HDFC வாடிக்கையாளரா நீங்கள்... நாளை வங்கி கணக்கில் சம்பளம் வருவதில் சிக்கல் - முழு விவரம்!

HDFC Bank April 1 NEFT Transction: ஹெச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் சிலருக்கு ஏப்ரல் 1ஆம் தேதி அன்று வங்கிக் கணக்கில் சம்பளமோ அல்லது பிற தொகைகளோ வருவதில் தாமதம் ஏற்படலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Mar 31, 2024, 04:09 PM IST
  • 2023-24 நிதியாண்டு இன்றுடன் நிறைவடைகிறது.
  • ஏப்.1ஆம் தேதிக்குள் வங்கிகள் கணக்குகளை நிறைவு செய்யும்.
  • ஏப்.1ஆம் தேதி அன்று வங்கிகள் இயங்காது.
HDFC வாடிக்கையாளரா நீங்கள்... நாளை வங்கி கணக்கில் சம்பளம் வருவதில் சிக்கல் - முழு விவரம்! title=

HDFC Bank April 1 NEFT Transction: ஹெச்டிஎப்சி வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு தற்போது பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, ஏப்ரல் 1ஆம் தேதியான நாளை அதன் National Electronic Funds Transfer என்படும் NEFT பரிவர்த்தனையை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஹெச்டிஎப்சி வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, இன்று 2023-24 நிதியாண்டு நிறைவடையும் நிலையில், நாளைய தினம் NEFT பரிவர்த்தனையை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ள முடியாது என ஹெச்டிபி வங்கி தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, சில தேர்ந்தெடுக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு NEFT பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாய்ப்பு இருந்தாலும் அவர்களின் முழு செயல்முறையும் நிறைவடைய சற்று தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஹெச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு...

எனவே, ஹெச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் யாராவது NEFT பரிவர்த்தனையை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தால், அதனை நாளை தவிர்ப்பது நல்லது என தெரிகிறது.  அதுமட்டுமின்றி, நீங்கள் ஏப்.1ஆம் தேதி அன்று NEFT பரிவர்த்தனை மூலம் உங்கள் சம்பளத்தையோ அல்லது வேறு பணத்தையோ பெறுபவராக இருந்தால், சில காரணங்களால் உங்களின் பணம் வரவு வைக்கப்பட கால தாமதமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. zeenews.india.com/tamil/business-news/which-bank-providing-personal-loan-with-low-interest-rates-in-2024-495957

மேலும் படிக்க | Bank Holidays: பேங்க் போறீங்களா? அப்போ உடனே இந்த லிஸ்ட்ட செக் பண்ணுங்க

இந்த சேவைகளை பயன்படுத்துங்கள்...

அந்த வகையில், NEFT பரவர்த்தனைக்கு பதில், Immediate Payment Service என்றழைக்கப்படும் IMPS பரிவர்த்தனையையும், Real Time Gross Settlement என்றழைக்கப்படும் RTGS பரிவர்த்தனையையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஏப். 1ஆம் தேதி IMPS, RTGS பரிவர்த்தனை சேவையை மட்டுமின்றி UPI சேவையையும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது, Google Pay, PhonePe, Paytm போன்ற செயலிகள் மூலமாக பண பரிவர்த்தனை செய்ய எவ்வித பிரச்னையும் இருக்காது. 

இதுகுறித்து ஹெச்டிஎப்சி வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிதியாண்டு இறுதி நடைமுறைகள் காரணமாக வெளிப்புற NEFT பரிவர்த்தனை ஏப்ரல் 1ஆம் தேதி தாமதமாகலாம் அல்லது கிடைக்காமல் போகலாம். எனவே, ஏப்.1ஆம் தேதி அன்று IMPS, RTGS அல்லது UPI சேவைகளை பயன்படுத்தி உங்கள் பரிவர்த்தனையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனால் ஏற்படக்கூடிய சிரமத்திற்கு வருந்துகிறோம்" என குறிப்பிட்டுள்ளது. ஹெச்டிஎப்சி வாடிக்கையாளர்கள் தங்களின் பணப் பரிவர்த்தனை சார்ந்த கேள்விகளுக்கு 1800 1600 /1800 2600 ஆகிய இலவச எண்களை தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 1ஆம் தேதி வங்கி இருக்குமா?    

மேலும், ஏப்.1ஆம் தேதியான நாளை நீங்கள் வங்கிக்குச் சென்று பண பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம் என திட்டமிட்டிருந்தால், நினைவில்கொள்ளுங்கள் அனைத்து வங்கிகளும் நிதியாண்டின் முடிவில் இந்திய ரிசர்வ் வங்கியின் விதிப்படி கணக்குகளை முடிக்க வேண்டும். எனவே, ஏப். 1ஆம் தேதியான நாளை எந்த வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு திறந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி தற்போது 2000 ரூபாய் நோட்டுகளை ஆர்பிஐ அலுவலகங்களில் மாற்றிக்கொள்ளும் நடைமுறை நாளை செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின்படி அனைத்து வங்கிகளும் இன்று செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | அலர்ட்! மார்ச் 31க்குள் இந்த வேலைகளை முடிச்சுருங்க, இல்லையென்றால் சிக்கல் தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News