குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லையால் அவதியா, இதை மட்டும் பண்ணுங்கள்

தலைப்பொடுகு என்பது தலையில் உள்ள சருமத்தின் இறந்த செல்களை உதிர்தல் ஆகும். இந்த பொடுகு நமது தலையில் உள்ள துளைகளை அடைத்து விடுவதால் மயிர்க்கால்கள் சுவாசிக்க முடியாமல் போய் விடும். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 31, 2022, 05:08 PM IST
  • முடிகளின் வேர்கள் பலவீனம் அடைந்து உதிர ஆரம்பித்து விடுகிறது.
  • பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபட பின்வரும் வழிகளை பின்பற்றுங்க.
குளிர் காலத்தில் பொடுகுத் தொல்லையால் அவதியா, இதை மட்டும் பண்ணுங்கள் title=

பொடுகு என்பது வறண்ட தலை அல்லது கிருமி பாதிப்பால் ஏற்படலாம். எக்ஸிமா, சோரியாஸிஸ் பாதிப்பு போன்றவைகளும் காரணமாக இருக்கலாம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அதிகமாக ஏற்படுகிறது. ஆயுர்வேதத்தில் தலைக்கு வரும் பொடுகு நோயைத் தாருணம் என்று அழைக்கிறார்கள். தோல் வறண்டு போவதால் அழற்சி ஏற்பட்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உருவாகி உதிரும். தலை, முகம், காது போன்ற பகுதிகளில் இது காணப்படும்.

ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, நோய் எதிர்ப்புத் தன்மையின் மாறுபாடு, அதீத மனஉளைச்சல், தட்பவெப்பநிலை மாறுபாடு, முகப்பரு, எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள தோல், தலையைச் சுத்தமில்லாமல் வைத்துக் கொள்ளுதல், அதிக உடல் பருமன் போன்றவை இதற்குக் காரணமாகின்றன. எனவே பொடுகு பிரச்சனையிலிருந்து விடுபட பின்வரும் வழிகளை பின்பற்றுங்க...

மேலும் படிக்க | கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? மஞ்சளை இப்படி பயன்படுத்தி பாருங்க

டீ இலை: சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும். தலை பொடுகு மிகவும் எரிச்சலூட்டும் முடி பிரச்சினைகளில் ஒன்றாகும். இருக்கிறது. மேலும் அதை குணப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது விஷயம் அல்ல. டீ இலைகளை 6 கப் தண்ணீரில் கொதிக்க வைத்து பின்னர் தண்ணீரை வடிகட்டி குளிர்விக்கவும். பின்னர் அதில் எலுமிச்சை சாறு சேர்த்து, டீ தண்ணீரை பயன்படுத்தினால் விரைவிலேயே பொடுகு தொல்லை நீங்கிவிடும்.

கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய்: கற்பூரத்தையும் சிறிதளவு தேங்காய் எண்ணெயும் எடுத்து ஒன்றாக கலந்து ஒரு காற்று புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயைத் தூங்க போவதற்கு முன் தினசரி தலையில் தேய்த்து வரவும்.

கற்றாழை: சிறிது கற்றாழை ஜெல்லை எடுத்து உங்கள் உச்சந்தலை முழுவதும் மசாஜ் செய்யுங்கள். தலையில் கற்றாழை ஜெல் முழுவதுமாக படுவதை உறுதி செய்யும் விதமாக வட்டப்பாதையில் மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தலையை அலசி விடுங்கள். வாரத்தில் இரண்டு முறையாவது இந்த ஜெல்லை பயன்படுத்த வேண்டும். 

வெங்காயச் சாறு: வெங்காயத்தை அரைத்து அதன் சாறைப் பிழிந்து வடிகட்டி தாராளமாக உங்கள் முடியில் தடவவும். ஒரு மணி நேரம் அதை அப்படியே விட்டு விட்டு பிறகு அலசி விடவும். வாரத்தில் 2 நாட்கள் இந்த ஜூஸை உங்கள் உச்சந்தலையில் தடவவும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ பிரச்சனைகள் இருந்தா முள்ளங்கியிடம் இருந்து விலகியே இருங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News