மழையால் வெளியேறியது குஜராத்... குவாலிபயர் 1இல் கேகேஆர் - எந்தெந்த அணிகளுக்கு இது பயன்?

GT vs KKR Match Abandoned Due To Rain: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற இருந்த குஜராத் - கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. 

  • May 13, 2024, 23:22 PM IST

இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்ட நிலையில், குஜராத் அணி அதிகாரப்பூர்வமாக தொடரில் இருந்து வெளியேறியது.

1 /7

ஐபிஎல் தொடரின் 63வது லீக் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் இன்று திட்டமிடப்பட்டிருந்தது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத இருந்தன.   

2 /7

இருப்பினும் தொடர் மழை காரணமாக டாஸ் கூட வீசப்படவில்லை. மழை பெய்துகொண்ட இருந்ததால் கவர்ஸ் மைதானத்தில் இருந்து எடுக்கப்படவே இல்லை. 10.56 மணிக்குள் மைதானம் தயாராகிவிட்டால் போட்டி தலா 5 ஓவர்கள் என்ற அடிப்படையில் நடத்தப்படும் என கூறப்பட்டது.   

3 /7

ஆனால், மழை காரணமாகவும், மைதானம் போட்டிக்கு தயாராகாததாலும் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இரு அணிகளும் தலா 1 புள்ளிகள் வழங்கப்பட்டன.   

4 /7

கொல்கத்தா அணிக்கு 13 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 19 புள்ளிகளை பெற்று முதலிடத்தை தக்கவைத்தது மட்டுமில்லாமல் குவாலிபயர் 1 போட்டியையும் உறுதிப்படுத்திக்கொண்டது. ராஜஸ்தான் அணியால் மட்டுமே கொல்கத்தாவின் புள்ளிகளை இனி தாண்ட முடியும் என்பதால் கொல்கத்தா அணி குவாலிபயர் 1 போட்டிக்கு தகுதிபெற்றது.   

5 /7

மறுபுறம், 2022ஆம் ஆண்டில் அறிமுகமாகி அந்த ஆண்டே கோப்பையை வென்று, 2023ஆம் ஆண்டில் இறுதிப்போட்டி வரையும் வந்த குஜராத் டைட்டன்ஸ் அணி முதல்முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறி உள்ளது.   

6 /7

குஜராத் 13 போட்டிகளில் 11 புள்ளிகளை தற்போது பெற்றுள்ளது. அடுத்த போட்டியை வென்றாலும் கூட 13 புள்ளிகளே கிடைக்கும் என்பதால் அந்த அணிக்கு பிளே ஆப் வாய்ப்பு இல்லை. ஏனென்றால் ஏற்கெனவே 4 அணிகள் 14 புள்ளிகளை பெற்றுவிட்டன.  

7 /7

குஜராத்தின் வெளியேற்றத்தால் ஆர்சிபி, டெல்லி, லக்னோ அணிகள் நிச்சயம் குஷியில் இருக்கும் எனலாம். வரும் மே 16ஆம் தேதி குஜராத் அணி, ஹைதராபாத் அணியை வீழ்த்தும்பட்சத்தில் மேற்குறிப்பிட்ட அணிகளுக்கு அது மேலும் குஷியை தரும் எனலாம்.