EPF Vs VPF Vs PPF... வருமானம், வரிச்சலுகை பெற எது பெஸ்ட் முதலீடு...!

நாம் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை நிச்சயம் சேமிக்க வேண்டும். அப்படி நாம் சேமிப்பதற்கு அரசு பல திட்டங்கள் அறிவித்துள்ளன. அவற்றில் நல்ல வருமானத்துடன், வரி சலுகைகளையும் கொடுக்கும், அரசின் திட்டங்களில் 3 வருங்கால வைப்பு நிதி திட்டங்களும் அடங்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 26, 2024, 11:40 AM IST
  • 2023-24 நிதியாண்டில் வருமான வரி விலக்கின் பலனைப் பெற முதலீடு செய்ய மார்ச் 31 வரை மட்டுமே அவகாசம் உள்ளது.
  • பாதுகாப்பான நிலையான வட்டி வருமானம் தரக்கூடிய திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி.
  • நல்ல வருமானத்துடன், வரி சலுகைகளையும் கொடுக்கும், அரசின் திட்டங்களில் 3 வருங்கால வைப்பு நிதி திட்டங்களும் அடங்கும்.
EPF Vs VPF Vs PPF... வருமானம், வரிச்சலுகை பெற எது பெஸ்ட் முதலீடு...! title=

நம்முடைய வாழ்க்கையில், நாம் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை நிச்சயம் சேமிக்க வேண்டும். அப்படி செய்தால், நமது பொருளாதார நிலை உதவுவதோடு, ஓய்வு காலத்தில் நிம்மதியாக இருக்கலாம். வேறு வகையில் கூற வேண்டும் என்றால், நாம் எந்த அளவுக்கு செலவு செய்கிறோமோ அதில் பாதி அளவையாவது சேமிக்க வேண்டும். அப்படி நாம் சேமிப்பதற்கு அரசு பல திட்டங்கள் அறிவித்துள்ளன. அவற்றில் நல்ல வருமானத்துடன், வரி சலுகைகளையும் கொடுக்கும், அரசின் திட்டங்களில் 3 வருங்கால வைப்பு நிதி திட்டங்களும் அடங்கும். 

வருங்கால வைப்பு நிதி திட்டங்களில், தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF), ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஆகியவை அடங்கும். தங்கள் ஓய்வூதிய காலத்திற்காக பெரிய அளவில் நிதியை சேமிக்க விரும்பும் மக்களிடையே இது மிகவும் பிரபலமான திட்டங்கள் இவற்றில் எது சிறந்தது என்பதை பற்றி ஒப்பீட்டின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

2023-24 நிதியாண்டில் வருமான வரி விலக்கின் பலனைப் பெற முதலீடு செய்ய மார்ச் 31 வரை மட்டுமே அவகாசம் உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முதலீடு செய்யத் தயாராகிவிட்டால், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) அல்லது தன்னார்வ வருங்கால வைப்பு நிதியில் (VPF) இரண்டில் PPFக்கு 7.1 சதவீத வட்டியும், VPFக்கு 8.25 சதவீத வட்டியும் கிடைக்கிறது. இது தவிர, பணியாளர்களுகான EPF திட்டமும் உள்ளது. 

 பொது வருங்கால வைப்பு நிதி

பாதுகாப்பான நிலையான வட்டி வருமானம் தரக்கூடிய திட்டமான பொது வருங்கால வைப்பு நிதி திட்ட PPF மூலம் முதலீட்டாளர் ஓய்வுக்குப் பிறகு தேவையான நிதியை சேமிக்க உதவுகிறது. மேலும் இதன் மூலம் வரிசலுகைகளையும் பெறலாம். PPF முதலீட்டிற்கான குறைந்தபட்ச லாக்-இன் காலம் 15 ஆண்டுகள். இருப்பினும், சிறிது காலம் கழித்து ஒரு குறிப்பிட்ட தொகையை திரும்பப் பெறலாம். PPF கணக்கில் யார் வேண்டுமானாலும் பணத்தை முதலீடு செய்யலாம். இது ஒரு நீண்ட கால முதலீட்டுத் திட்டம். இதில் செய்யும் முதலீடுகளுக்கு வருமான வரி சட்டத்தின் பிரிவு 80C பிரிவின் கீழ் வரி சலுகை கிடைக்கும். இந்த திட்டத்தில் ஒரு நிதியாண்டில் நாம் குறைந்தபட்சம் ரூ.500 என்ற அளவில் இருந்து, அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை முதலீடு செய்யலாம். ஒரு ஆண்டில் ரூ.1.50 லட்சம் வரை எத்தனை முறை வேண்டுமானாலும், முதலீடு செய்யலாம் கூட்டு வட்டி முறையில் வட்டி தொகை கணக்கிடப்படுவதால், வட்டி வருமானம் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க | உங்கள் PF கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது? தெரிந்து கொள்ள எளிய வழிகள்!

தன்னார்வ வருங்கால வைப்பு நிதி

VPF என்பது ஊழியர்கள் தன்னார்வ அடிப்படையில் அதிக தொகையை வழங்கும் திட்டம். ஊழியர் வருங்கால வைப்பு நிதி பிடித்தம் செய்யப்படும் நிலையில், அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட ஊழியரின் பங்களிப்பை விட, கூடுதலால ஊழியர் டெபாஸிட் செய்யலாம். இந்த கூடுதல் தொகைக்கு கிடைக்கும் வட்டி EPF பங்களிப்பில் கிடைக்கும் வட்டிக்கு சமம். இது அவர்களின் நிதி இலக்குகளை எளிதாக அடைய உதவும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பணத்தை எடுத்தால், வரி பிடித்தம் செய்யப்படாது. VPF ஆனது EEE பிரிவின் கீழ் வருகிறது. EEE  என்பது முதலீட்டு தொகை மீது வரிச்சலுகை; அசலில் இருந்து விலக்கு; வட்டி வருமானத்திற்கு விலக்கு என்ற வகையில், இது ஒரு சிறந்த வரி சேமிப்பு விருப்பமாக அமைகிறது.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி

ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஒரு கட்டாய ஓய்வூதிய சேமிப்பு திட்டமாகும். முதலாளி மற்றும் பணியாளர் இருவரும் EPFக்கு பங்களிக்கின்றனர். தொழிலாளர் மற்றும் முதலாளியின் பங்களிப்பு ஊழியர்கள் அல்லது பணியாளர்களின் சம்பள கட்டமைப்பின் படி தீர்மானிக்கப்படுகிறது. தனிநபர் ஓய்வு பெறும் வயதை அடையும் போது முழுத் தொகையும்  பெறலாம். அதே சமயத்தில், குறிப்பிட்ட சில தேவைகளுக்கான கொஞ்சம் பணம் திரும்பப் பெறலாம். இந்தத் திட்டம் வரிச் சலுகைகளை வழங்குகிறது. ஓய்வூதியத்தை மையமாகக் கொண்ட சேமிப்பு ஆப்ஷன் தேவைப்படும் சம்பளம் பெறும் நபர்களுக்கு EPF பொருத்தமானது.

மேலும் படிக்க | ஏப்ரல் மாதம் 14 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. தேதி வாரியாக விவரம் இதோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News