தனுஷின் ராயன் ஆடியோ லான்ச் குறித்து வெளியான மாஸ் அப்டேட்

Dhanush Raayan Audio Launch: தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் இன்று தற்போது வெளியாகியுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 15, 2024, 11:34 AM IST
  • ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா.
  • ரிலீஸ் ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போயுள்ளது.
  • இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் கடந்த 9 ஆம் தேதி வெளியானது.
தனுஷின் ராயன் ஆடியோ லான்ச் குறித்து வெளியான மாஸ் அப்டேட் title=

Dhanush Raayan Movie Grand Audio Launch Update : தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் இன்று தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு அப்டேட்டை இந்த கட்டுரையில் காணபோம்.

ராயன் திரைப்படம் :
திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், தனுஷ். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் சினிமாவின் திறமை மிகு கதாநாயகர்களில் ஒருவராக உள்ளார். தற்போது இவர், தனது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரது 50வது படத்திற்கு ‘ராயன்’ (Dhanush Raayan Movie) என பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை தனுஷ் இயக்கி அவரே நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் தனுஷூடன் இணைந்து எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், பிரகாஷ்ராஜ், உஷாரா விஜயன், அபர்ணா முரளி வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். கேங்ஸ்டர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாகக் கொண்டு இந்த படத்தின் ஷூட்டிங் நடத்தி தற்போது முடிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஏப்ரல் மாதத்திலேயே ரிலீசாகவிருந்த சூழலில் தற்போது படத்தின் ரிலீஸ் ஜூன் மாதத்திற்கு தள்ளிப் போனது.

ராயன் படத்தின் இசை வெளியீட்டு விழா:
இதனிடையே இந்த படம் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிப்பு வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் கடந்த மே 9 ஆம் தேதி வெளியானது. மேலும் அடங்காத அசுரன் என்கிற பாடலும் வெளியானது. 

மேலும் படிக்க | சென்னையில் புதிதாக டான்ஸ் ஸ்டூடியோ தொடங்கிய நடிகை கிகி சாந்தனு!

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஆடியோ லான்ச் எப்போது என்பதை பற்றி தற்போது தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜூன் மாதம் 1 ஆம் தேதி மிகப்பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தனுஷை வைத்து படமெடுத்த இயக்குனர்கள் அனைவரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள இருப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது.

நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் :
இதினிடையே தற்போது நடிகர் தனுஷ், “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” (Nilavukku Enmel Ennadi Kobam) என்ற படத்தை இளம் நடிகர்களை வைத்து இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில் பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இதனிடையே தான் கமிட் செய்தபடி சேகர் கம்முலா இயக்கத்தில் அடுத்ததாக டி51 படத்தில் (D51) தற்போது நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறார். அடுத்து ‘ராஞ்சனா’ பட இயக்குநர் ஆனந்த் எல்.ராஜ் இயக்கும் ‘தேரி இஷ்க மெயின்’ என்ற படத்திலும் தனுஷ் நடிக்கிறார். இதற்கு அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் இணைய உள்ளார் தனுஷ்.

மேலும் படிக்க | கூல் சுரேஷிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை எங்களுக்கு கொடுப்பதில்லை... படிக்காத பக்கங்கள் படக்குழு குமுறல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News