கருவளையங்களை மாயமாய் மறைய செய்யும் சில எளிய வீட்டு வைத்தியங்கள்!

Eye Care Tips: கருவளையங்கள் முக அழகை குலைக்கிறது என்பதோடு, வயதான தோற்றத்தை கொடுக்கிறது. அதனை சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் நீக்கலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 31, 2022, 01:49 PM IST
  • கருவளையங்களை போக்க, சிலர் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர்.
  • கருவளையங்கள் முக அழகை குலைக்கிறது.
  • கருவளையங்களை அகற்ற சில வீட்டு வைத்தியங்கள்.
கருவளையங்களை மாயமாய் மறைய செய்யும் சில எளிய வீட்டு வைத்தியங்கள்! title=

கருவளையம் பிரச்சனை இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. இன்றைய காலகட்டத்தில், வேலையில் இருக்கும் பெரும்பாலானோர், கணினி முன் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதாலும், போதுமான தூக்கம் இல்லாததாலும் கருவளையம் பிரச்சனை என்பது பொதுவாக அனைவருக்கும் உள்ள ஒரு பிரச்சனையாகி விட்டது. கருவளையங்கள் முக அழகை குலைக்கிறது என்பதோடு, வயதான தோற்றத்தை கொடுக்கிறது. பொதுவாக பல பெண்கள் மேக்கப் மூலம் கருவளையங்களை மறைக்க முயற்சிக்கின்றனர். சிலர் கருவளையங்களை போக்கும் க்ரீம்களை பயன்படுத்துகின்றனர். 

ஆனால் சில வீட்டு வைத்தியங்களை கடைப்பிடிப்பதன் மூலம் கருவளையத்தை மிக எளிதாக போக்கலாம் என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆம், மிக எளிதாக, பகக் விளைவுகள் எதுமின்றி, எளிதான வீட்டு வைத்தியங்கள் மூலம் கருவளையங்களை எவ்வாறு அகற்றுவது என்பதை  தெரிந்து கொள்வோம்.

கருவளையங்களை அகற்ற சில வீட்டு வைத்தியங்கள்:

உருளைக்கிழங்கு சாறு:

உருளைக்கிழங்கில் வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. உருளைக்கிழங்கு சாற்றை கண்களுக்குக் கீழே தடவி வந்தால் கருவளையத்தைப் போக்கலாம். இதைப் பயன்படுத்த, உருளைக்கிழங்கை அரைத்து, அதன் சாற்றை தனித்தனியாக எடுத்துக் கொண்டு, உங்கள் கண்களுக்குக் கீழே சாற்றை தடவவும். இப்படி செய்வதன் மூலம் சில நாட்களில் கருவளையங்கள் மறைந்து விடும்.

தக்காளி:

தக்காளியில் லைகோபீன் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இவை சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களை நீக்க, 2 டீஸ்பூன் தக்காளிச் சாற்றில் சில துளிகள் எலுமிச்சைச் சாற்றைக் கலக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை கண்களுக்குக் கீழே  தடவி, 10 நிமிடம் கழித்து, தண்ணீரில் கழுவவும், இவ்வாறு செய்தால் கருவளையம் பிரச்சனை நீங்கும்.

மேலும் படிக்க |   கோவைப்பழ உதடு வேண்டுமா... தேனை ‘இந்த’ முறையில் பயன்படுத்துங்க!

வெள்ளரிக்காய்:

வெள்ளரி சருமம் தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குகிறது. இதைப் பயன்படுத்த, வெள்ளரிக்காயை துண்டுகளாக வெட்டவும். அதன் பிறகு, 10 நிமிடங்களுக்கு உங்கள் கண்களில் வைத்திருங்கள், இவ்வாறு செய்வதன் மூலம் கருவளையம் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.

புதினா சாறு: 

புதினா கசக்கிய புதினா இலைகளும் கருவளையங்களை சிறப்பாக போக்கும். புதினா இலைகளை கசக்கி சாறு எடுத்து, அதனை கண்களுக்கு கீழ் தடவவும். அதனை அப்படியே 10-15 நிமிடங்கள் வரை விட்டு விடவும். பின்னர் கண்களை கழுவுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க |  அளவிற்கு மிஞ்சினால் புரோட்டீனும் ‘விஷமாகி’ விடும்; எச்சரிக்கும் நிபுணர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News