ஓய்வெடுக்க லட்சக்கணக்கில் சம்பளம்... கரும்பு தின்ன கூலி கொடுக்கும் ‘சில’ வேலைகள்!

கடும் வெயிலில் பகல் பாராமல் வேலை செய்த பின் தான் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்காக சம்பாதிக்க முடியும் என்ற சூழலில் தான் பலர் வாழ்கின்றனர். இருப்பினும், உலகில் கரும்பு தின்ன கூலி கொடுப்பது போன்ற சில வேலைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா...

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 17, 2023, 03:36 PM IST
  • ஒவ்வொரு வகை ஐஸ்கிரீமை சுவைத்து, அதில் சரியான அளவில் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா மற்றும் சுவை நன்றாக உள்ளதா ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
  • அதிகமாக தூங்கினால், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இப்படி சோம்பேரித்தனமாக இருந்தால் என்ன செய்வது என நச்சரிக்க தொடங்கி விடுவார்கள்.
  • தூங்குவதற்கும் டிவி பார்ப்பதற்கும் கூட சம்பளம்.
ஓய்வெடுக்க லட்சக்கணக்கில் சம்பளம்... கரும்பு தின்ன கூலி கொடுக்கும் ‘சில’ வேலைகள்! title=

இன்றுவரை, நான்கு பைசா சம்பாதிப்பதற்காக எவ்வாளவு கடினமாக உழைக்க வேண்டியுள்ளது என்ற வசனத்தை பலர் கூறுவதை கேட்டிருப்பீர்கள். கடும் வெயிலில் பகல் பாராமல் வேலை செய்த பின் தான் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவுக்காக சம்பாதிக்க முடியும் என்ற சூழலில் தான் பலர் வாழ்கின்றனர். இருப்பினும், உலகில் கரும்பு தின்ன கூலி கொடுப்பது போன்ற சில வேலைகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா.அதில் நீங்கள் செய்ய வேண்டியது ஓய்வு எடுக்க வேண்டியது... அல்லது ஜாலியாக உணவருந்த வேண்டியது...அதற்கு பதிலாக உங்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. ஒன்றும் செய்யாமல் கூட நிறைய சம்பளம் கொடுக்கும் இதுபோன்ற சில சிறப்பு வேலைகளைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்வோம்.

கட்டிப்பிடி வேலை

உங்களை கட்டிப்பிடிப்பதற்கு கூட சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மிஸ்ஸி ராபின்சன், மனநல ஆர்வலர் மற்றும் தொழில் ரீதியாக உரிமம் பெற்ற கடில் தெரபிஸ்ட் (cuddle therapist), மக்களைக் கட்டிப்பிடிப்பதற்காக மூலம் பணம் சம்பாதிக்கிறார். மிஸ்ஸி ராபின்சன் தனது வாடிக்கையாளரை ஒரு இரவு கட்டிப்பிடிப்பதற்காக ரூ. 1.5 லட்சத்திற்கும் மேல் வசூலிக்கிறார்.

எதுவும் செய்யாமல் சுற்றி திரிய சம்பளம்

ஒருபுறம் மக்கள் நாள் முழுவதும் இரத்தமும் வியர்வையும் சிந்தி பணம் சம்பாதிக்கும் இடத்தில், மறுபுறம், ஜப்பான் நபர் எதுவும் செய்யாமல் பணம் சம்பாதிக்கிறார். உண்மையில், வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள அந்த நபர், குறிப்பிட்ட அவர்களுடன் நேரத்தை செலவிடுகிறார், சுற்றித் திரிகிறார், உணவு சாப்பிடுகிறார் மற்றும் அவர்கள் சொல்வதைக் கேட்கிறார். வெறுமனே, இந்த வேலைக்காக, அவர் சம்பந்தப்பட்டவரிடம் இருந்து நிறைய பணம் வாங்கிக் கொள்கிறார்.

மேலும் படிக்க | சருமத்தின் கீழ் நெளிந்த புழுக்களை கண்டு அதிர்ந்த பெண்! பச்சை ரத்த உணவினால் வந்த பாதிப்பு!

தூங்குவதற்கும் டிவி பார்ப்பதற்கும் கூட சம்பளம்

யாருக்குத்தான் தூங்க பிடிக்காது. ஆனால் அதிகமாக தூங்கினால், வீட்டில் இருக்கும் பெரியவர்கள் இப்படி சோம்பேரித்தனமாக இருந்தால் என்ன செய்வது என நச்சரிக்க தொடங்கி விடுவார்கள்.ஆனால் உலகில் உள்ள ஒரு தனித்துவமான நிறுவனம் தூங்குவதற்கு மட்டுமே ஆட்களை வேலைக்கு அமர்த்துகிறது. உண்மையில், ஆடம்பர படுக்கை நிறுவனமான க்ராஃப்டெட் பெட்ஸ், அதன் தளவாடங்களை பரிசோதிப்பதற்காக ஆட்களை வேலைக்கு அமர்த்துகிறது. இதனுடன், அவர்கள் தூங்குவதற்கும் டிவி பார்ப்பதற்கும் நிறுவனம் ஏற்பாடு செய்கிறது, அந்த நபர்களுக்கு நிறுவனம் பெரும் தொகையை வழங்குகிறது.

