மத்திய அரசின் சோலார் மின் திட்டம்... அரசின் மானிய உதவியுடன் SBI வழங்கும் கடன் வசதி!

Central Govt's Rooftop Solar Scheme:மத்திய அரசின் சோலார் மின் திட்டத்தின் கீழ் 300 யூனிட் இலவச மின்சாரத்தை மத்திய அரசு வழங்கத் தொடங்கியுள்ளது. வீடுகளின் கூரையில் சோலார் தகடுகளை அமைக்க சுமார் ஒரு கோடி குடும்பங்களுக்கு தலா ரூ78,000 வரை மானிய உதவியும் கிடைக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 8, 2024, 12:22 PM IST
  • பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா என்னும் மத்திய அரசின் சோலார் மின் திட்டம்.
  • சூரிய மின்சக்திக்கான சோலார் கூரை அமைக்க பல லட்சம் ரூபாய் செலவாகும்.
  • சோலார் பேனலின் திறனின் அடிப்படையில், அரசு மானியம் வழங்குகிறது.
மத்திய அரசின் சோலார் மின் திட்டம்... அரசின் மானிய உதவியுடன் SBI வழங்கும் கடன் வசதி! title=

மத்திய அரசின் சோலார் மின் (Rooftop Solar Scheme) திட்டத்தின் கீழ் 300 யூனிட் இலவச மின்சாரத்தை மத்திய அரசு வழங்கத் தொடங்கியுள்ளது. வீடுகளின் கூரையில் சோலார் தகடுகளை அமைக்க சுமார் ஒரு கோடி குடும்பங்களுக்கு தலா ரூ78,000 வரை மானிய உதவியும் கிடைக்கும். சோலார் பேனல்களை நிறுவ விண்ணப்பதாரரின் வீட்டின் மேற்கூரையில் போதுமான இடம் இருந்தால், பிரதம மந்திரி சூர்யா கர் முஃப்த் பிஜிலி யோஜனா என்னும் மத்திய அரசின் சோலார் மின் திட்டத்தின் பலனை பெற எவ்வாறு விண்ணப்பிக்கலாம், 300 யூனிட் இலவச மின்சாரத்தை பெறுவது எப்படி என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். 

மத்திய அரசின் மானிய உதவி விபரம்

சூரிய மின்சக்திக்கான சோலார் கூரை அமைக்க பல லட்சம் ரூபாய் செலவாகும். சோலார் மேற்கூரை அமைக்கும் செலவு நீங்கள் நிறுவும் சோலார் பேனலின் கிலோவாட் திறனுக்கு ஏற்ப அதிகரிக்கும். இந்நிலையில், சோலார் பேனலின் திறனின் அடிப்படையில், குறிப்பிட்ட கணக்கீட்டின் அடிப்படையில், அரசு மானியம் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் 30,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். 3 கிலோவாட் திறன் கொண்ட பேனலுக்கு ரூ.78,000 மானிய உதவியும், 2 கிலோவாட் திறன் கொண்ட சோலார் அமைப்புக்கு ரூ.60,000 மானியமும், 1 கிலோவாட் திறன் கொண்ட சோலார் அமைப்புக்கு ரூ.30,000 மானியமும் கிடைக்கும். இருப்பினும், நீங்கள் கொஞ்சம் பணம் செலவு செய்ய வேண்டும்.

எஸ்பிஐ வழங்கும் கடன் வசதி

அரசின் இந்த திட்டத்தை நீங்களும் பயன்படுத்திக் கொள்ள விரும்பிய நிலையில், உங்கள் வீட்டின் மேற்கூரையில் சோலார் கூரை அமைக்க போதுமான பணம் இல்லை என்றால், மானிய உதவியுடன் கூடவே, நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (State Bank of India) மூலம் கடன் வசதியும் பெறலாம். பிரதமர் சூர்யா கர் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கியில் கடன் பெறலாம். இந்தக் கடன் வசதி யாருக்கெல்லாம் கிடைக்கும், அதன் வட்டி விகிதம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க | Bank Holidays: அடுத்த வாரம் 5 நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை! முழு விவரம்!

குறைந்தபட்ச வருமானம் தொடர்பான விதி

3 கிலோவாட் திறன் வரையிலான சோலார் கூரையை நிறுவுவதற்கு வருமான வரம்புகள் எதுவும் இல்லை, ஆனால் 3 கிலோவாட் மற்றும் 10 கிலோவாட் வரையிலான திறன் கொண்ட கடன் பெற, நிகர ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சம் மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும்.

கடன் தொகை மற்றும் வட்டி விகிதம்

வீட்டின் கூரையில், 3KW திறன் கொண்ட சூரிய சக்தி பேனலை நிறுவ, ரூ. 2,00,000 வரை கடன் பெறலாம். அதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7%. அதேசமயம், 3 கிலோவாட் மற்றும் 10 கிலோவாட் வரையிலான திறன் கொண்ட சோலார் பேனலுக்கு, 6 ​​லட்சம் ரூபாய் வரை கடன் உதவி பெறலாம். அதற்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 10.15%. கடன் பெறுவதற்கான வயது வரம்பை பொறுத்தவரை 65 முதல் 70 வயது வரை உள்ளவர்களுக்கு இந்தக் கடன் வசதி கிடைக்கும். இதன் கீழ் செயலாக்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.

திட்டத்தில் சேர விண்ணப்பிக்கும் முறை

சூரிய மின் திட்டத்தில் பயன் பெற, முதலில் www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் வசிக்கும் மாநிலம் மற்றும் மின் விநியோக நிறுவனத்தைத் தேர்வு செய்து, உங்கள் மின் நுகர்வோர் எண், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும். இதன் பிறகு, உள்ளூர் விநியோக நிறுவனத்திடமிருந்து உங்கள் கோரிக்கைக்கான ஒப்புதல் கிடைக்கும். ஒப்புதல் பெற்ற பிறகு, விநியோக நிறுவனத்தில் பதிவுசெய்யப்பட்ட சோலார் பேனல்களை நிறுவும் நிறூவனத்தின் உதவியுடன் சோலார் பேனலை நிறுவலாம்.

மேலும் படிக்க | கையில் இருக்கும் செல்போனை வைத்து இவ்வளவு லாபம் பார்க்கலாமா? இது தெரியாம போச்சே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News