முதுமையிலும் இளமையாக இருக்கணுமா... ‘இந்த’ 5 உணவுகளுக்கு குட்பை சொல்லுங்க..!

நீண்ட காலம் இளைமையோடு இருக்க விரும்பினால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், முதுமை தோற்றத்தையும்  விரைவில் ஏற்படுத்தக் கூடிய சில உணவுகளை நிச்சயம் கை விட வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 14, 2023, 01:35 PM IST
  • முதுமை தோற்றத்தையும் விரைவில் ஏற்படுத்தக் கூடிய சில உணவுகளை கை விட வேண்டும்.
  • சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, முதுமையை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும்.
  • இயற்கையான இனிப்பு உணவுகளை உட்கொள்வதே சிறந்த நடைமுறையாகும்.
முதுமையிலும் இளமையாக இருக்கணுமா... ‘இந்த’ 5 உணவுகளுக்கு குட்பை சொல்லுங்க..! title=

முதுமையை நம்மால் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும், சருமத்தில் ஏற்படும் அறிகுறிகளை நாம் கண்டிப்பாக குறைக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம். இளமையாக இருக்க நாம் உண்ணும் உணவு சிறப்பானதாக, ஆரோகியமானதாக இருக்க வேண்டும், அதோடு, இளமையிலேயே முதுமையை வரவழைக்கும் உணவுகளை முதலில் உங்கள் டயட்டில் இருந்து முதலில் அப்புறப்படுத்த வேண்டும். நீண்ட காலம் இளைமையோடு இருக்க விரும்பினால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், முதுமை தோற்றத்தையும்  விரைவில் ஏற்படுத்தக் கூடிய சில உணவுகளை நிச்சயம் கை விட வேண்டும்.

உங்கள் வயதை வேகமாக்கும் 5 உணவுகள் இங்கே:

1. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை 

அதிகப்படியான சர்க்கரை நுகர்வு, குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, முதுமையை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும். அதிக சர்க்கரை உட்கொள்வது, முதுமையை வராஅமல் தடுக்கும், கொலாஜன் மற்றும் எலாஸ்டினை சேதப்படுத்தும், இதனால் தோல் சுருக்கங்கள் மற்றும் தொய்வு ஏற்படும். எனவே, உங்கள் உணவில் சர்க்கரையின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள் மற்றும் தேன் மற்றும் வெல்லம் பயன்படுத்துங்கள்.  எனினும், இதுவும் மிதமான அளவு பயன்படுத்தப்பட வேண்டும். சர்க்கரைக்கு (Sugar) ஆரோக்கியமான மாற்றுகளுடன் மாற்று உணவுகளான, பழங்கள், பேரீச்சம்பழம் மற்றும் திராட்சை போன்ற இயற்கையான இனிப்பு உணவுகளை உட்கொள்வதே சிறந்த நடைமுறையாகும்.

2. வறுத்த உணவுகள்

பெரும்பாலும் வறுத்த உணவுகளில் ட்ரான்ஸ் கொழுப்புகள் காணப்படுகின்றன. அவை ஆரோக்கியம் மற்றும் சருமத்தில் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு பெயர் பெற்றவை. அவை கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவை உடலில் வீக்கத்தையும் ஊக்குவிக்கின்றன. இது வயதானதை ஊக்குவிக்கிறது. எனவே  முடிந்தவரை நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்கவும். ஆனால், உங்களுக்குப் பிடித்த வறுத்த உணவுகளை நீங்கள் எப்போதாவது சாப்பிடுவது தவறில்லை. தினமும் சாப்பிடுவது நிச்சயம் நல்லதல்ல. வறுத்த உணவுகளை, வீட்டிலேயே ஃபிரஷ்ஷாகச் செய்வது சிறந்தது.

மேலும் படிக்க | Prune For Health: அனீமியா, செரிமானக் கோளாறுகளை போக்கும் கொடிமுந்திரி!

3. காஃபின் உள்ள உணவுகள்

காஃபின் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பது உண்மைதான். ஆனால் அதிக அளவு உங்கள் சருமத்தை மோசமாகப் பாதித்து, உங்களை முதுமையின் வாயிலுக்கு இட்டுச் செல்லும். பியாலிஸ்டாக் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், காஃபின் கொலாஜன் அளவை பாதிக்கிறது. இது சருமத்தை அதன் நெகிழ்ச்சித்தன்மையை இழக்கச் செய்கிறது மற்றும் வயதான அறிகுறிகளைக் காட்டுகிறது. எனவே, காபி அல்லது டீயை வரம்பிற்குள் குடிக்கவும் அல்லது மூலிகை தேநீர், ஸ்மூத்திஸ் மற்றும் இளநீர் போன்ற பிற ஆரோக்கியமான பானங்களை அருந்தவும். 

4. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், தொத்திறைச்சிகள், பெப்பரோனிஸ் மற்றும் ஹாட் டாக் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் பெரும்பாலும் அதிக அளவு சோடியம், சல்பைட் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டிருக்கின்றன.  இந்த இறைச்சிகளை அதிகமாக உட்கொள்வது சருமத்தை வறண்டதாக ஆக்கி, கொலாஜனை பலவீனப்படுத்தலாம். இது தோல் அழற்சிக்கு வழிவகுக்கும். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக சாப்பிடுவதை நிறுத்துங்கள்.

5. மதுபானம் 

மிதமான அளவில் மது அருந்துதல் சில ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கலாம், அதிகப்படியான மது அருந்துதல் உங்களை வேகமாக முதுமை அடையச் செய்யும். ஆல்கஹால் உடலை நீரிழப்புக்கு உட்படுத்துகிறது. என்றைக்கோ ஒரு முறை, பார்டி போன்ற நேரங்களில் மிதமாக குடிக்கவும், ஒரு வழக்கமாக அல்ல. மிதமான குடிப்பழக்கம் குறித்த நிபுணரின் வழிகாட்டுதல்களை பின்பற்றவும். எனினும், மதுவை முற்றிலும் தவிர்ப்பது பல நன்மைகளை தரும் என்பதை மறுக்க முடியாது.

உங்களை வேகமாக வயதாக்கும் உணவுகளைத் தவிர்த்து, உங்கள் சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பேண ஆரோக்கியமாக சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

மேலும் படிக்க | மூட்டு வலி பாடாய் படுத்துதா? விரட்டி அடிக்க சில எளிய டிப்ஸ் இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News