அண்ணா சீரியல்: சண்முகத்தை காக்க வந்த முருகன்.. சர்வ நாசமான சௌந்தரபாண்டியின் திட்டம்

Anna Zee Tamil Serial: நேற்றைய எபிசோடில் ரவுடி இடுப்பில் இருந்து கத்தி கீழே விழ பரணி ஷண்முகம் பக்கத்தில் ஓடி வந்து உட்கார்ந்து ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.   

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 15, 2024, 01:22 PM IST
  • அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • சண்முகத்தை காக்க வந்த முருகன்.
  • சர்வ நாசமான சௌந்தரபாண்டியின் திட்டம்.
அண்ணா சீரியல்: சண்முகத்தை காக்க வந்த முருகன்.. சர்வ நாசமான சௌந்தரபாண்டியின் திட்டம் title=

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ரவுடி இடுப்பில் இருந்து கத்தி கீழே விழ பரணி ஷண்முகம் பக்கத்தில் ஓடி வந்து உட்கார்ந்து ஷாக் கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, ஷண்முகம் பரணியை பார்த்ததும் ஷாக்காகி நீ என்ன இங்கே என்று கேள்வி கேட்கிறான். அதன் பிறகு ரவுடிகள் இங்கே சண்முகத்தை போட்டு தள்ள தயாராகின்றனர். மறுபக்கம் சத்ரு யாகம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. 

மேலும் படிக்க | திருமண வாழ்விலிருந்து நாங்கள் பிரிகிறோம்: ஜி.வி.பிரகாஷ், சைந்தவி அறிவிப்பு

இந்த நிலையில் சண்முகத்தை பார்க்க வைகுண்டம் வீட்டிற்கு வந்த இசக்கியும் பாக்யமும் எப்படியாவது இந்த யாகத்தை நிறுத்த வேண்டும் என்ற முடிவுடன் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது அய்யர் நெய் கேட்க பாக்கியமும் இசக்கியும் சேர்ந்து நெய்க்கு பதிலாக பெட்ரோலை மாற்றி கொடுக்கின்றனர். 

அய்யர் நெய் என்று நினைத்து பெட்ரோலை ஊற்றியதும் யாகம் கொழுந்து விட்ட எரிய சௌந்தரபாண்டி தெறித்து ஓடுகிறார், அய்யர் எதிராளிக்கு கடவுள் அருள் அதிகம், அவனை ஒன்னும் பண்ண முடியாது என்று ஓடுகின்றனர். அதே போல் மறுபக்கம் ரவுடிகள் சண்முகத்தை குத்த சுற்றி வளைக்கின்றனர். இந்த நேரம் பார்த்து ட்ரைவர் சடர்ன் பிரேக் அடிக்க ரவுடிகள் பாய்ந்து போய் முன்னாடி விழுகின்றனர். 

பஸ்க்கு வெளியே முருகன் வேஷத்தில் 7 பேர் நின்று கொண்டிருக்க ஷண்முகம் ரவுடிகளை அடித்து துவைத்து துவம்சம் செய்கிறான். அடுத்து முத்துபாண்டிக்கு போனை போட்டு உன்னை அழிக்க நான் வரேன் டா என்று மரண பயத்தை காட்டுகிறான். தொடர்ந்து பரணியுடன் ஷண்முகம் ஸ்டேஷனுக்கு வருகிறான். 

பரணி இங்க எதுக்கு வந்த என்று கேட்க ஒரு முக்கியமான நபரை பார்க்க வந்ததாக சொல்கிறான். உள்ளே அழைத்து சென்று சூடாமணியை சந்திக்க வைத்ததும் பரணி அத்தையை கட்டிப்பிடித்து அழுகிறாள். சூடாமணி 20 வருடத்திற்கு முன்னாடி நடந்த கதையை சொல்ல தயாராகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | நடிகை லைலாவின் மகன்களை பார்த்து இருக்கிறீர்களா? வெளியான புகைப்படங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News