ஆர்சிபிக்கு பிளேஆப் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த சிஎஸ்கே! எப்படி தெரியுமா?

Gujarat Titans vs Chennai Super Kings: சென்னை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 11, 2024, 12:15 PM IST
  • பிளேஆப்க்கு தகுதி பெரும் ஆர்சிபி.
  • மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டும்.
  • மற்ற சில அணிகள் தோல்வி அடைய வேண்டும்.
ஆர்சிபிக்கு பிளேஆப் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த சிஎஸ்கே! எப்படி தெரியுமா? title=

சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் 2024ன் முக்கியமான லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்து உள்ளது. இந்த போட்டிக்கு முன்பு வரை சென்னை அணி பிளேஆஃப்க்கு தகுதி பெரும் வாய்ப்பை நன்றாக வைத்து இருந்தனர். ஆனால் நேற்று நடைபெற்ற போட்டியில் 35 ரன்கள் தோல்விக்கு பிறகு பிளே ஆப் கனவு சற்று கடினம் ஆகி உள்ளது. சென்னை அணி தோல்வி அடைந்துள்ளதால் புள்ளிகள் பட்டியலில் கீழே உள்ள சில அணிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். சென்னை அணியின் தோல்வியால் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பிளேஆஃப்களுக்கு தகுதிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | ஐபிஎல் 2024 ப்ளேஆஃப் வாய்ப்புகள்: பஞ்சாப், மும்பை அவுட்! ஆர்சிபி, சிஎஸ்கே, டெல்லி, லக்னோ யாருக்கு வாய்ப்பு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தற்போது 12 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் உள்ளது. அவர்கள் முதல் 8 போட்டிகளில் 7 ஆட்டங்களில் தோல்வியடைந்தனர். அதன் பிறகு தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தற்போது வெற்றி பெற்றுள்ளனர். கடைசி இரண்டு போட்டிகளில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான விளையாட உள்ளனர். இந்த இரண்டு போட்டிகளிலும் ஆர்சிபி வெற்றி பெற வேண்டும். இதன் மூலம் 14 புள்ளிகளுடன் பிளே ஆப்க்கு செல்ல வாய்ப்பு உள்ளது.  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் 16 புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களில் உள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் தற்போது உள்ளது. அவர்களுக்கு இன்னும் 2 ஆட்டங்கள் மீதமுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ஆர்சிபிக்கு எதிராக இன்னும் இரண்டு ஆட்டங்களில் விளையாட உள்ளது. இதில் ஒரு போட்டியில் தோல்வி அடைந்தாலும் பிளே ஆப் வாய்ப்பை இழக்க நேரிடும். இது ஆர்சிபி அணிக்கு சாதகமாக அமையும். 

சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் 14 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகர ரன் ரேட் விகிதம் அதிகமாக இருந்தால் பிளேஆப்க்கு தகுதி பெற முடியும். ஆர்சிபி அணிக்கு இருக்கும் இன்னொரு நல்ல செய்தி என்னவென்றால் அவர்களின் நிகர ரன் விகிதம் தற்போது +0.22 ஆக உள்ளது.  இது டெல்லி மற்றும் லக்னோ அணியைவிட அதிகமாக உள்ளது.  இருப்பினும் லக்னோ, டெல்லி அல்லது சென்னை ஆகிய மூன்று அணிகளில் ஏதேனும் ஒரு அணி 16 புள்ளிகளை பெற்றாலும் ஆர்சிபி வெளியேறிவிடும். 

மேலும் படிக்க | இப்போதே கேப்டன்ஸியில் இருந்து விலகும் கேல்எல் ராகுல்? - அடுத்து எந்த அணிக்கு செல்ல வாய்ப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News