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

Written by - Yuvashree | Last Updated : Jun 20, 2023, 04:49 PM IST
  • சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்படுகிறது.
  • உடனடியாக உடல் எடையை குறைப்பதற்கென்று சில யோகாசனங்கள் இருக்கின்றன.
  • அவை என்னென்ன ஆசனங்கள் தெரியுமா?
உடனடியாக உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த சிம்பிள் யோகாசனங்களை செய்து பாருங்கள்! title=

உடலில் உள்ள பல்வேறு உபாதைகளை தீர்க்க யோகா பயிற்சிகள் உதவி புரிகின்றன. சில உடற்பயிற்சிகள் யோகாசனங்களில் இருந்து மறுவி மாடர்ன் பயிற்சிகளாக உருவாகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில யோகாசன பயிற்சிகள் உங்கள் உடல் எடையை சீக்கிரத்தில் குறைக்க உதவும் அவை என்னென்ன தெரியுமா? 

யோகா பயிற்சியினால் உடல் எடையை குறைக்க முடியுமா? 

யோகாவை தினமும் கடைப்பிடித்து வருபவர்களின் உடல், வலிமையாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்கும். இதற்கு காரணம், அவர்கள் யோகா செய்வது மட்டுமன்றி, ஹெல்தியான டயட்டையும் மேற்கொள்வதுதான். ஆரோக்கிய டயட்டில் நாம் அதிகம் காய்கறிகளையும் பழங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் யோகா-கொஞ்சம் டயட் உங்கள் உடல் எடை சீக்கிரமாக குறைய உதவும். மன அழுத்தத்தினை போக்கவும், பதற்றத்தை குறைக்கவும் கூட யோகா உதவுகிறது. 

மேலும் படிக்க | சென்னையில் பேய் உலாவுவதாக கூறப்படும் இடங்கள்..இங்கு செல்கையில் உஷாராக இருக்கவும்..!

உடல் எடையை குறைக்க உதவும் யோகாசனங்கள்: 

சதுரங்க தாசனா: 

உடலின் பாககங்கள் அனைத்தையும் வலுப்பெற செய்யும் ஒரு ஆசனம், சதுரங்க தாசனா. இதை ஆங்கிலத்தில் ப்ளாங்க் என குறிப்பிடுவர். இந்த யோகாசனம், செய்வதர்கு சுலபமாக இருந்தாலும் உடல் எடையை குறைப்பதற்கு நல்ல உறுதுணையாக இருக்கும். வயிற்றுப்பகுதியில் இருக்கும் தசைகளை நன்கு வலுவாக்கி உடல் கொழுப்பை கரைக்க இந்த ஆசனம் உதவும். 

விராபத்ராசனா:

இந்த ஆசனம், உங்கள் தொடை மற்றும் தோள்பட்டை பகுதிகளில் உள்ள தசைகளை குறைக்கவும் அவற்றை நன்கு வலுப்படுத்தவும் உதவும். இதை எவ்வளவு நேரம் செய்கிறோமோ அவ்வளவு பலன் நமக்கு கிடைக்குமாம். வயிற்று தொப்பையை குறைக்கவும் இந்த ஆசனம் உதவும் என சில உடற்பயிற்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

திரிகோனாசனா: 

திரிகோனாசனா, உங்களுக்கு செரிமான கோளாறு ஏற்படாமல் தடுக்கும். வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்பை குறைத்து அவை ஃப்ளாட்டாக மாற இந்த ஆசனம் உதவும். இந்த ஆசனம் செய்வதால் உங்கள் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் நன்கு அதிகரிக்கும். நமது மனதை ஒருநிலைப்படுத்தவும் உடலை சமநிலை படுத்தவும் இந்த ஆசனம் உதவும். 

அதோ முக ஸ்வனாசனா: 

இந்த ஆசனத்தால் நம் உடலில் உள்ள உறுப்புகள் எல்லாமே பயன் பெறும். குறிப்பாக கைகள், தொடைப்பகுதி மற்றும் பின்பகுதி என அனைத்திலும் இருக்கும் கொழுப்பினை கரைக்க இந்த ஆசனம் உதவும். உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை சீராக்குவது மட்டுமன்றி முடி உதிர்வுக்கும் இந்த ஆசனம் தீர்வாக அமையும். இந்த ஆல் இன் ஒன் ஆசனத்தால் உடல் எடையும் சீக்கிரமாகவே குறையுமாம். 

சேது பந்தா சர்வங்காசனம்: 

ஆங்கிலத்தில் இந்த ஆசனத்தை ப்ரிட்ஜ் போஸ் என்று அழைப்பார்கள். இது, செரிமானத்திற்கான ஹார்மோன்களை சரிசெய்து உங்களது தைராடு அளவை சமநிலையில் வைத்திருக்கும். தசை மற்றும் எலும்புகளை வலுவாக்குவதிலும் இந்த ஆசனம் பெரும் பங்கு வகிக்கிறது. கழுத்து வலி மற்றும் முதுகு வலிக்கும் இந்த ஆசனம் நன்றாக உதவும். 

தனுராசனம்:

வயிற்றை தரையில் வைத்து இரண்டு கால்களையும் உங்கள் கைகளால் பிடிப்பதுதான் தனுராசனம். இது தொப்பையை குறைக்கவும் கொழுப்பை குறைக்கவும் உதவி புரியும். இதனால், தொடை மற்றும் கையில் உள்ள தசைகள் குறையும். 

சூர்ய நமஸ்காரம்:

சூர்ய நமஸ்காரம் செய்வதால், நம் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி தசைகள் வலுபெறும். மெட்டபாலிசத்தை அதிகரிப்பதிலும் தசைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதிலும் இந்த ஆசனம் பெரும் பங்கு வகிக்கின்றது. 

மேலும் படிக்க | கனவுகளால் எதிர்காலத்தை கணிக்க முடியுமா? ஆச்சரியப்படுத்தும் அதிசய உண்மை..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News