நூலகர்

நூலகர் பணி எளிதானது அல்ல, ஆனால் அது அவ்வளவு கடினம் அல்ல. இந்த வேலைக்கு, நீங்கள் விஷயங்களை நிர்வகிப்பதற்கான அறிவுத் திறன் கொண்டிருக்க வேண்டும். புத்தகங்கள் அல்லது மற்ற பொருட்கள் சரியான இடத்தில் உள்ளதா இல்லையா என்பதை நீங்கள் பார்க்க வேண்டும். இது தவிர, நூலக புத்தகங்களின் கணக்கு வைக்க வேண்டும். இதற்கு, மாதம், 20 முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை, ஆரம்ப சம்பளம் கிடைக்கும். இருப்பினும், நூலக அறிவியலில் முதுகலைப் பட்டம் மற்றும் அனுபவத்துடன், நீங்கள் கணிசமான சம்பளத்தைப் பெற முடியும்.

மிமிக்ரி கலைஞர்

உங்களிடம் தனித்துவமான குரல் இருந்தால் அல்லது மிமிக்ரி செய்யும் திறன் இருந்தால், மிமிக்ரி திறனின் அடிப்படையில் மட்டுமே, நிறைய பணம் சம்பாதிக்க முடியும். விளம்பரங்கள், வீடியோ கேம்கள், தொலைக்காட்சி அல்லது திரைப்படங்களில் குரல் கொடுப்பதன் மூலம் நீங்கள் பெரும் சம்பளத்தைப் பெறலாம். 

மேலும் படிக்க | நடுரோட்டில் மனைவியை மறந்து விட்டு சென்ற கணவன்! அதுவும் 160 கி.மீ., - எப்படி தெரியுமா?

டேப் ஆபரேட்டர்

டேப் ஆபரேட்டரின் வேலை மிகவும் எளிதானது. இதில் டேப் பாக்ஸுடன் இரவும் பகலும் ஒரு அறையில் அமர்ந்து சர்வரில் டிஜிட்டல் பிரதிகளை போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இந்த வேலையை நீங்கள் பகுதி நேரமாகவும் முழு நேரமாகவும் செய்யலாம். மறுபுறம், நாம் சம்பளத்தைப் பற்றி பேசினால், இதற்காக நிறுவனம் டேப் ஆபரேட்டருக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ 2500 முதல் 2800 வரை செலுத்துகிறது.

ஐஸ்கிரீம் பரிசோதனையாளர்

ஐஸ்கிரீம் சோதனையாளரின் வேலை அநேகமாக உலகின் சிறந்த வேலை. ஒவ்வொரு நபரும் நிச்சயமாக இந்த வேலையைச் செய்ய மிகவும் விரும்புவார்கள். உண்மையில், ஒரு ஐஸ்கிரீம் சோதனையாளர் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு வகை ஐஸ்கிரீமை சுவைத்து, அதில் சரியான அளவில் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா மற்றும் சுவை ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். இது தவிர, ஐஸ்கிரீம் சோதனையாளரின் பணிகளில் புதிய வகை ஐஸ்கிரீம் தயாரிப்புகளை தயாரிக்க வேண்டும். அதே நேரத்தில், ஒரு ஐஸ்கிரீம் சோதனையாளரின் சம்பளம் ஆண்டுக்கு 28 லட்சம் முதல் 78 லட்சம் ரூபாய் வரை இருக்கும்.

உணவை அலங்கரிக்கும் பணி

நீங்கள் பல விளம்பரங்களில் அழகான உணவுப் பொருட்களைப் பார்த்திருப்பீர்கள். அவற்றைப் பார்த்தவுடன் சிலசமயங்களில் வாயில் உமிழ் நீர் வடியும். ஆனால் இதுவும் ஒரு வகை வேலையின் ஒரு பகுதியாகும். பொதுவாக, போட்டோஷூட்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி விளம்பரங்கள் மூலம் விலையுயர்ந்த உணவகங்களுக்கு உணவுப் பொருட்களைப் அலங்கரித்து வைப்பது உணவு ஒப்பனையாளரின் வேலை. அந்த விளம்பரத்தைப் பார்க்கும் மக்கள் அதன் பக்கம் ஈர்க்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். அழகாம அலங்கரிக்கப்பட்டுள்ள அந்த உணவுப் பொருளின் விற்பனை அதிகரிக்கலாம். இப்போது இந்த வேலைக்கு, ஒரு உணவு ஒப்பனையாளர் ஆண்டுக்கு 19 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.

மேலும் படிக்க | அம்மா திட்டியதால் வந்த கோபம்! சைக்கிளில் 130 KM சென்று பாட்டியிடம் புகார்!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News