கொழுப்பை சட்டென குறைக்கும் எளிமையான உடற்பயிற்சிகள்! இதை செய்தால் கைமேல் பலன்..

Low Impact Fat Burning Exercises : கொழுப்பை எளிதில் குறைப்பதற்கு சில உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Mar 15, 2024, 05:37 PM IST
  • எளிமையான உடற்பயிற்சிகள் மூலம் எடையை குறைக்கலாம்
  • என்னென்ன பயிற்சிகளை செய்ய வேண்டும்?
  • இதோ முழு விவரம்!
கொழுப்பை சட்டென குறைக்கும் எளிமையான உடற்பயிற்சிகள்! இதை செய்தால் கைமேல் பலன்.. title=

Low Impact Fat Burning Exercises : கொழுப்பை குறைக்க பல வகைகளில், பல டயட்டுகள் உதவும். இறுப்பினும் இதனுடன் சேர்ந்து எப்போதும் வர்க்-அவுட் பயிற்சிகளில் ஈடுபடுவதும் மிகவும் முக்கியமாகும். உடல் எடையை குறைக்க முதலில் உடல் எடையை குறைப்பது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது. ஆனால், சில உடல் நலக்கோளாறு காரணமாகவோ, மருத்துவ நிலைகளினாலோ பலரால் ஹெவியான வர்க்-அவுட் செய்யமுடியாமல் போகலாம். எனவே, சட்டென கொழுப்பை குறைக்கும் Low Impact எளிமையான உடற்பயிற்சிகளை இங்கு பார்ப்போம். 

நீச்சல் பயிற்சி:

கொழுப்பை சட்டென கரைக்க உதவும் எளிமையான உடற்பயிற்சிகளுள் ஒன்று, நீச்சல் பயிற்சியாகும். தண்ணீர், உடலில் உள்ள அழுத்தத்தை குறைத்து கொழுப்பை குறைக்க உதவும். நீச்சல் பயிற்சி நல்ல கார்டியோ உடற்பயிற்சியாகவும் கருதப்படுகிறது. இது, உடலை நன்றாக வளைப்பதால், உடல் ஃப்ளெக்ஸிபில் ஆகவும் இருக்கும். எனவே, கொழுப்பை குறைக்க இந்த பயிற்சியை செய்து பாருங்கள். 30 நிமிட நீச்சல் பயிற்சியில் சுமார் 216 கலோரிகள் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | மலச்சிக்கலுக்கு மரண அடி கொடுக்கும் சூப்பர் டிரிங்க்! பல சிக்கல்களை போக்கும் பானம்!

ஒரு காலால் ஓடுவது:

வாக்கிங்-ஜாக்கிங் பயிற்சிகள் உடல் கொழுப்பை கரைக்க உதவும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால், ஒரு காலால் ஓட முயற்சி செய்ததுண்டா? ஆம், ஒரு காலால் எகிறி குடித்து ஓடுவதால் கொழுப்பு நன்றாக குறையும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பயிற்சியை செய்ய நமது இடுப்பையும் காலையும் மட்டும் உபயோகிக்க வேண்டும் என்பதால், அதற்கு அதிக ஆற்றல் தேவைப்படும். இதனால் உடற்கொழுப்பு நன்றாகவே குறையும். வாக்கிங்-ஜாக்கிங் செய்த பிறகு, 60 வினாடிகள் வரை இந்த பயிற்சியை செய்து பழகி கொள்ளலாம். 

யோகா:

யோகாசனம் செய்வது, ஒட்டுமொத்த உடல் நலனுக்கே நல்லது என்பது மருத்துவர்கள் கூறி யாருக்கும் தெரியவேண்டியதில்லை. யோகா செய்வதால், உடல் நலன், மன நலன் என அனைத்துமே மேம்படும். இதை ஆன்மீக அனுபவமாக நிறைய பேர் பார்த்தாலும், இது உண்மையில் உளவியல் ரீதியாக நமக்குள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என பலனை அனுபவித்த பலர் கூறுகின்றனர். தடசனா, விரிக்‌ஷாசனா, ட்ரிகோனாசனா உள்ளிட்ட ஆசனங்களை செய்து உடல் வலிமையை கூட்டி, கொழு்பை குறைக்கலாம். 

நடைப்பயிற்சி அல்லது ஓட்டப்பயிற்சி:

சிம்பிளான கார்டியோ உடற்பயிற்சிகளுள் நடைப்பயிற்சி அல்லது ஓட்டப்பயிற்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன. தினமும் காலையில் இவை இரண்டையும் செய்வதால், உடலில் தங்கியிருக்கும் கொழுப்பு சட்டென குறையும் என நம்பப்படுகிறது. காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள முடியவில்லை என்றால், மாலையில் செய்யலாம். 

மேலும் படிக்க | படுத்தவுடன் பட்டென தூங்க வேண்டுமா? கவலைய விடுங்க..‘இதை’ பண்ணுங்க..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News