உங்கள் அறையே ஊட்டியாக மாற... தள்ளுபடியில் கிடைக்கும் இந்த பிராண்டட் ஏசிகளை பாருங்க!

Air Conditioner Amazon Offer 2024: அமேசான் தளத்தில் கிடைக்கும் 1 டன் ஏசிக்களில் மூன்று சிறந்த மாடல்களையும், அதன் மீதான தள்ளுபடிகளையும் இங்கு காண்போம்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 27, 2024, 12:17 AM IST
  • ஏசி இந்த சமயத்தில் நல்ல தள்ளுபடியில் கிடைக்கும்.
  • எனவே, இது ஏசி வாங்க நினைப்போருக்கு ஏற்ற நேரமாகும்.
  • எல்ஜி, வோல்டாஸ், கோத்ரேஜ் உள்ளிட்ட பிராண்டட் தயாரிப்புகளும் தள்ளுபடியில் கிடைக்கிறது.
உங்கள் அறையே ஊட்டியாக மாற... தள்ளுபடியில் கிடைக்கும் இந்த பிராண்டட் ஏசிகளை பாருங்க! title=

1 Ton Air Conditioner Amazon Offer 2024: இந்த கோடை காலத்தில் ஏசி இல்லாமல் யாராலும் இருக்க முடியாது என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம். நம் வீடுகளில் வயதானோர் இதை சொல்வதை நாம் கேட்டிருப்போம், "நாங்கள் எல்லாம் மின்சாரமே இல்லாமல் வாழ்ந்தோம்" என்பார்கள், இதை கேட்கும்போது அது எப்படி லைட், பேன் இல்லாமல் இருந்தார்கள் என யோசிக்க வைக்கும். ஒரு நிமிடம் மின்தடை ஏற்பட்டாலே வெந்து போகும் அளவிற்கு நொந்து போவோம். 

அதேபோல், இப்போது உள்ள குழந்தைகளில் நாங்கள் எல்லாம் கோடை காலத்தில் வெறும் பேன் காத்திலேயே வாழ்ந்தோம் என கூறினார் ஆச்சர்யப்படுவார்கள் என தோன்றுகிறது. அந்தளவிற்கு நம் வீடுகளிலும், அலுவலகங்களிலும், வெளியிடங்களிலும் ஏசியின் ஆதிக்கம் அதிமாகி உள்ளது. ஏர் கூலர் ஆகியவற்றை விட ஏசிதான் பல இடங்களில் இப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

ஆதிக்கம் செலுத்தும் ஏசி... ஏன்?

ஏசி என்பது அதிக கார்பன்டை ஆக்ஸைடை உமிழும் என்றும், சுற்றுச்சூழலுக்கு கேடை உண்டாக்கும் என நம் பாடப்புத்தகங்களின் மூலம் கற்பிக்கப்பட்டாலும் வெயிலின் தாக்கத்தை யாராலும் தாங்க முடியவில்லை என்பதையும் இதில் மூலம் புரிந்துகொள்ளலாம். அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் கோடை காலத்தில் வெப்பம் என்பது பகல் நேரத்தில் பலமாகவும், இரவில் கடும் புழுக்கமாகவும் இருக்கும். 

மேலும் படிக்க | ஏசி ஓடினாலும் கரண்ட் பில் வராமல் இருக்க சூப்பர் டிப்ஸ்!

அந்த வகையில், எப்போதும் கோடை காலத்தில் ஏசி விற்பனை என்பது ஆன்லைனிலும் சரி, ஸ்டோர்களிலும் சரி அதிகமாக இருக்கும். எனவே, இந்த சீசனில் ஏசி நல்ல தள்ளுபடியிலும் கிடைக்கும். அமேசான், பிளிப்கார்ட் தளங்கள் கூட இந்த கோடை காலத்தில் வாடிக்கையாளர்களை ஈர்க்க ஏசிக்கு கடும் தள்ளுபடியை வழங்குவதை நாம் பார்த்திருப்போம். அந்த சூழலில், ஏசியை எப்படி பார்த்து வாங்குவது, எது சிறந்தது என்பதில் பலருக்கும் சந்தேகம் வரும். அந்த வகையில் இப்போது அமேசான் தளத்தில் கிடைக்கும் 1 டன் ஏசிக்களில் மூன்று சிறந்த மாடல்களை இங்கு காண்போம். 

கோத்ரெஜ் 1 டன் ஏசி

இந்த ஏசி 3 ஸ்டார் மதிப்பீட்டுடன் வருகிறது, இது மின்சார சேமிப்பை அடிப்படையாக கொண்டது. இந்த ஏசியில் 5-இன்-1 கன்வெர்டப்பிள் கூலிங் இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி ஆகும். இந்த ஏசியில் சென்ஸ் தொழில்நுட்பம் எனப்படும், வெளிப்புற சூழலை அதாவது வெப்பநிலையை தானாகவே கணித்து அதற்கேற்ப அறையை குளிரூட்டும் வசதி உள்ளது. இந்த ஏசி அமேசான் தளத்தில் 32 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் விலை 28 ஆயிரத்து 990 ரூபாய் ஆகும். வங்கி கார்டை பயன்படுத்தினால் 2 ஆயிரம் ரூபாய் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். மேலும், 1, 405 ரூபாய் மாதத் தவணை செலுத்தியும் இந்த ஏசியை நீங்கள் வாங்கலாம். 

எல்ஜி 1 டன் ஏசி

இந்த ஏசி 4 ஸ்டார் மதிப்பீட்டில் வருகிறது, இந்த மதிப்பீடு மின்சார சேமிப்பு அம்சத்தை சார்ந்தது. இது 6 இன் 1  கன்வெர்டப்பிள் ஏசி ஆகும். இந்த ஏசியில் ஹெச்டி ஃபில்டருடன் கூடிய ஆன்டி-வைரஸ் பாதுகாப்பு தொழில்நுட்பம் உள்ளது. அமேசானில் இந்த ஏசியை 50 சதவீத தள்ளுபடியில் பெறலாம். இதன் விலை தள்ளுபடியுடன் 35 ஆயிரத்து 990 ரூபாய் ஆகும். வங்கி கார்டு மூலம் வாங்கினால் 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். மேலும், இந்த ஏசியை 1,745 ரூபாய் மாதத் தவணையில் நீங்கள் வாங்கலாம்.

வோல்டாஸ் 1 டன் ஏசி

இந்த இன்வெர்ட்டர் ஸ்பிளிட் ஏசி அமேசானில் 49 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஏசி மூன்று ஸ்டார் மதிப்பீட்டில் வருகிறது, அதாவது இந்த மதிப்பீடு என்பது மின்சார சேமிப்பை அடிப்படையாக வைப்பது. இந்த ஏசியில் ஆன்டி-டஸ்ட் ஃபில்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் Sleep Mode உள்ளது. இந்த ஏசியை நீங்கள் தள்ளுபடியுடன் 28 ஆயிரத்து 990 ரூபாயில் வாங்கலாம். வங்கி கார்டு மூலம் இதனை வாங்கினால் கூடுதலா 2 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியும் கிடைக்கும். வெறும் 1,405 ரூபாயை மாதத் தவணையாக செலுத்தி இந்த ஏசியை நீங்கள் வாங்கலாம். 

மேலும் படிக்க | இனி கூகுள் மேப்ஸ் மூலம் எலக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷனையும் கண்டுபிடிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News