99.72% மார்க் எடுத்த பானி பூரி விற்பவரின் மகள்... வறுமையிலும் ஜொலித்த பூனம் குஷ்வாஹாவின் கதை!

National Latest News Updates: கடந்த 25 ஆண்டுகளாக வீதி வீதியாக பானி பூரி விற்பனை செய்து வருபவரின் மகள் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.72% மதிப்பெண் எடுத்திருப்பது பலருக்கும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : May 13, 2024, 05:19 PM IST
  • அவரின் மகளும் வீதி வீதியாக பானி பூரி விற்பனை செய்துள்ளார்.
  • வீட்டு வேலைகளிலும் அவரின் மகள் உதவியாக இருந்துள்ளார்.
  • பெற்றோருக்கு உதவும் நேரம் போக மிச்சம் இருக்கும் நேரத்தில்தான் படித்துள்ளார்.
99.72% மார்க் எடுத்த பானி பூரி விற்பவரின் மகள்... வறுமையிலும் ஜொலித்த பூனம் குஷ்வாஹாவின் கதை! title=

National Latest News Updates: மே மாதம் என்றாலே அது அனைவருக்கும் வெயில் சீசன். ஆனால் மாணவர்களுக்கு மட்டும் அது ரிசல்ட் சீசன். 1ஆம் வகுப்பில் இருந்து 8ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் கட்டாய தேர்ச்சி இருப்பதால் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் என்றாலே திக் திக் மனநிலைதான். அந்த வகையில், இன்று நாடு முழுவதும் சிபிஎஸ்இ பாடத்தில் படித்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகளும் இன்று வெளியாகின. 

இப்போதும் ரிசல்ட் வரும் முன்பே பல மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கும் அளவிற்கு தேர்வும், அதுசார்ந்த விஷயங்கள் அவர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இருந்தாலும் தேர்வு என்பது கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஒன்றாகதான் பார்க்க வேண்டும். அதன் ஒரு தொடக்கம்தான், கண்டிப்பாக முடிவில்லை. 

அந்த வகையில் பல மாணவர்களுக்கு இந்த பொதுத்தேர்வுகள் சிறந்த தொடக்கமாக அமைந்திருக்கிறது எனலாம். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த மதிப்பெண்கள் என்பது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு உதவிகரமாக இருக்கிறது. 

தமிழ்நாட்டில் இந்தாண்டு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தம் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவ, மாணவியர்கள் எழுதினர். 12ஆம் வகுப்பு தேர்வில் 94.56% பேர் தேர்ச்சி பெற்றனர். அதாவது, 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். இந்தாண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.55% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்தாண்டை விட தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பிலும், 10ஆம் வகுப்பிலும் தேர்ச்சி விகிதம் அதிமாகியுள்ளது. தனியார் பள்ளிகளை போன்ற பல அரசு பள்ளிகளும் சிறப்பான தேர்ச்சி விகிதத்தையே பெறுகின்றனர். 

மேலும் படிக்க | சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது; 87.98% தேர்ச்சி!

பூனம் குஷ்வாஹாவின் கதை

அந்த வகையில் குஜராத் மாநிலத்தின் பாடத்திட்டத்தில் படித்த 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த மே 11ஆம் தேதி வெளியாகின. அதில் பானி பூரி விற்பவர் ஒருவரின் மகள் 99.72 மதிப்பெண்களை எடுத்தது பலருக்கும் ஊக்கம் அளித்துள்ளார். அந்த மாணவி குறித்த தகவல்களையும் அவரின் குடும்பப் பின்னணி ஆகியவை குறித்தும் இதில் காணலாம். 

குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தைச் சேர்ந்த வர் பிரகாஷ் குஷ்வாஹா. இவர் வதோதராவில் கடந்த 25 வருடங்களாக வீதிகளில் பானி பூரி விற்று தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவரின் மகள்தான் பூனம் குஷ்வாஹா. பூனம் தனது தந்தையின் வேலைக்கு உதவுவதையும், வீட்டு வேலைகளில் தாயாருக்கு உதவுவதையும் வழக்கமாக வைத்திருந்தாலும் எந்த விதத்திலும் படிப்பில் மட்டும் சுணக்கம் காட்டாமல் அதிலும் அதிக கவனம் செலுத்தி உள்ளார். 

பூனம் அவளது தந்தையின் பானி பூரி வண்டியை வீதியாக வீதியாக பல இடங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதையும் வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். கூடுதல் வேலைகள் மற்றும் நிதி நெருக்கடி ஆகியவற்றை எதிர்கொண்ட பூனம், தனது மொத்த அர்ப்பணிப்பையும் அவரின் படிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, பெற்றொருக்கு அவர்களின் வேலைகளுக்கு உதவிசெய்து மிச்சம் இருக்கும் நேரங்களிலேயே படித்துள்ளார். 

ஊக்கமளிக்கும் விஷயம்

அவரின் கடின உழைப்பிற்குதான் மாபெரும் இந்த வெற்றி அவருக்கு கிடைத்திருக்கிறது. அவர் குஜராத் அரசு பாடத்திட்டத்தில் நடந்த 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 99.72% மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார். இது அவர்களின் பெற்றோர்களுக்கும் பூரிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பல மாணவ, மாணவியர்களுக்கு ஊக்கமளிக்கும் விஷயமாகவும் அமைந்துள்ளது. 

பூனத்திற்கு மருத்துவம் பயின்று மருத்துவராக வேண்டும் என்ற கனவு உள்ளது. அவரின் கடின உழைப்பிற்கு கிடைத்த இந்த அபாரமான தொடக்கம் கல்வியிலும், வாழ்க்கையிலும் அவரை பல உயர்ந்த இடங்களுக்கு அழைத்துச் செல்லும் எனலாம். 

மேலும் படிக்க | சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு, ரிசல்ட் சரிபார்ப்பது எப்படி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News