SBI Vs HDFC வங்கி... சீனியர் சிட்டிஸன்களுக்கு வட்டியை அள்ளித்தரும் வங்கி எது...!!

SBI Vs HDFC FD Schemes: பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூத்த குடிக்களுக்கான பல சிறப்பு திட்டங்களை வழங்குகின்றன. அதில் திட்டமிட்டு முதலீடு செய்வது ஓய்வு காலத்தில் நல்ல வருமானத்தை கொடுக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 22, 2024, 10:58 AM IST
  • பொதுவாகவே வங்கிகளில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.
  • ஹெச்டிஎஃப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கு வழக்கமான கூடுதல் 0.50 சதவீதத்தோடு மேலும் 0.25 சதவீத கூடுதல் வட்டி வழங்குகிறது.
  • சீனியர் சிட்டிஸன் கேர் FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மே 11, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
SBI Vs HDFC வங்கி... சீனியர் சிட்டிஸன்களுக்கு வட்டியை அள்ளித்தரும் வங்கி எது...!! title=

HDFC வங்கி vs SBI வங்கி: பாடுபட்டு ஈட்டிய பணத்தை, திறமையாக முதலீடு செய்வதன் மூலம், நல்ல வருமானம் கிடைக்கும். அதிலும் ஓய்வூதியம் இல்லாத, வட்டி வருமானத்தை நம்பியிருக்கும் மூத்த குடிமக்களுக்கு ஏற்ற திட்டங்களை பல வங்கிகள் செயல்படுத்தி வருகின்றன. முதலீட்டை பொறுத்தவரை, பணத்தை எஃப்டி என்னும் நிலையான வைப்பு திட்டத்தின் முதலீடு செய்வதை பலர் விரும்புகின்றனர். பாதுகாப்பான முதலீடு என்பதால், இது பெரும்பாலானோரொன் தேர்வாக உள்ளது. 

பொதுவாகவே வங்கிகளில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் நாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC ஆகியவை மூத்த குடிமக்களுக்காக ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. SBI வங்கி மூத்த குடிமக்களை மனதில் வைத்து SBI Wecare என்னும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதே நேரத்தில், HDFC வங்கி சீனியர் சிட்டிஸன் கேர்  FD திட்டத்தை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் தங்கள் பணத்தை, அதிக வட்டி வழங்கும் திட்டத்தில் முதலீடு (Investment Tips) செய்வதன் மூலம் அதிக வருமானத்தை பெறலாம். எனவே அதிக வட்டி எங்கு கிடைக்கும் என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

HDFC வங்கியின் சீனியர் சிட்டிஸன் கேர்  FD

HDFC வங்கியின்  மூத்த குடிமக்களுக்கான சீனியர் சிட்டிஸன் கேர்  FD திட்டத்தஒ வழங்குகிறது. இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்டது. ஹெச்டிஎஃப்சி வங்கி மூத்த குடிமக்களுக்கு வழக்கமான கூடுதல் 0.50 சதவீதத்தோடு மேலும் 0.25 சதவீத கூடுதல் வட்டி வழங்குகிறது. அதாவது மூத்த குடிமக்களுக்கு வங்கி 0.75 சதவீதம் கூடுதல் வட்டி அளிக்கிறது. இது உங்களின் வழக்கமான FD வட்டியை விட சற்று அதிக வட்டி. இந்த திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD களுக்கு 7.75 சதவீதம் வட்டி கிடைக்கும். 5 கோடிக்கும் குறைவான FD முதலீடுகளுக்கு இந்த வட்டி கிடைக்கும். HDFC வங்கி வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு FD யில் மூத்த குடிமக்களுக்கு 3.50% முதல் 7.75% வரை வட்டி வழங்குகிறது. சீனியர் சிட்டிஸன் கேர் FD திட்டத்தில் முதலீடு செய்வதற்கான கடைசி தேதி மே 11, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்: எகிறும் அகவிலைப்படி, HRA.. முழு கணக்கீடு இதோ

எஸ்பிஐ வீகேர்

SBI WeCare ஸ்பெஷல் FD திட்டம் மூத்த குடிமக்களுக்கான சிறந்த திட்டம். மூத்த குடிமக்கள் தங்கள் பணத்தை கோவிட் காலங்களில் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் வகையில், தொடங்கப்பட்டது. இந்த FD திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு செய்தால், 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளில் அதிக வருமானம் பெறலாம். SBI WeCare FD திட்டத்தில் 50bps கூடுதல் வட்டி அதாவது 0.50 சதவீதம் கிடைக்கும். தற்போது எஸ்பிஐயின் இந்த சிறப்பு FD திட்டமானது 7.50 சதவீத வட்டியை வழங்குகிறது.  எஸ்பிஐ  வீகேர் திட்டத்தின் கீழ் 7.5% வட்டி கிடைக்கும். 10 வருடங்களில் பணம் இரு மடங்காகும். எஸ்பிஐ வழங்கும் இந்த வீகேர் திட்ட முதலீட்டின் மீது நீங்கள் கடன் வசதியும் பெறலாம்.

குறிப்பு: உங்கள் பணத்தை முதலீடு செய்யும் முன், உங்களுக்கு ஏற்ற வகையிலான திட்டத்தை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதே சிறந்தது. இதற்கு நீங்கள் நிதி ஆலோசகரின் உதவியை நாடுவது உங்களுக்கு சரியான முடிவுகளை எடுக்க உதவும்.

மேலும் படிக்க | Post Office RD: மாதம் ரூ.5000 முதலீட்டை... ரூ.3.57 லட்சமாக ஆக்கும் ஜாக்பாட் திட்டம்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News