சட்டுபுட்டுனு வெயிட்டை குறைக்கனுமா? யோசிக்காம இரவில் ‘இதை’ பண்ணுங்க..

Rapid Weight Loss Tips Nighttime Routine : உடல் எடையை குறைப்பது என்பது வெளியில் இருந்து பார்க்க கடினமாக தோன்றினாலும், உள்ளிருந்து பார்த்தால்தான் அதில் என்னென்ன சிரமங்கள் இருக்கிறது என்பது புரியும். அந்த வகையில், உடல் எடையை குறைக்க இரவில் செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம். 

Rapid Weight Loss Tips Nighttime Routine : உலகில் இருக்கும் பெரும்பான்மையான மக்கள் அவஸ்தைப்படுவது, உடல் பருமன் பாதிப்பினால்தான். இதனால் இருதய நோய் பாதிப்புகள், உடல் நலக்கோளாறுகள் என பல பாதிப்புகள் ஏற்படலாம். இதை தடுக்க, உடல் எடையை குறைப்பது சிறந்தது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எடையை குறைக்க, நாம் உடற்பயிற்சி செய்வது டயட் இருப்பதை தாண்டி சில பழக்க வழக்கங்களை நம் அன்றாட வாழ்க்கையில் இணைத்துக்கொள்ள வேண்டும். அதிலும், குறிப்பாக இரவில் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 

1 /7

நம் உடலில் ஆரம்பிக்கும் ஒவ்வொரு நோய் பாதிப்பும், உடல் எடை அதிகரிப்பில் இருந்து ஆரம்பிப்பதாக ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதை தவிர்க்க, நாம் நமது வாழ்வில் சில மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அவை என்னென்ன தெரியுமா?

2 /7

நீர்ச்சத்து :  உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். தினசரி நன்றாக தண்ணீர் மற்றும் பழச்சாறு ஆகியவற்றை குடித்து உடல் நலனை பாதுகாக்க வேண்டும். இதனால், இரவில் திடீரென்று பசி ஏற்படாமல் இருக்கும். 

3 /7

மிதமான உடற்பயிற்சி: மாலை வேளைகளில் மிதமான உடற்பயிற்சிகள் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். சிறிது தூரம் நடைப்பயிற்சி, மிதமான யோகா பயிற்சி, வேக நடைப்பயிற்சி என அந்த உடற்பயிற்சி எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

4 /7

மொபைல் உபயோகம்: அதிக நேரம் எலக்ட்ரானிக் சாதனங்களை தூங்க போகும் நேரத்தில் அதிகம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். மடிக்கணினி, செல்போன், டேப்லட் உள்ளிட்டவற்றை உபயோகிப்பதை தவிர்க்கவும். 

5 /7

தூக்க நேரம்: என்னதான் விழுந்து விழுந்து ஒரு சிலர் உடற்பயிற்சி செய்தாலும் ஒரு சிலரால் உடல் எடையை குறைக்க முடியாமல் இருக்கும். அதற்கு காரணம், அவர்கள் குறைவான நேரம் தூங்குவதாக இருக்கலாம். எனவே 7 முதல் 8 மணி நேரம் உறங்குகிறீர்களா இல்லையா என்பதை பார்த்துக்கொள்ளவும். 

6 /7

இரவு ஸ்நாக்ஸ்: இரவு நேரங்களில் பசி எடுத்தால் எண்ணெயில் பொறித்த, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நொறுக்கு தீனிக்களை சாப்பிடுவதை தவிர்க்கவும். இது, வெயிட் போட முக்கிய காரணியாக அமையலாம். 

7 /7

மன அழுத்தம்: உடலும் மனதும் நன்றாக இருந்தால் மட்டுமே நாம் உடல் எடையை எந்த வித தடையுமின்றி குறைக்க முடியும். எனவே, உறங்குவதற்கு முன்னர் உங்கள் மனதினை ரிலாக்ஸ் செய்யும் விஷயங்களை செய்ய வேண்டும்.