UPI Users : யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வழக்கம் கொண்ட நபரா நீங்கள்? உங்களுக்கான புதிய வசதி இதோ...!

UPI Users To Get Easy Transactions Facility: யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் விரைவில் "Tap & Pay" வசதியைப் பெறுவார்கள். இதன் கீழ், பணம் செலுத்தும் இயந்திரத்தை உங்கள் மொபைல் கொண்டு தொட்டால் போதும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 29, 2023, 02:34 PM IST
  • யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வழக்கம் கொண்ட நபரா நீங்கள்?
  • அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது.
  • இதுகுறித்து ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
UPI Users : யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வழக்கம் கொண்ட நபரா நீங்கள்? உங்களுக்கான புதிய வசதி இதோ...! title=

GPay, PayTM & PhonePe UPI Users To Get Easy Transactions Facility : யுபிஐ மூலம் பணம் செலுத்தும் வழக்கம் கொண்ட நபரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. UPI மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் விரைவில் Tap & Pay வசதியைப் பெறுவார்கள். இதன் கீழ், பணம் செலுத்தும் இயந்திரத்தை உங்கள் மொபைல் கொண்டு தொட்டால் போதும். அதன் பிறகு கட்டணம் தானாகவே செலுத்தப்படும். நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) இந்தச் சேவையை வழங்கும் செயல்முறையைத் தொடங்கியுள்ளது. இந்த வசதி 31 ஜனவரி 2024க்குள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

இதுகுறித்து ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் டிஜிட்டல் கட்டணச் சேவை வழங்கும் நிறுவனங்கள் விரைவில் இந்த வசதியை அறிமுகப்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு நிறுவனங்களுக்கு இறுதி காலக்கெடு அல்ல. UPI சேவை வழங்கும் நிறுவனங்கள் எப்போது வேண்டுமானாலும் UPI-Tap and Pay வசதியைத் தங்கள் செயலியில் தொடங்கலாம். தற்போது, கூகுள் பே (Google Pay), பீம் ஆப் (Bhim App) மற்றும் பேடிஎம் (Paytm) ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்களுக்கு இந்த சேவை கிடைக்கிறது.

ரிசர்வ் வங்கி கொடுத்த அறிவிப்பு

இந்திய ரிசர்வ் வங்கியின் (Reserve Bank Of India) கவர்னர் சக்திகாந்த தாஸ் (Shaktikanta Das), இந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட்டில், மற்ற புதிய டிஜிட்டல் பேமெண்ட் அம்சங்களுடன் UPI டேப் மற்றும் பே அம்சத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். முன்னதாக, நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, யுபிஐ (Hello UPI) மற்றும் இணைய வசதி இல்லாமல் குரல் மூலம் பணம் செலுத்தும் வசதியை வழங்கியது.

மேலும் படிக்க | செயற்கை தொழில்நுட்பத்தில் ChatGPT போல் பாரத் ஜிபிடியை அறிமுகப்படுத்தும் அம்பானி

ஆரம்ப கட்டணம் ரூ. 500: 

ஒரு பயனர் டேப் வசதியை பயன்படுத்த UPI லைட் (UPI Lite) கணக்கைத் திறந்தால், அவர் ரூ. 500 -க்கும் குறைவான மதிப்புள்ள பரிவர்த்தனைகளைச் செய்யலாம். ரூ. 500க்கு மேல் பணம் செலுத்துவதற்கு PIN தேவைப்படும். அதே நேரத்தில், வணிகர்களுக்கு UPI ஸ்மார்ட் QR தேவைப்படும். அல்லது நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் (NFC) தொழில்நுட்பத்துடன் கூடிய டேக் தேவைப்படலாம்.

இதை இப்படித்தான் பயன்படுத்த வேண்டும்

இந்த வசதியில் மொபைல் போனில் இருந்து QR குறியீட்டை ஸ்கேன் (Scan QR Code) செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. வாடிக்கையாளர் QR குறியீடு இயந்திரம் அல்லது பணம் செலுத்தும் இயந்திரத்தை மொபைல் போன் கொண்டு தொட வேண்டும் (டேப் செய்ய வேண்டும்). அதன் பிறகு பணம் செலுத்தப்படும். இந்த வசதியைப் பெற மொபைலில் என்எப்சி (NFC) இருப்பது அவசியம்.

கூடுதல் தகவல்

யுபிஐ சமீபத்தில் என்பிஎஸ் சந்தாதார்களுக்கு ஒரு மிகப்பெரிய நல்ல செய்தி அளித்தது. ஓய்வூதிய நிதி கட்டுப்பாட்டாளரான பிஎஃப்ஆர்டிஏ (PFRDA) ஒரு புதிய வசதியை தொடக்கியது. என்பிஎஸ் -இல் (NPS) முதலீடு செய்யும் சந்தாதாரர்கள் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) QR குறியீடு மூலம் முதலீடு செய்ய PFRDA அனுமதித்தது. PFRDA இன் அறிக்கையில், முதலீட்டு செயல்முறையை எளிதாக்குவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், என்பிஎஸ் கணக்குகளைத் திறக்கும் முதலீட்டாளர்களுக்கு இந்த அமைப்பு இன்னும் எளிதாகவும் சிறப்பாகவும் மாறிவிடும்.

மேலும் படிக்க | நாட்டின் ‘பெஸ்ட்’ வங்கிகள் இவைதான், பணம் பத்திரமா இருக்கும்: ஆர்பிஐ வெளியிட்ட லிஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News