கல்விக்கடன் வாங்க திட்டமா... குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் சில வங்கிகள் இவைதான்!

Educational Loan Tips: வெளிநாடுகளுக்குச் சென்று, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவது எளிதாகிவிட்டதால், மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், கல்விக் கடனுக்கான தேவையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 12, 2024, 05:44 PM IST
  • கல்விக் கடனுக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.
  • வெளிநாடுகளில் உயர்கல்வி பெறுவதற்குமான கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு இருக்கின்றன.
  • குறைந்த வட்டியில், கடன் வழங்கும் டாப் 10 வங்கிகள்.
கல்விக்கடன் வாங்க திட்டமா... குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் சில வங்கிகள் இவைதான்! title=

கல்விக்கட்டணம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கல்லூரி படிப்புக்கும், உயர்கல்விக்கும், பல மாணவர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேருவதற்கும், வெளிநாடுகளில் உயர்கல்வி பெறுவதற்குமான கட்டணங்கள் விண்ணைத் தொடும் அளவுக்கு தற்போது இருக்கின்றன. தற்போது, நம் நாட்டில், அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தற்போது உயர்கல்வி பெற விரும்புகின்றனர். 

வெளிநாடுகளுக்குச் சென்று, கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவது எளிதாகிவிட்டதால், மேற்படிப்புக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இதனால், கல்விக் கடனுக்கான தேவையும் கணிசமாக அதிகரித்துள்ளது. பெரும்பாலான பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் கல்விக் கடன்களை (Loan Tips) வழங்குகின்றன. 

உங்கள் பிள்ளைகளின் உயர்கல்விக்காக கடன் வாங்க திட்டமிட்டிருந்தால்,  இந்த செய்தி உங்களுக்குத் தான். அந்த வகையில், நாட்டின்   குறைந்த வட்டியில், கடன் வழங்கும் டாப் 10 வங்கிகள் பற்றி அறிந்து கொள்ளலாம். 20 லட்ச ரூபாய்க்கான 7 வருட கடனுக்கு எவ்வளவு வட்டி வசூலிக்கப்படும்,  அதற்கான எவ்வளவு EMI என்பதை அறிந்து கொள்ளலாம்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை 8.1 சதவீத வட்டி விகிதத்தில் கல்விக் கடனை வழங்குகின்றன. ரூ.20 லட்சம் கல்விக் கடனுக்கான EMI ஏழு வருட காலத்திற்கு தோராயமாக ரூ.31,272 ஆக இருக்கும்.

பாரத ஸ்டேட் வங்கி

பாரத ஸ்டேட் வங்கி 8.15 சதவீத வட்டியில் கல்விக் கடனை வழங்குகிறது. ரூ. 20 லட்சம் கல்விக் கடனுக்கான EMI ஏழு வருட காலத்திற்கு தோராயமாக ரூ.31,322 ஆக இருக்கும்.

மேலும் படிக்க | வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது எப்படி

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி 8.2 சதவீத வட்டியில் கல்விக் கடனை வழங்குகிறது. ரூ20 லட்சம் கல்விக் கடனுக்கான EMI ஏழு வருட காலத்திற்கு தோராயமாக ரூ.31,372 ஆக இருக்கும்.

கனரா வங்கி

கனரா வங்கி 8.6 சதவீத வட்டியில் கல்விக் கடனை வழங்குகிறது. ரூ20 லட்சம் கல்விக் கடனுக்கான EMI ஏழு வருட காலத்திற்கு தோராயமாக ரூ.31,774 ஆக இருக்கும்.

இந்தியன் வங்கி

இந்தியன் வங்கி 8.8 சதவீத வட்டியில் கல்விக் கடனை வழங்குகிறது. ரூ.20 லட்சம் கல்விக் கடனுக்கான EMI ஏழு வருட காலத்திற்கு தோராயமாக ரூ.31,976 ஆக இருக்கும்.

HDFC வங்கி

எச்டிஎஃப்சி வங்கி 9.5 சதவீத கல்விக் கடனை வழங்குகிறது. 20 லட்சம் கல்விக் கடனுக்கான இஎம்ஐ ஏழு வருட காலத்திற்கு சுமார் ரூ.32,688 ஆக இருக்கும்.

ஐசிஐசிஐ வங்கி

ஐசிஐசிஐ வங்கி 10.25 சதவீத வட்டியில் கல்விக் கடனை வழங்குகிறது. ரூ. 20 லட்சம் கல்விக் கடனுக்கான EMI ஏழு வருட காலத்திற்கு தோராயமாக ரூ.33,461 ஆக இருக்கும்.

ஆக்சிஸ் வங்கி

ஆக்சிஸ் வங்கி 13.7 சதவீத வட்டியில் கல்விக் கடனை வழங்குகிறது. ரூ. 20 லட்சம் கல்விக் கடனுக்கான EMI ஏழு வருட காலத்திற்கு சுமார் ரூ.37,149 ஆக இருக்கும்.

முக்கிய குறிப்பு

கடன் தொகை, திருப்பிச் செலுத்தும் காலம், வட்டி விகிதம் மற்றும் தகுதி ஆகியவற்றின் அடிப்படையில் விதிகள் வேறுபடலாம். சில கல்விக் கடன்களுக்கு பிணை அல்லது உத்தரவாதம் தேவைப்படலாம். எனவே, கல்விக் கடனைப் பெறுவதற்கு முன், நிபந்தனைகளை நன்கு அறிந்திருப்பது அவசியம்.  

மேலும் படிக்க | National Savings Scheme: தபால் அலுவலகத்தின் அட்டகாசமான திட்டம்... அசத்தல் வட்டி, வரி விலக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News