மலச்சிக்கலை தீர்க்கும் ‘இந்த’ பால்! தினமும் குடிப்பதால் ஏற்படும் 5 நன்மைகள்..

Oats Milk Benefits Tamil: தினமும் ஓட்ஸ் பால் குடிப்பதால் உடலில் பல நன்மைகள் ஏற்படும். அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம் வாங்க.   

Written by - Yuvashree | Last Updated : Feb 9, 2024, 05:42 PM IST
  • ஓட்ஸ் மில்க் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.
  • மலச்சிக்கலை தவிர்க்கும்
  • இன்னும் பிற நன்மைகள், இதோ.
மலச்சிக்கலை தீர்க்கும் ‘இந்த’ பால்! தினமும் குடிப்பதால் ஏற்படும் 5 நன்மைகள்.. title=

Oats Milk Benefits Tamil: ஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைக்கும் பலர், அவர்களின் டயட்டில் ஓட்ஸ் பாலை உபயோகப்படுத்துகின்றனர். இதில், பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்திருக்கின்றன. சத்து நிறைந்த நல்ல பால் வகைகளுள் ஒன்று இது. இதனை, ஓட்ஸ் மற்றும் தண்ணீர் கொண்டு உருவாக்க வேண்டும். இதில் லாக்டோஸ் இல்லாததால் பால் அலர்ஜி இருப்பவர்களும் இதனை குடிக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதில் இருக்கும் சத்துகள் கொழுப்பை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவுகின்றன. 

எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவும்:

ஓட்ஸ் பாலில் கால்சியம், இரும்பு சத்து, பொட்டாசியம் மற்றும் மக்னீசிய சத்துகள் நிறைந்துள்ளன. இவை, எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் இந்த பால் உதவுகிறது. மேலும், இதில் உள்ள வைட்டமின் டி சத்துகள் எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது. ஆண்டி ஆக்ஸிடட்ன்ஸ்களை எதிர்த்து போராடுட்ம் வைட்டமின் ஈ சத்துகளும் ஓட்ஸ் பாலில் உள்ளன. 

மலச்சிக்கலை எதிர்த்து போராடும்:

சாப்பிட்ட உணவுகளை எளிதில் செரிமானம் செய்யும் சக்தி, ஓட்ஸ் பாலில் உள்ளது. எளிதில் கரையக்கூடிய இதன் சத்து பிற உணவுகளின் செரிமானத்திற்கும் உதவுகிறது. இதனால் குடல் ஆரோக்கியம் மேம்பட்டு, மலச்சிக்கலை தவிர்க்கலாம். மேலும், குடல் அழற்சிகளையும் எதிர்த்து போராடுகிறது, ஓட்ஸ் மில்க்.

மேலும் படிக்க | Facial Hair: முகத்தில் முடி வளருதா? ‘இந்த’ வைத்தியம் செய்தால் சரியாகும்!

ரத்தத்தின் சர்க்கரை அளவை குறைக்கும்:

எளிதில் சரிமானம் ஆகும் சக்தி கொண்ட இந்த ஓட்ஸ் பால், ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை அளவையும் குறைக்கவல்லது. இன்சுலின் அளவையும் க்ளுக்கோஸ் அளவையும் குறைப்பதனால் ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை அளவும் குறைகிறது. ஓட்ஸ் பால், கிளைசெமிக் கட்டுப்பாட்டை பாதுகாக்க உதவுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

உடல் எடை குறைப்பு:

க்ளுட்டன் சத்து, இன்சுலின் மற்றும் உடல் பருமனுக்கு வழிவகை செய்வதாக ஒரு ஆய்வறிக்கை கூறுக்கிறது. ஆனால், ஓட்ஸ் பாலில் இருக்கும் அதிக ஃபைபர் சத்துகள் உடலில் க்ளூட்டன் சத்தினை அதிகரிக்காமல் உடல் எடையை கண்ட்ரோலில் வைத்துக்கொள்ள உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதை சாப்பிடுவதால் வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதனால், பசியை தாண்டும் ஹார்மோன்கள் தூண்டாமல் தவிர்க்கலாம். இதனால் அதிகம் சாப்பிடுவதையும் குறைக்கலாம். 

கெட்ட கொழுப்பை ஆதரிக்காது:

கொழுப்பில் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என இரு வகை இருக்கின்றன. அதில், LDL வகை கொழுப்புகளை கெட்ட கொழுப்பு என்கின்றோம். ஆனால், ஓட்ஸ் பால் இந்த வகையான கொழுப்பினை உடலில் உற்பத்தி செய்யாது. இது, மெட்டபாலிச சத்துக்களை அதிகரித்து, கெட்ட கொழுப்பை உடலில் தங்க விடாமல் செய்கின்றது. இதனால் இருதய நோய் பாதிப்புகள் வராமலும் தடுக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். 

மேலும் படிக்க | பொடுகு தொல்லை, முடி உதிர்வு, முடி வெடிப்பு-3 பிரச்சனை..ஒரே தீர்வு! ‘இதை’ செய்யுங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News