4 ஜிபி டேட்டா இலவசம்... இதை செய்தால் போதும் - தீபாவளிக்கு பம்பர் பரிசை வழங்கும் BSNL

BSNL Diwali Offer: பிஎஸ்என்எல் நிறுவனம் தங்களது வாடிக்கையாளருக்கு 4 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்க உள்ளது. ஆனால், அதுகுறித்து முழு தகவல்களையும் இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Nov 7, 2023, 01:25 PM IST
  • தீபாவளியை முன்னிட்டு இந்த ஆப்பரை பிஎஸ்என்எல் வழங்குகிறது.
  • ஏற்கெனவே 3 ஜிபி டேட்டாவை பிஎஸ்என்எல் இலவசமாக வழங்குகிறது.
  • 4ஜி தரத்திற்கு மாற்ற பிஎஸ்என்எல் நடவடிக்கை எடுத்து வருகிறது.
4 ஜிபி டேட்டா இலவசம்... இதை செய்தால் போதும் - தீபாவளிக்கு பம்பர் பரிசை வழங்கும் BSNL title=
BSNL Diwali Offer: தற்போது பலரும் ஜியோ சிம்மைதான் பயன்படுத்துகின்றனர். ஏர்டெல், வோடோஃபோன் ஐடியோ போன்ற நிறுவனங்களும் தொலைத்தொடர்பு துறையில் இயங்கி வந்தாலும் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மலிவு விலையில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.
 
குறிப்பாக, தீபாவளிக்கு சில சலுகைகளை பிஎஸ்என்எல் அறிவித்தது. அதாவது சில ரீசார்ஜ் திட்டங்களுக்கு 3 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குவதாக பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்திருந்தது. அந்த வகையில், தற்போது அதன் பழைய வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் ஒரு நல்ல செய்தியை வழங்கி உள்ளது.
 
பிஎஸ்என்எல் தங்கள் பழைய சிம்மை 4ஜி தரத்திற்கு மேம்படுத்தும் பயனர்களுக்கு 4 ஜிபி இலவச டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. ஆனால், இந்தச சலுகை ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கானது என்பதை நினைவில் கொள்ளவும். ஆனால் விரைவில் இது நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் இந்த சலுகையானது, சமீபத்திய தொழில்நுட்பத்துடன் கூடிய சிம்மிற்கு மாறுவதற்கும், 4ஜியின் வேகமான வேகத்தை அனுபவிப்பதற்கும் பயனர்களை ஊக்குவிப்பதாகும். 
 
ஆந்திரப் பிரதேசத்தின் பிஎஸ்என்எல் இந்தச் சலுகையை ட்விட்டரில் அறிவித்துள்ளது. இந்த சலுகையின்கீழ், பயனர்கள் தங்கள் பழைய 2ஜி/3ஜி சிம்மை 4ஜிக்கு இலவசமாக மேம்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதற்குப் பிறகு, அவர்கள் 4 ஜிபி இலவச டேட்டாவைப் பெறுவார்கள், இது மூன்று மாதங்கள் வரை செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
உங்கள் பழைய சிம்மை 4ஜிக்கு மேம்படுத்தினால், பிஎஸ்என்எல்லின் அதிவேக நெட்வொர்க்கில் 4 ஜிபி இலவச டேட்டாவை அனுபவிக்க முடியும். 4ஜி சிம்மிற்கு மேம்படுத்த, உங்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் பராமரிப்பு மையம், சில்லறை விற்பனையாளர் உள்ளிட்டவற்றை அணுகவும். இந்த முழு செயல்முறையும் இலவசமானதுதான், எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை மற்றும் இது சில நிமிடங்களில் முடியும் செயல்முறையாகும் .
 
உங்கள் சிம் கார்டு வகையைச் சரிபார்க்க 'SIM' என்ற செய்தியுடன் 54040 என்ற எண்ணுக்கு SMS அனுப்பலாம். 3ஜி என்று குறிக்கும் SMS உங்களுக்கு வந்தால், உங்கள் சிம்மை 4ஜி தரத்துக்கு இலவசமாக மேம்படுத்தலாம். பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களை இந்த சலுகையின் மூலம் 4ஜி வேகமான வேகத்தை அனுபவிக்க ஊக்குவிக்கிறது. 4ஜி மூலம், வீடியோ ஸ்ட்ரீமிங், கேமிங் மற்றும் பிற ஆன்லைன் செயல்பாடுகளை எந்த இடையூறும் இல்லாமல் செய்யலாம்.
 
BSNL தீபாவளி ஆஃபர்
 
பண்டிகை காலத்தை கொண்டாடும் வகையில் பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு இரண்டு புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகைகள் BSNL Selfcare செயலியில் கிடைக்கும். முதல் சலுகையானது 249 ரூபாய்க்கு மேல் ரீசார்ஜ் செய்தால் 2 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. திட்டங்கள், டாப்-அப்கள் மற்றும் டேட்டா பேக்குகள் உட்பட அனைத்து வகையான ரீசார்ஜ்களுக்கும் இந்த தள்ளுபடி பொருந்தும்.
 
தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இதுகுறித்து கூறியதாவது, பிஎஸ்என்எல் இந்தியாவில் 4ஜி உள்கட்டமைப்பின் பெரிய அளவிலான வரிசைப்படுத்தலை தீபாவளியில் இருந்து தொடங்கும். பிஎஸ்என்எல் ஜூன் 2024ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 4ஜி சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் பிறகு நிறுவனம் 5ஜி வெளியீட்டில் கவனம் செலுத்தும். 4ஜி வெளியீடு பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான படியாகும். இது நிறுவனம் போட்டித்தன்மையுடன் இருக்கவும் அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கவும் உதவும்.
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News