அடுத்து இந்த திமுக அமைச்சரின் வீட்டில் அமலாக்கதுறை சோதனை? வெளியான தகவல்!

தமிழ்நாட்டில் அடுத்த அமலாக்கதுறை சோதனை அமைச்சர் சேகர் பாபு வீட்டில் தான் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா பேசியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Aug 9, 2023, 07:42 AM IST
  • தற்போது தமிழகத்தில் நடப்பது கிரிமினல் ஆட்சி.
  • தகுதி இல்லாத அமைச்சர் சேகர் பாபுவை தூக்கி எறியவேண்டும்.
  • தமிழ்நாட்டிற்கு இந்துசமய அறநிலைத்துறை வேண்டாம்.
அடுத்து இந்த திமுக அமைச்சரின் வீட்டில் அமலாக்கதுறை சோதனை? வெளியான தகவல்! title=

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இந்து முன்னனி கட்சி சார்பாக இஸ்லாமிய, கிறிஸ்தவர்களுக்கு தொடர்ந்து ஆதரவாகவும் , இந்துக்களுக்கு விரோதமாகவும் செயல்பட்டு வரும் திருச்சி மாவட்ட அரசு நிர்வாகத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தலைமை தாங்கினார்.  பின்பு நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றிய எச்.ராஜா, திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் கிழக்கு வாசல் கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்தது தொடர்பாக நேரில் ஆய்வு செய்த தமிழ்நாடு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு மற்றும் அமைச்சர் கே.என். நேரு ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது அமைச்சர் நேரு, வீட்டில் உள்ள காரை பெயர்ந்து விழுவது போல் இங்கு விழுந்துள்ளது. இது ஒரு பிரச்சனையா? என கூறி இருக்கிறார். என்ன முட்டால் தனமான பேச்சு, திராவிடமாடல் ஆட்சி இந்து இயக்கத்திற்கும், தேசிய இயக்கத்திற்கும் விரோதமாக செயல்படுவது உறுதியாகி உள்ளது. 

மேலும் படிக்க | அரசு வேலை தேடுகிறீர்களா..? இது போன்றவரின் வலையில் சிக்காமல் இருங்கள்!

மேலும் இந்துசமய அறநிலைத்துறைக்கு தகுதி இல்லாத அமைச்சர் சேகர் பாபுவை தூக்கி எறியவேண்டும். தமிழ்நாட்டிற்கு இந்துசமய அறநிலைத்துறை வேண்டாம். அமைச்சர் சேகர்பாபு ஒரு கட்டபஞ்சாயத்து, ஆள்கடத்தல் செய்பவர், அவர் எப்படி அமைச்சராக இருக்க முடியும். தமிழகத்தில் அடுத்த அமலாக்கதுறை சோதனை சேகர் பாபு வீட்டில் தான் நடக்கும் என்றார். இந்து அறநிலைதுறைக்கு இந்து வெறியர்கள் தான் அமைச்சராக இருக்க வேண்டும். தற்போது தமிழகத்தில் நடப்பது கிரிமினல் ஆட்சி, இந்துக்களுக்கு எதிரான ஆட்சி, ஆகையால் உடனடியாக இதை அகற்ற வேண்டும். குறிப்பாக் திருடன் கையில் சாவியை கொடுத்தது போன்று, இந்துக்கள் கோயில்களில் உள்ள நகை, பணம், நிலம் ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். திமுக மு.க.ஸ்டாலின் ஆட்சி மிகவும் மோசமான ஆட்சி, சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. இவர்களை அடித்து துரத்தவேண்டும், அதுவும் ஓட்டுக்கள் மூலம் நாம் செய்ய வேண்டும். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழ்நாட்டில் புல்டோசர் ஆட்சி அமையும் , அப்போது அவர்கள் அனைவரும் தூக்கி எறியபடுவார்கள். 

மேலும் கடற்கரையில் எழுதாத பேனாவிற்கு சிலை வைக்கிறார்கள். தமிழ்நாட்டில் குடி என்றால் என்ன என்று தெரியாமல் மக்கள் இருந்தார்கள், ஆனால்  கலைஞர் கருணாநிதி ஆட்சியில் தான் மதுபானம் கொண்டுவந்து அனைவரையும் குடிக்காரனாக ஆக்கிவிட்டார்கள், இது தான் திராவிட மாடம் ஆட்சி ஆகும். திமுகவில் இலாக்கா இல்லாத அமைச்சர்கள் பலர் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னால் சமூக வலைத்தளங்களில் செந்தில் பாலாஜி இறந்து 50 நாட்கள் ஆகிவிட்டது என தகவல் வந்தது, அதை பார்த்து நான் பயந்துவிட்டேன். ஆனால் நேற்று காவல்துறை விசாரணைக்கு செந்தில் பாலாஜியை அழைத்து சென்ற காட்சியை பார்தபிறகு தான் அப்பாடா என்று உயிர் வந்தது. மேலும் தமிழ்நாட்டில் ஆளுநர் வேண்டாம் என்று சொல்லுகிறார்கள், ஆனால் ஆளுநர் ஒருமுறை இந்த ஆட்சியை பற்றி ஒரு கடிதம் எழுதினால் திமுக ஆட்சி கழைந்துவிடும். 

மேலும் இந்துக்களுக்கு எதிராக நடக்கும் போக்கை முற்றிலும் கைவிட வேண்டும். தமிழ்நாடில் இந்துக்கள் ஒன்று இணைந்து ஆர்பாட்டம் நடத்தபடும். தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி என்பது மக்களுக்கும், இந்துக்களுக்கும் விரோதமான , அராஜக ஆட்சி நடக்கிறது. திராவிடமாடல் இயக்கத்தின் கடைசி சகாப்தம் இது தான் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | இந்தி மொழி திணிப்பா? அமித் ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News