மூத்த குடிமக்களுக்கான சிறந்த FD திட்டங்களை வழங்கும் சில ‘டாப்’ வங்கிகள்..!!

Senior Citizen FD Schemes: பெரும்பாலான வங்கிகள் மூத்த குடிமக்களான FD முதலீடுகளுக்கு மீது சற்று அதிக வட்டியை வழங்குகின்றன. இது தவிர, FD திட்டங்கள் பல வகையான விருப்பங்களுடன் வருகிறது. குறிப்பாக வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்கள் FD திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 13, 2024, 10:40 AM IST
  • FD திட்டம் என்பது நம் நாட்டில் அதிகம் விருப்பப்படும் முதலீட்டு விருப்பமாகும்.
  • வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்கள் FD திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
  • வங்கிகளும் வாடிக்கையாளர்களை ஈர்க்க மூத்த குடிமக்களுக்கான FD முதலீடுகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன.
மூத்த குடிமக்களுக்கான சிறந்த FD திட்டங்களை வழங்கும் சில ‘டாப்’ வங்கிகள்..!! title=

Senior Citizen FD Schemes: நிலையான வைப்புத்தொகை அதாவது FD திட்டம் என்பது நம் நாட்டில் அதிகம் விருப்பப்படும் முதலீட்டு விருப்பமாகும். குறைவான ரிஸ்க் இருப்பதால், பாதுகாப்பான முதலீட்டை விரும்பும் பெருமபாலானோர் இதனை விரும்புகிறார்கள். குறிப்பாக வட்டி வருமானத்தை நம்பி இருக்கும் மூத்த குடிமக்கள் FD திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.

வங்கிகளும் வாடிக்கையாளர்களை ஈர்க்க மூத்த குடிமக்களுக்கான FD முதலீடுகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்கும் சில வங்கிகளைப் பற்றி இன்று முழுமையாக அறிந்து கொள்ளலாம். இந்த வட்டி விகிதங்கள் ரூ.2 கோடி வரையிலான எஃப்.டி என்னும் நிலையான வைப்புத் திட்டங்களுக்கானது. 

சாதாரண FD திட்டங்களுடன் ஒப்பிடும்போது, ​​மூத்த குடிமக்களுக்கு. சாதாரண வாடிக்கையாளர்களை விட கூடுதலாக, 0.5% அல்லது 0.75% என்ற அளவில் சிறப்பு வட்டி வழங்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு மாதமும், காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டுதோறும் என உங்களுக்கு விருப்பமான முறையில் வட்டிப் பணத்தைப் பெறலாம். 

DCB வங்கி மூத்த குடிமக்கள் FD திட்டம் (DCB Bank Senior Citizen FD)

DCB வங்கி மூத்த குடிமக்களுக்கு நிலையான வைப்புத் திட்டத்திற்கு (FD) 8.6% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்த விகிதம் 25 மாதங்கள் முதல் 26 மாதங்கள் வரையிலான முதிர்வு காலத்துடன் கூடிய FD முதலீகளுக்குப் (Investment Tips) பொருந்தும்.

IDFC ஃபர்ஸ்ட் வங்கி மூத்த குடிமக்கள் FD (IDFC First Bank FD)

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் மூத்த குடிமக்களுக்கான 500 நாட்களில் முதிர்ச்சியடையும் FD முதலீடுகளுக்கு 8.5% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

மேலும் படிக்க | Post Office MIS: மாதம் ரூ.9,250 வருமானம் கொடுக்கும் அசத்தலான அஞ்சலக திட்டம்!

பந்தன் வங்கி மூத்த குடிமக்கள் FD ( (Bandhan Bank FD)

பந்தன் வங்கி மூத்த குடிமக்களுக்கு ஒரு வருடத்தில் FD முதிர்ச்சியடையும் FD முதலீடுகளுக்கு 8.35% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

IndusInd வங்கி மூத்த குடிமக்கள் FD (IndusInd Bank)

IndusInd வங்கி மூத்த குடிமக்களுக்கு ஒரு வருடம் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான FD முதலீடுகளுக்கு 8.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

யெஸ் வங்கி மூத்த குடிமக்கள் FD (YES Bank FD)

யெஸ் வங்கி 18 மாதங்கள் மற்றும் இரண்டு வருடங்களுக்கும் குறைவான காலத்திற்கான FD முதலீடுகளில் மூத்த குடிமக்களுக்கு 8.25% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

DBS பேங்க் இந்தியா FD திட்டம் ((DBS Bank India FD)

DBS பேங்க் இந்தியா மூத்த குடிமக்களுக்கு 376 நாட்கள் முதல் 540 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் FD முதலீகளுக்கு 8% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

கரூர் வைஸ்யா வங்கி FD (Karur Vysya Bank FD)

கரூர் வைஸ்யா வங்கி 444 நாட்களில் முதிர்ச்சியடையும் FD முதலீடுகளுக்கு மூத்த குடிமக்களுக்கு 8% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி FD (Tamilnad Mercantile Bank)

தமிழ்நாடு மெர்கன்டைல் ​​வங்கி (TMB) மூத்த குடிமக்களுக்கு 400 நாட்களில் முதிர்ச்சியடையும் FD முதலீடுகளுக்கு மூத்த குடிமக்களுக்கு 8% வழங்குகிறது.

மேலும் படிக்க | LIC ஜீவன் ஆனந்த் பாலிசி... தினம் ரூ.45 சேமித்தாலே போதும்... ரூ.25 லட்சம் கையில் இருக்கும்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News